பாவப்பட்ட ஆண்களுக்கு இலவச பேருந்து.. அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ்? செல்லூர் ராஜூ சொன்ன விளக்கம்!
மதுரை: ஆண்களில் பாவப்பட்ட மக்கள் உள்ளனர். அதனால் தான் ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணம் அறிவிக்கப்பட்டுள்ளது எனவும், கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் தான் அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் மீண்டும் சேர்ப்பதற்கு பாஜக முயற்சி எடுக்கிறது, ஓபிஎஸ்-ஐ கூட்டணியில் சேர்ப்பது குறித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முடிவு எடுப்பார் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மதுரை மண்டல அலுவலகத்தில் கான்கிரீட் தளம் அமைக்க, அண்ணா தொழிற் சங்கப் பேரவையினர் விடுத்தக் கோரிக்கையின் அடிப்படையில் மேற்குத் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 20 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு, இன்று பூமி பூஜை போடப்பட்டது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய செல்லூர் ராஜூ," போக்குவரத்துப் பணிமனை நலன் கருதி இந்த தளம் அமைக்கப்பட உள்ளது. இதனால் மழைக் காலத்தில் பேருந்துகள் பணிமனைக்குள் இயக்க சிரமம் இருக்காது. சட்டமன்ற உறுப்பினர் கடமையை நிறைவேற்றும் வகையில் இந்த பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

செல்லூர் ராஜு பேச்சு
ஆண்களிலும் பாவப்பட்ட மக்கள் உள்ளனர். அதனால் ஆண்களுக்கும் பேருந்து பயணம் நகரப் பேருந்துகளில் இலவசமாகத் தரும் திட்டம் எங்களது தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டு உள்ளது. முத்தான 5 திட்டங்கள் எங்கள் தேர்தல் அறிக்கையில் முதற் கட்டமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே அறிவித்த கடந்த தேர்தலில் 1500 ரூபாய் அறிவித்திருந்தார். தற்போது 2000 ஆக தேர்தல் அறிக்கையில் உயர்த்தி இருக்கிறார். திராவிட கழகம் தான் காப்பி அடித்து தேர்தல் அறிக்கை வெளியிடுகிறார்கள்.
ஆண்களுக்கு இலவச பேருந்து பயணம்
ஆண்களுக்கும் நகர பேருந்தில் இலவசம் வயதானவர்கள். பாவப்பட்ட மக்கள் ஆண்கள் இருக்க மாட்டார்களா? வறுமை கோட்டு கிழ் உள்ளவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். எங்களுக்கு கூட்டணிப் பலம் குறைவாக உள்ளது என்பது தவறு. எடப்பாடியாரும் எம்.ஜி.ஆர் மாதிரி. அதிக தொகுதிகளில் அதிமுக வெற்றிப் பெறும். தமிழகத்தின் பெரிய கட்சி அதிமுக. கூட்டணிப் பலத்தை மக்கள் பார்க்க மாட்டார்கள். கூட்டணி பலம் அதிமுகவிற்கு குறைவே கிடையாது. தவறாக எடை போடுகிறார்கள்.
அதிமுக பாஜக கூட்டணி
அதிமுகவினர்க்கு செல்லும் இடங்களில் எல்லாம் ஏகோபித்த வரவேற்பு உள்ளது. திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆங்காங்கு பரிசுப் பொருட்களை அளித்து, மக்கள் கொதிப்பை சரி செய்யப் பார்த்திறார்கள். திமுக அரசு எந்த சாதனையையும் படைக்கவில்லை. கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் தான் அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் மீண்டும் சேர்ப்பதற்கு பாஜக முயற்சி எடுக்கிறது. அதிமுக கூட்டணி பலமானது குறைபாடு.. இல்லை. இந்திரா காந்தி பிரதமர் கலைஞர் முதல்வர் கூட்டணி வெற்றி பெற முடியவில்லை!
ஓபிஎஸ் அதிமுக
கூட்டணி பலம் முக்கியம் இல்லை.. கடந்த ஆட்சி நிலைப்பாடு முக்கியம். ஓபிஎஸ் கட்சியில் சேர்ப்பதை குறித்து பொதுச் செயலாளர் எடப்பாடி முடிவெடுப்பார். பாஜகவை கூட்டணியில் சேர்ப்பது கூட்டணித் தர்மம். அமைச்சர் மூர்த்தி, எத்தனை குழுக்களை நியமித்து மேற்குத் தொகுதியில் கட்சிப் பணி ஆற்றினாலும், நான் நம்பி இருக்கும் மேற்குத் தொகுதி மக்கள் நான்காவது தடவையாக ஜெயிக்க வைப்பார்கள். OPS கூட்டணிக்குள் வருவாரா? என்பது எங்களது பொதுச் செயலாளர் தான் முடிவு எடுப்பார்:" என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
-
சினிமா துறைக்கு ரெட் கார்பெட்.. அதிமுக மாஜிக்களுடன் நோ சந்திப்பு.. விஜய்யின் செயலால் அப்செட்! -
"முதல்வர் அண்ணன் எடப்பாடியார்.." பழக்க தோஷத்தில் “டங்க் ஸ்லிப்” ஆகி பின் சுதாரித்த மரகதம் குமரவேல்! -
தண்ணீர் பாட்டில் வீசுனாங்க.. ஆனால் இன்னைக்கு! ஓபிஎஸ் சொன்னதுமே ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன் -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
“அதிமுக எனும் கப்பல் மூழ்காது.. விஜய் மூழ்க விடமாட்டார்”.. ஆதவ் அர்ஜுனா பேச்சு! -
எடப்பாடி பழனிசாமிக்கு ஷாக்.. விஜயபாஸ்கரை தொடர்ந்து அதிமுகவில் இருந்து விலகிய ஆர்.வி.உதயகுமார் -
நீ வேணா சண்டைக்கு வா.. எடப்பாடியிடம் விடாமல் ஒரண்டை இழுக்கும் சி.விஜயபாஸ்கர்! ஓ.. இதுதான் ப்ளானா? -
சின்ன புரட்சித் தமிழர்..அதிமுகவில் என்ட்ரி கொடுக்கும் எடப்பாடி மகன்? மிதுனால் மிரளும் அதிமுக தலைகள்? -
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைகிறாரா செல்லூர் ராஜு? பேச்சே கிடையாது.. விரலிலேயே சிக்னல்! -
பாமக போட்ட பிச்சை.. அதிமுகவைக் காப்பாற்றிய அன்புமணி! போட்டுத் தாக்கிய சிவி சண்முகம்! உண்மை என்ன? -
4 தொகுதிகள் இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தடை கோரி வழக்கு.. ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்! -
கலக்கத்தில் கரூர்.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்? அவரே சொன்ன விளக்கம்! குஷியான அண்ணனின் விழுதுகள்!












Click it and Unblock the Notifications