மக்களைக் கேட்காமல் கிராமத்தில் மதுக்கடைகளை திறக்கக்கூடாது.. மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு
மதுரை : மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அடுத்த கல்லூத்து கிராமத்தில் மக்களைக் கேட்காமல் மதுக்கடை திறக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
சட்டவிரோதமாக போலி மதுபானம் விற்பதை தடுக்க டாஸ்மாக் கடை திறப்பதாக சொல்லும் அரசு கஞ்சா விற்கப்படுகிறது என்பதற்காக அதையும் சட்ட ரீதியாக விற்பீர்களா என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கல்லூத்துப்பட்டியில் புதிய டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்த வழக்கு விசாரணையை டிசம்பர் 20ம் தேதி ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அடுத்த கல்லூத்து கிராமத்தில் புதிய டாஸ்மாக் கடை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இது குடியிருப்புகளுக்கு மத்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் உசிலம்பட்டியை சேர்ந்த கலாவதி என்பவர் ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேலுமணி அமர்வு முன்பு நடைபெற்றது.
இதில் தன் தரப்பில் வாதாடிய கலாவதி, ஏற்கனவே குறிப்பிட்ட தூரத்தில் மதுக்கடை இருப்பதாகவும், புதிதாக அமையவுள்ள மதுக்கரை குடியிருப்புப் பகுதிக்கு அருகில் வருவதால் பெண்கள், மாணவர்களுக்கு தொந்தரவாக இருக்கும் என குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவுக்கு பதில் அளிக்கும் வகையில் அரசு தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் கல்லூத்து கிராமத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாகவும், போலி மதுபானம் விற்கப்படுகிறது எனவும் குறிப்பிட்டார். மேலும் இது போன்ற அசம்பாவிதங்களை தவிர்க்கவே அங்கு டாஸ்மாக் சார்பில் மதுபானக் கடை திறக்கப்படுவதாக தெரிவித்தார்.
அரசு தரப்பின் இந்த பதிலைக் கேட்டு அதிருப்தி அடைந்த நீதிபதி ஒரு கிராமத்தில் கஞ்சா விற்கப்படுகிறது என தெரியவந்தால் அதை சட்ட ரீதியாக விற்பதற்கு நடவடிக்கை எடுப்பீர்களா? என கேள்வி எழுப்பினார். கல்லூத்து கிராமத்தில் மக்களின் கருத்துக்களை முழுமையாக கேட்டபிறகே டாஸ்மாக் கடை அமைக்கலாமா வேண்டாமா என முடிவு செய்யவேண்டும் என தெரிவித்த நீதிபதிகள் இது தொடர்பான அறிக்கையை டிசம்பர் 20ம் தேதி தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர். இதுமட்டுமின்றி தமிழகத்தில் மதுக்கடைகள் இல்லையென்றால் எல்லையில் உள்ள அண்டை மாநிலங்களுக்கு செல்வது வாடிக்கையான ஒன்றாக இருக்கிறது எனவும் நீதிபதிகள் விமர்சனம் செய்தனர்.
-
பாட்டிலுக்கு 10 ரூபா 'இனி இல்லை'.. விஜய் அதிரடி ஆக்ஷன்.. டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட்! -
டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் தனியார்மயமாகிறது? விஜய்யின் மாஸ்டர்பிளான்! கோட்டையில் பரபரப்பு! -
நாம ஜெயிச்சுட்டோம் மாறா.. கன்னியாகுமரியில் விடிய விடிய போராடி டாஸ்மாக் கடையை மூட வைத்த மக்கள் -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications