மதுரை கோர்ட் பரபரப்பு தீர்ப்பு.. பிரபல வழக்கறிஞர் காமராஜ் கொலை வழக்கில்.. கல்பனாவுக்கு ஆயுள் தண்டனை
மதுரை: சென்னையில் பிரபல வழக்கறிஞர் காமராஜ் கொலை வழக்கில் இனியும் காலம் தாமதம் செய்ய வேண்டாம், உரிய நேரத்தில் வழக்கை முடிக்க மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், இன்றைய தினம் அவ்வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.. அதன்படி, வழக்கறிஞர் காமராஜ் கொலை வழக்கில் கல்பனா என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்துள்ளது.
பிரபல வழக்கறிஞர் காமராஜ்.. இவர் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலையின் மருமகன் ஆவார்.. சமீபத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் ஆம்ஸ்டராங்கும், காமராஜரும் மிக நெருங்கிய நண்பர்கள் ஆவார்.

ஓட்டேரி: கடந்த 2014ம் வருடம், சென்னை ஓட்டேரியில் அடுக்குமாடி குடியிருப்பில், காமராஜ் பலரால் சேர்ந்து வெட்டி கொல்லப்பட்டார்.. இந்த சம்பவம் குறித்து சென்னை கொரட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கல்பனா, கார்த்திக், ஆனந்த் உள்ளிட்டோர் பலர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கு விசாரணையும், திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கு விசாரணையை வேறு மாவட்டத்திற்கு மாற்ற வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனடிப்படையில், மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை கடந்த 2015 ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.
வழக்கு விசாரணை: இந்த வழக்கை விரைந்து விசாரணை நடத்தி உரிய தீர்ப்பு வழங்க வேண்டும் என்று கடந்த கடந்த 2021ம் வருடம் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரணை செய்த மதுரை ஹைகோர்ட், 3 மாதங்களில் விசாரணை நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது..
எனினும், 9 வருடங்களுக்கு மேலாக விசாரணை நடந்து வருவதால், வழக்கை விரைந்து முடிக்க உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் காமராஜின் சகோதரி மேரி தேன்மொழி மீண்டும் மதுரை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி கே கே ராமகிருஷ்ணன் முன்பு விசாரணைக்கு வந்தது.
விசாரணை முடிவு: மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 2014ல் நடந்த சம்பவம் 2015ம் ஆண்டு சுப்ரீம்கோர்ட் உத்தரவின்படி மதுரை மாவட்ட அமர்வு விசாரணைக்கு மாற்றப்பட்டது.. 2021ம் ஆண்டு இந்த வழக்கை மூன்று மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என நீதிமன்ற உத்தரவு பிறப்பித்தனர். இரண்டு முறை கால அவகாசம் வாங்கப்பட்டது. ஆனால் உத்தரவு வந்து 3 வருடங்களாகியும் இதுவரை விசாரணை முடியவில்லை. எனவே விரைந்து விசாரணை நடத்தி உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என்று வாதிட்டார்.
இதனை தொடர்ந்து நீதிபதி, இந்த வழக்கை இவ்வளவு நாள் காலதாமதம் செய்ய என்ன காரணம் என்பது குறித்து மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இன்று தீர்ப்பு: இந்த மனு 2 நாட்களுக்கு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மதுரை மாவட்ட முதன்மை நீதிபதி தரப்பில் விளக்கம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், வழக்கறிஞர் காமராஜ் கொலை வழக்கின் விசாரணை முழுமையாக முடிந்துவிட்டது. வரும் நவம்பர் 19ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது என கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து நீதிபதி, இனியும் காலதாமதம் செய்ய வேண்டாம். உரிய நேரத்தில் வழக்கின் விசாரணையை முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார். அதன்படியே, இன்றைய தினம் வழக்கறிஞர் காமராஜ் கொலை வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது..
இதனடிப்படையில், இன்று மேற்கண்ட வழக்கில் இன்று மதுரை மாவட்ட முதன்மை நீதிபதி சிவகடாட்சம் தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில், வழக்கறிஞர் காமராஜ் கொலை வழக்கில் கல்பனா என்பவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்பனாவை தவிர மற்றவர்களை மதுரை நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியது.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications