ரூ 24 லட்சம் நிதி- உசிலம்பட்டியில் தற்கொலை செய்த போலீஸ் குடும்பத்திற்கு சக காவலர்கள் உதவி!
மதுரை : உசிலம்பட்டி அருகே உயிரழந்த காவலரின் குடும்பத்திற்கு உதவிடும் வகையில், சக காவலர்கள் ஒன்றிணைந்து சுமார் 24 லட்சம் நிதியை வழங்கி ஆறுதல் தெரிவித்த சம்பவம் நெழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
பொதுமக்களின் நண்பன் என்பதை தாரக மந்திரமாக கொண்டு செயல்படும் காவல்துறையினர், உசிலம்பட்டியில் உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு உதவி செய்து, அதை நிரூபித்து காட்டியுள்ளனர்,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட கீழப்புதூரைச் சேர்ந்த சிவக்குமார் என்ற காவலர், கடந்த 2009ம் ஆண்டில், தமிழ் நாடு காவல் துறையில் சேர்ந்து, ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில், குற்றப்பிரிவு காவலராக பணியாற்றி வந்தார். கடந்த 31-ம் தேதி சிவக்குமார், தனது குடும்பத்துடன், உசிலம்பட்டிக்கு சென்று, கோவில் திருவிழாவில் கலந்துகொன்டு சென்னை திரும்பினார்.
சென்னை திரும்பியதும் அவரின் வீட்டில் உள்ள அறையில் உள்பக்கம் தாழிட்டுக்கொண்டு சிவக்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். திருமணமாகி ஆறு ஆண்டுகளில், இவர் உயிரிழந்த சம்பவம், அவரது குடும்பத்தினரை மட்டுமின்றி, சக காவலர்களையும் அதிர்ச்சியடைய செய்தது.
இளம் வயதில் கணவனை இழந்த பெண், தந்தையை இழந்த ஆறு மாத பெண் கைக்குழந்தை, 5 வயதில் ஒரு மகன் என அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினரை தங்கள் குடும்பத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டது போன்று அவர்களுக்கு உதவிட காவலர்கள் முடிவு செய்தனர். இதற்காக தமிழ்நாடு முழுவதுமாக தங்களுடன் பணியில் சேர்ந்த 2009ஆம் ஆண்டு பிரிவு காவலர்கள் ஒருங்கிணைந்து, ஒருவருக்கொருவர் 500 முதல் 5000 வரை தங்களால் இயன்ற உதவிகளை செய்து, அதன் மூலம் சுமார் 24 லட்சம் ரூபாயை காவலர்கள் திரட்டினர்.

இந்நிலையில் உயிரிழந்த காவலரின் மனைவி சங்கீதா மற்றும் சிவக்குமாரின் குழந்தைகள் பெயரில் நிரந்தர வைப்பு நிதி, மற்றும் அவரின் தாயாருக்கு நிதி என தனித்தனியாக குடும்பத்தினருக்கு, உசிலம்பட்டி அருகே தி.விலக்கில் உள்ள மண்டபத்தில் வைத்து வழங்கினர்.
முன்னதாக மறைந்த சிவக்குமாரின் திரு உருவ படத்திற்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தி, சிவக்குமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு எந்த கஷ்டத்திலும் உடனிருப்போம், கை கொடுப்போம் என காவலர்கள் உறுதியளித்த சம்பவம், அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications