இதுக்கு ஜல்லிக்கட்டு போட்டியையே நிறுத்திரலாமே சார்...! கொந்தளித்த பிரபல நடிகர்
மதுரை : 150 பார்வையாளர்களுடன் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு நடத்தாமல் இருக்கலாம் திரைப்பட நடிகரும் எழுத்தாளருமான வேல.ராமமூர்த்தி கூறியுள்ளார்
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 14-ஆம் தேதி நடைபெற உள்ளது இந்த நிலையில் மாவட்ட நிர்வாகமே ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதால் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது
மாடுகள் கொண்டுவரும் பாதை, ஜல்லிக்கட்டு விழா நடைபெறும் இடம், மேடை அமைக்கும் பகுதி மற்றும் வீரர்களுக்கு வருவதற்கான பாதை, ஜல்லிக்கட்டு காளைகள் வெளியேறும் இடம் அனைத்து இடங்களும் பாதுகாப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அவனியாபுரம் ஜல்லிகட்டு
விழா நடைபெறும் இடத்தை வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பார்வையிட்டு வருகின்றனர். காவல்துறை சார்பில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் பகுதிகளில் உள்ள வீடுகளில் வசிக்கும் நபர்கள் மட்டுமே போட்டியை பார்வையிட வேண்டும் வெளியூரில் இருந்து வருகைதரும் உறவினர்களை அனுமதிக்கக் கூடாது என்ற துண்டுபிரசுரம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

வேல.ராமமூர்த்தி பேட்டி
இந்நிலையில் தனக்கு வழங்கப்பட்ட துண்டு பிரசுரத்தை பெற்றுக்கொண்ட திரைப்பட நடிகரும் எழுத்தாளருமான வேல. ராமமூர்த்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்த ஆண்டு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதி அளித்துள்ளது எனவும், போட்டியை காண 150 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று எனவும், காரணம் ஜல்லிக்கட்டு போட்டி என்பது தமிழர்களின் கலாச்சார அடையாளத்தின் ஒன்றாக உள்ளது என்றார்.

தடை செய்யலாம்
பார்வையாளர்கள் இல்லாமல் போட்டியை நடத்துவதற்கு பதிலாக தமிழக அரசு ஜல்லிக்கட்டு போட்டியையே தடை செய்து இருக்கலாம் எனவும், வெறும் 150 பார்வையாளர்கள் என அறிவித்துள்ளார்கள். அதில் எந்த 150 பேரை ஜல்லிக்கட்டு போட்டியை காண அனுமதிக்கப் போகிறார்கள் என்பதில் பல்வேறு குழப்பம் நீடிக்கும் எனவும் வேல.ராமமூர்த்தி கூறியுள்ளார்.

போட்டியை நிறுத்தி விடலாம்
மேலும், ஜல்லிக்கட்டு போட்டியை காண ஆட்கள் இல்லாமல் காளை மாடுகளை அவிழ்த்துவிட மாட்டின் உரிமையாளர்களும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள் என கூறிய வேல ராமமூர்த்தி, எனவே தமிழக அரசு தமிழர்களின் அடையாளமாக ஜல்லிக்கட்டு போட்டி ஏற்கனவே உள்ள நடைமுறைகளின் படி நடத்த வேண்டும் எனவும், இல்லையென்றால் ஜல்லிக்கட்டு போட்டியை நிறுத்திவிடலாம் என தெரிவித்தார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications