விடிய விடிய கொட்டிய கனமழை.. மதுரையில் வீடு இடிந்து விபத்து.. ஈரோட்டில் வீட்டிற்குள் புகுந்த வெள்ளம்
மதுரை: விடிய விடிய விடாமல் கொட்டித்தீர்த்த கனமழையால் மதுரையில் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. நள்ளிரவில் இரண்டு மாடி கட்டிடம் இடிந்து சேதமானது. ஈரோடு மாவட்டத்தில் கனமழையால் ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் கனமழையால் ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. வீடுகளுக்குள் தண்ணீப் புகுந்ததால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் நேற்று முன் தினம் பல்வேறு பகுதிகளில் மழை பெய்த நிலையில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்று சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. அன்று மாலை முதல் இரவு வரை சேலம் மாநகர பகுதிகளில் கனமழை பெய்தது. மேலும், ஆத்தூர், ராமநாயக்கன் பாளையம், அய்யங்கரடு, காமராஜ் நகர், கல்பகனூர், கொத்தாம் பாடி, கல்வராயன் மலைப் பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விடிய விடிய கனமழை பெய்தது.

ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. நேற்று காலை சாரல் மழையுடன் மூடு பனி ஏற்பட்ட நிலையில், சாலைகளில் வாகனங்கள் செல்வதை தெரிந்து கொள்ள முடியாத அளவுக்கு மேக கூட்டம் முற்றுகையிட்டு இருந்தது. மழை மற்றும் மூடுபனியால் காப்பி அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை ஒளிரூட்டியபடி நகர்ந்து சென்றன. மூடு பனியால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிப்படைந்தது.
ஈரோடு மாவட்டத்தில் சாரலாகத் தொடங்கிய மழை, இரவில் கனமழையாக மாறி, பல்வேறு பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஈரோடு நகர் பகுதியில் தாழ்வான பகுதிகள் மற்றும் சாலையில் வெள்ளம் தேங்கியது. பல குடியிருப்புகளுக்குள் வெள்ளநீர் சூழ்ந்தது. தாளவாடி பகுதியில் பெய்த கனமழையால் வனப்பகுதியில் உள்ள ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
பவானி, சத்தியமங்கலம், மொடக் குறிச்சி, குண்டேரிப் பள்ளம், கொடி வேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு முழுவதும் கனமழை தொடர்ந்தது. மழை காரணமாக சில இடங்களில் மின் தடை ஏற்பட்டது. மாவட்டத்தில் அதிகபட்சமாக எலந்தகுட்டை மேடு பகுதியில் 88 மிமீ மழை பதிவானது. கொடிவேரி அணையில் இருந்து 2,000 கன அடிக்கு மேல் உபரிநீர் வெளியேறியதால் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.
கோபியை அடுத்த நம்பியூர் - அரசூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தரைப்பாலம் மழை வெள்ள நீரில் மூழ்கியதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர் மழையால் கோபி கீரிப்பள்ளம் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மாவட்டம் முழுவதும் பரவலாக லேசான தூறலுடன் தொடங்கிய மழை விடிய விடியக் கனமழையாக கொட்டித் தீர்த்தது. இதனால், நாமக்கல் நகரின் தாழ்வான சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால், பல இடங்களில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மதுரை மாவட்டத்தில் நேற்று மாலை தொடங்கி இன்று காலை வரை விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. நள்ளிரவு நேரத்தில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. காக்கா தோப்பு பகுதியில் இருந்த வீடு இடிந்து சேதமானது. மதுரையின் புறநகர் பகுதிகளான திருப்பரங்குன்றம், திருமங்கலம், டி.குண்ணத்தூர், கல்லுப்பட்டி, பேரையூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழையால் ஆங்காங்கே வெள்ளநீர் தேங்கியுள்ளது. மழை காரணமாக நடைபாதை வியாபாரிகள் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் 124 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடனாநதி அணை நீர்மட்டம் நேற்று 2 அடியும், ராமநதி அணை, கருப்பாநதி அணை நீர்மட்டம் தலா 3 அடியும் உயர்ந்தது. குற்றாலம் பிரதான அருவி, பழைய குற்றாலம் அருவியில் நேற்று இரண்டாவது நாளாக வெள்ளப் பெருக்கு நீடித்தது. இதனால் இந்த அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்படவில்லை. ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் அங்கு குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.
குற்றாலம் அருகே காசிமேஜர்புரம் கிராமத்தில் உள்ள கீழபாட்டை தாமரை குளம் பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 50 ஏக்கர் நெற் பயிர்கள் பலத்த மழையில் சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். வேளாண், வருவாய்த் துறை அதிகாரிகள் விவசாய நிலங்களை பார்வையிட்டு, உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 34 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. அம்பா சமுத்திரம் - 26, சேரன் மகாதேவி - 2.60, மணி முத்தாறு - 9, நாங்கு நேரி - 2.60, ராதாபுரம் - 10, திருநெல்வேலி - 10.20, கன்னடியன் அணைக்கட்டு - 20.80, களக்காடு- 7.60, மூலைக்கரைப்பட்டி - 25, நாலுமுக்கு - 9, ஊத்து பகுதியில் 7 மி.மீ மழை பதிவானது.
பாப நாசம் அணைக்கு விநாடிக்கு 728 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 404 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. அணை நீர்மட்டம் 88.95 அடியாக இருந்தது. மணி முத்தாறு அணைக்கு விநாடிக்கு 230 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது அணையிலிருந்து 10 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. அணை நீர்மட்டம் 59.95 அடியாக இருந்தது.
தென் இந்தியப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 2. கேரள கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், திருப்பூர், கரூர், தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
இந்நிலையில் மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. தென்கிழக்கு அரபிக் கடல் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதியில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.ராயலசீமா மற்றும் கடலோர கர்நாடகா பகுதியில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
-
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
கோடைக்கு நடுவே கொட்டும் குளுகுளு மழை.. இந்த மாவட்டங்களில் ஜில் கிளைமேட் தான்.. வானிலை மையம் அலர்ட் -
கோவை, நீலகிரிக்கு பறந்த அலர்ட்.. கொட்டப்போகும் மழை! வானிலை மையம் கொடுத்த அப்டேட்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications