மதுரையில் கொட்டித்தீர்த்த கனமழை..மாட்டுத்தாவணி அருகே குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்..மக்கள் தவிப்பு
மதுரை: மதுரையில் பெய்த கனமழை காரணமாக மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. நீர்வழிப்பாதையை ஆக்கிரமிப்பு தனியார் ஒருவர் ஆக்கிரமிப்பபு செய்ததன் காரணமாகவே வெள்ள நீர் தேங்கியதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மதுரையில் கடந்த 2 நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. மையப் பகுதிகளான மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தெற்குவாசல், தெப்பக்குளம், மாட்டுத்தாவணி, கே.கே.நகர், அண்ணாநகர், தமுக்கம், கோரிப்பாளையம், பெரியார் பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.

மாட்டுத்தாவணி பேருந்து நிறுத்தத்தில் திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் பரமக்குடி பேருந்துகள் நிறுத்துமிடத்தில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கி உள்ளது. இதனால் பயணிகள் நடந்து செல்ல முடியாமல் அவதி அடைந்தனர். மாட்டுத்தாவணியில் செல்ல மழை நீர் வடிகால்களை சீர் செய்ய பயணிகள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.
மதுரையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மழைநீர் சூழ்ந்து இருப்பதால், அங்கு வரும் பொதுமக்கள் அவதி அடைந்து உள்ளனர். மதுரை மாவட்டத்தில் நேற்றிரவு கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், ஆங்காங்கே மழை நீர் தேங்கி உள்ளது. மாவட்ட ஆட்சியர் வளாகத்திலும் மழைநீர் தேங்கி இருக்கும் நிலையில், குறைதீர் முகாமுக்கு வந்த பொதுமக்கள் மழைநீரில் நடந்து வந்தனர்.
தெப்பக்குளம் நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அனுப்பானடி சாலை உள்ளிட்ட இடங்களில் மழை நீர் தேங்கி நின்றதால் பள்ளிக்கு செல்வோர்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர், மாநகராட்சி ஊழியர்கள் தாமதமாக வந்து மழை நீரை அகற்றினர்.
குறிப்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேங்கி நிற்கும் மழை நீர் குளம் போல் காட்சியளிக்கின்றது. ஆட்சியர் அலுவலகத்தில் தொடர்ச்சியாக மழை நீர் தேங்கி நிற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளதால், குறைதீர் கூட்டத்திற்கு வருகை தரும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும் என்றும் மழை நீர் தேங்கி நிற்காத அளவிற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
இதனிடையே கனமழையால் மாட்டுத்தாவணியை அடுத்த உத்தங்குடி அருகே குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. முழங்கால் அளவிற்கு பெருகியுள்ள தண்ணீரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தனியார் ஒருவர் ஆக்கிரமிப்பு காரணமாகவே குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். வெள்ளநீரை அகற்ற மதுரை மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாகும்.
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications