அந்த பெண் பிறழ் சாட்சி கொடுத்தும்.. யுவராஜுக்கு தண்டனை வழங்கப்பட்டது எப்படி? வழக்கறிஞரின் பாயிண்ட்!
மதுரை: கோகுல்ராஜ் கொலை வழக்கில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையைச் சேர்ந்த யுவராஜ் மற்றும் பலர் மீதான தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.
2015 கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் முதல் குற்றவாளியான யுவராஜுக்கு 3 ஆயுள் தண்டனை அதாவது சாகும் வரை சிறையில் இருக்க வேண்டும் என மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருந்தது. இதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் யுவராஜ் தரப்பு தொடுத்த வழக்கில்தான் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
கொலை: சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்தவர் கோகுல். கல்லூரி படித்து வந்த இவர் நாமக்கல் மாவட்டத்தில் இருந்த மாணவி ஒருவரை காதலித்து வந்தார்.இந்த நிலையில் 2015ம் ஆண்டு இவர் தொட்டி பாளையம் அருகே இருக்கும் ரயில் தண்டவாளம் ஒன்றில் கொல்லப்பட்டு கிடந்தார். இந்த மரணம் தமிழ்நாட்டையே உலுக்கியது.

இந்த கொலையில் யுவராஜுக்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகித்த போலீசார் பல்வேறு ஆவணங்களின் அடிப்படையிலும், சிசிடிவி ஆதாரங்களின் அடிப்படையிலும் இவரை கைது செய்தனர். சங்ககிரி தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் நிறுவனர்தான் யுவராஜ். இவரை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். நாமக்கல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது.
அதன்பின் இந்த வழக்கில் மேலும் 17 பேர் கைது செய்யப்பட்டனர். யுவராஜின் ஓட்டுனரும் கைது செய்யப்பட்டார். யுவராஜ் கைது செய்யப்பட கடும் கால தாமதம் ஏற்பட்டது. ஆடியோ மெசேஜ்களை அளித்து போலீசுக்கே இவர் மிரட்டல் விடுத்து வந்தார்.
இவர் கடைசியில் திருவிழா போல மக்களை கூட்டிக்கொண்டு போலீசில் சரண் அடைய சென்றார். சரண் அடைய செல்லும் வழியில் இவர் கைதும் செய்யப்பட்டார். இவரை வரவேற்பது போல கூட்டம் கூட்டமாக மக்கள் பலரும் நின்றது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
பின்னர் இந்த வழக்கு மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு அங்கு விசாரிக்கப்பட்டது. ஒன்றரை வருடத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் கூறிய நிலையில் 2 ஆண்டுகள் இந்த வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
வழக்கு பின்னணி: இந்த வழக்கில் கோகுல்ராஜ் காதலித்து (இதில் சில குழப்பங்கள் உள்ளன) வந்த பெண் உட்பட பலரும் பிறழ் சாட்சியங்களாக மாறிய பின்பும் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் வழக்கு விசாரணை செய்யப்பட்டது.

இந்த ஆதாரத்தை வைத்தும், யுவராஜ் தொலைக்காட்சிகளில் கொடுத்த பேட்டியை வைத்தும் வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் கடந்த வருடம் மார்ச் 5ம் தேதி யுவராஜ் மற்றும் 9 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அவரது அருண் (கார் ஓட்டுனர்) சகோதரர்கள் குமார், சதிஷ் ஆகியோரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் மார்ச் 8ம் தேதி காலை தண்டனை விவரங்கள் வெளியானது.
ஆயுள் தண்டனை: அதில் கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் முதல் குற்றவாளியான யுவராஜுக்கு 3 ஆயுள் தண்டனை அதாவது சாகும் வரை சிறையில் இருக்க வேண்டும் என மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் நீதிபதி சம்பத் குமார் தீர்ப்பு வழங்கினார். இரண்டாவது குற்றவாளி அருணுக்கு 3 ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பிரபு, கிரிதர் உள்ளிட்டோருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 5 ஆண்டு கூடுதல் கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது.
சந்திரசேகர்: கொலை, ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் இவர்கள் மீது வழக்கு பதியப்பட்டது. சதீஷ், ரகு, ரஞ்சித், செல்வராஜ், குமார் ஆகியோருக்கு இரண்டு ஆயுள் வழங்கப்பட்டது. சந்திரசேகரனுக்கு 1 ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 10 குற்றவாளிகளும் சாகும் வரை சிறையில் இருக்க வேண்டும்; தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்பதுதான் தீர்ப்பு.
உறுதி செய்யப்பட்டது: இதை எதிர்த்து யுவராஜ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. கோகுல்ராஜ் கொலை வழக்கில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையைச் சேர்ந்த யுவராஜ் மற்றும் 10 மீதான தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. மற்றும் 5 பேர் விடுதலையை எதிர்த்து கோகுலராஜ் தாயார் தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்துள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக கோகுல்ராஜ் தரப்பு வழக்கறிஞர் மோகன் அளித்த பேட்டியில், இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் சண்முக சுந்தரம் சார்பாக மருத்துவ நிபுணர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்று கூறினார். அதுதான் வழக்கை மாற்றியது. தற்கொலையாக இருக்கலாம் என்று போலீசார் முதலில் கூறி இருந்தனர்.
அதன்பின் மருத்துவ நிபுணர் குழு விசாரணைதான் இது தற்கொலை அல்ல கொடூர கொலை என்று தெரிய வந்தது. இதுதான் வழக்கை மாற்றியது. யுவராஜ் உள்ளிட்டோர் கைபேசியை கொலை நடந்த நேரத்தில் அணைத்து வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. யுவராஜ் மற்றும் அவரது ஆட்கள் சிசிடிவி கேமராவில் சிக்கியது ஆதாரப்பூர்வமான காட்சிகள் உள்ளன.
சாட்சிகள் பிறழாக மாறினாலும் கூட சிசிடிவி உள்ளிட்ட சூழ்நிலை சாட்சியங்கள் யுவராஜுக்கு எதிராக திரும்பியது. பின்னர் ஊடகம் ஒன்றில் யுவராஜ் பேசுகையில்.. யுவராஜ் மலைக்கு சென்றதையும்.. கோகுலராஜ் செல்போனை பிடுங்கியதையும் ஒப்புக்கொண்டுள்ளார். அதுதான் வழக்கில் மேலும் திருப்பத்தை ஏற்படுத்தியது.
பாதிக்கப்பட்டவர் தலித், குற்றஞ்சாட்டப்பட்டவர் தலித் அல்லாதவர் போன்ற காரணங்கள் சட்ட ரீதியாக இது ஆணவ கொலை என்பதை காட்டுகிறது. கோகுலராஜ் தாழ்த்தப்பட்டவர், யுவராஜ் உள்ளிட்டோர் ஆதிக்க சாதியினர் என்பது உறுதியாகி உள்ளது. சிசிடிவி, யுவராஜ் பேட்டி, ஜாதி வேறுபாடு ஆகியவற்றை நிரூபித்து உள்ளோம். இதனால் நேரில் பார்த்த சாட்சியம் இல்லாமலே, பிறழ் சாட்சியங்கள் இருந்தும் கூட யுவராஜுக்கு தண்டனை பெற்றுக்கொடுத்து உள்ளோம் என்று, வழக்கறிஞர் மோகன் கூறியுள்ளார்.
-
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications