AM..PM..CMஆ.. வடிவேலு இல்லாத குறையை அமைச்சர்கள் தான் போக்குறாங்க! சொல்கிறார் செல்லூர் ராஜு!

Subscribe to Oneindia Tamil

மதுரை : நிமிடத்திற்கு நிமிடம் உழைக்கிறேன் என ஜோக் செய்து வடிவேலு இல்லாத குறையை முதல்வரும், அமைச்சர்களும் போக்கி வருகின்றனர் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருக்கிறார்.

மதுரை பைகாரா மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் செல்லூர் ராஜூவின் மகன் ஆர்.ஜெ தமிழ்மணி சாரிடபிள் டிரஸ்ட் சார்பில் இலவச மருத்துவ முகாமை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ குடும்பத்தினருடன் இணைந்து துவங்கி வைத்தார்.

இதில் கண்,பல், பொது மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது, தேவைப்படுவோருக்கு மூக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டன. இதில் 100க்கு மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டு உடல் பரிசோதனை செய்தனர்.

செல்லூர் ராஜு

செல்லூர் ராஜு

பின் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ," சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வால் சிறு குறு தொழில் செய்பவர்கள் கடும் பாதிப்பை சந்தித்து உள்ளனர். வேறு தொழில் செய்யலாமா இல்லை தொழிலை விட்டுச் செல்லலாம் என்ற நிலைக்குச் சென்று உள்ளனர். மின் கட்டண உயர்வு குறித்த கருத்து கேட்பு கூட்டம் ஏன் வைத்தனர். மக்கள் ஆதரிக்காத போதும் மின்கட்டண உயர்வு நேற்றிலிருந்து அமலுக்கு வந்துள்ளது பிறகேதற்கு கருத்து கேட்பு கூட்டம் நடத்தினீர்கள். வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் மீது மேலும் சுமையை இந்த அரசு ஏற்றி உள்ளது.

திராவிட மாடலா?

திராவிட மாடலா?

மக்கள் மீது மாதா மாதம் வரி சுமத்துவதுதான் திராவிட மாடலா? திமுக பொறுப்பேற்றதிலிருந்து

தமிழகத்தில் உள்ள எந்த குடும்பமும் மகிழ்ச்சியாக இல்லை. முதல்வர் குடும்பம், அமைச்சர்கள் குடும்பம் மட்டுமே மகிழ்ச்சியில் உள்ளனர். தற்போதைய முதல்வரின் தந்தை முன்னாள் முதல்வராக இருந்தவர், கட்சித் தலைவராக இருந்தவர், ஆனால் எடப்பாடி பழனிச்சாமி உழைப்பால் வந்தவர், படிப்படியாக படர்ந்து முதல்வரானவர், அப்பா பின் வந்தவர் இல்லை. தொண்டர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட இடைக்கால பொதுச் செயலாளரா வருங்காலத்தில் பொதுச் செயலாளராக ஆக உள்ளார்.

கோபத்தில் மக்கள்

கோபத்தில் மக்கள்

முதல்வர் உங்களின் இதயத்தைத் தொட்டுச் சொல்லுங்கள் அவர் தகுதி படைத்தவரா இல்லையா என சொல்லுங்கள். பொய் வாக்குறுதி கொடுத்து நிறைவேற்றததால் தமிழக மக்கள் முதல்வர் மீதுமட்டுமல்ல அல்ல அவரின் குடும்பம் மீது கோபத்தில் இருக்கின்றனர். தமிழகத்தின் 50 ஆண்டு கால திராவிட இயக்க ஆட்சியில் 32 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த இயக்கம், 100 ஆண்டுகள் கடந்தும் இயக்கம் இருக்க வேண்டுமென ஜெயலலிதா(அம்மா) சூழுரைத்தார், அதை எடப்பாடிப் பழனிசாமி செய்து முடிப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது. மீண்டும் அதிமுக தலைமையில் ஆட்சி தமிழகத்தில் அமையும்.

அதே கேள்வியே கேட்பீர்களா?

அதே கேள்வியே கேட்பீர்களா?

ஓ.பி.எஸ்.ன் சுற்றுப்பயணம் குறித்த கேள்விக்கு கேட்க கோபமடைந்த செல்லூர் ராஜூ

தேவையில்லாமல் கேட்கிறீர்கள், சும்மா திரும்பப் திரும்ப அதே கேள்வியே கேட்பீர்களா? அதிமுக பற்றி கேட்பீர்கள் என்றால் பேட்டியே நான் கொடுக்கத் தேவையில்லை தலைவர்களே கொடுப்பார்கள். பின் ராகுல் காந்தி குறித்த கேள்வியை செய்தியாளர்கள் எழுப்ப குஷியான செல்லூர் ராஜூ, இப்படிக் கேள்வி கேளுங்கப்பா... என கூறினார். ராகுல் காந்தி ஓர் இளம் தலைவர் அவரின் அரசியல் பயணத்தில் தேச ஒற்றுமை நடைபயணம் காங்கிரஸ் கட்சிக்கு நல்லதாக அமையுமா எனத் தெரியவில்லை ராகுல் காந்திக்கு நல்லபடியாக அமையும்.

நிமிடத்திற்கு நிமிடம்

நிமிடத்திற்கு நிமிடம்

முதல்வர் நிமிடத்திற்கு நிமிடம் உழைக்கிறேன் என கூறுகிறார் என்ற கேள்விக்கு முதல்வர் ஜோக் செய்கிறார் அதற்கு சிரிக்கத் தான் செய்ய வேண்டும். நிமிடத்திற்கு நிமிடம் போட்டோக்கு போஸ் குடுக்கிறார் டிவியில் வருகிறார் நிமிடத்திற்கு நிமிடம் உழைக்கிறேன் என்கிறார் வடிவேலு இல்லாத குறையை தமிழக அமைச்சர்களும், முதல்வரும் போக்குகிறார்கள். எதிர்கட்சித் தலைவராக இருந்த முதல்வருக்கு கஜானாவில் பணம் இருக்கிறதா இல்லையா என தெரியாமலா இருக்கும்." என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+