சூறாவளிக்காற்றுடன் பெய்த பேய்மழை... முறிந்த மரங்கள் மின்தடையால் குண்ணத்தூர் மக்கள் தவிப்பு
மதுரை மாவட்டம் டி.குண்ணத்தூரில் சூறைக்காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழையால் மரங்கள் முறிந்து விழுந்தன.
மதுரை: டி.குண்ணத்தூரில் சூறாவளிக்காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழையால் சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. மின்கம்பங்கள் சாய்ந்து வயர்கள் அறுந்து விழுந்துள்ளதால் பல மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
Recommended Video
தமிழகம் முழுவதும் நேற்று பகல் நேரத்தில் வெயில் சுட்டெரித்த நிலையில் மதுரை மாவட்டம் டி. குண்ணத்தூரில் மாலை நேரத்தில் லேசான சாரல் மழை பெய்தது. நேரம் செல்லச்செல்ல மழையின் வேகம் அதிகரித்தது.
திடீரென சூறாவளிக்காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழை கொட்டியது. கடந்த சில நாட்களாக 100 டிகிரி பாரன்ஹீட்டிற்கு மேல் வெயில் அடித்த நிலையில் நேற்று திடீரென மழை பெய்தது.

சூறாவளி காற்றுடன் கனமழை
காற்று பலமாக வீசத் தொடங்கியதால் மரங்கள் பேயாட்டம் போட்டன. இதில் சாலை ஓரங்களில் இருந்த 100 ஆண்டுகளுக்கு மேலான மரங்கள் வேறோடு பிடிங்கி வீசப்பட்டன. காற்றுடன் பெய்த கனமழையால் நேற்று மாலை மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

ஆலங்கட்டி மழை
திடீரென வீடுகளின் மீது கற்களை வீசியதைப்போல ஆலங்கட்டிகள் விழ ஆரம்பித்தன. பலரது வீடுகளில் ஓடுகள் உடைந்தன. நீண்ட நாட்களுக்கு பிறகு அதிசயமாக பெய்த ஆலங்கட்டி மழையைப் பார்த்து பலரும் உற்சாகமடைந்தனர்.

மின்சாரம் துண்டிப்பு
காற்று வீசியதில் உயர்அழுத்த மின்வயர்கள் அறுந்து விழுந்தன. இதனால் நேற்று மாலை 5 மணிக்கு சென்ற மின்சாரம் 15 மணி நேரத்திற்கும் மேலாக தடைபட்டுள்ளது. மழை பெய்து ஓய்ந்த பின்னர் குளுமை பரவினாலும் இரவு நேரங்களில் பலரும் உறக்கம் தொலைத்தனர். அறுந்து விழுந்த மின்சார வயர்களை சரி செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
கொட்டித்தீர்த்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. பலரது வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதன்காரணமாக பிரிட்ஜ், கட்டில் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் நனைந்து நாசமடைந்தன. மழை நின்ற பிறகு வீட்டிற்குள் இருந்த தண்ணீரை வெளியேற்றினர்.

தருமபுரியில் ஆலங்கட்டி மழை
வெப்ப சலனம் காரணமாக தர்மபுரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வந்தது. இந்த நிலையில் நேற்று காலை முதல் வெயில் கொளுத்தியது. மாலையில் திடீரென கருமேகம் திரண்டு மழை பெய்ய தொடங்கியது. இதில் தருமபுரி நகரம், பஸ் நிலையம், பென்னாகரம் சாலை, குமாரசாமிப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் ஆங்காங்கே சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

வேன் கவிழ்ந்து விபத்து
குமாரசாமிப்பேட்டை பகுதியில் பெய்த பலத்த மழையால் கழிவு நீருடன் மழைநீர் கலந்து பிள்ளையார் கோவில் தெரு, சிவசுப்பிரமணிய சாமி கோவிலுக்கு செல்லும் தெரு உள்ளிட்ட பகுதிகளில் தேங்கியது. 10க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. ஒகேனக்கல்லில் இருந்து பொம்மிடி நோக்கி சுற்றுலா வேன் ஒன்று வந்து கொண்டு இருந்தது. சூறைக்காற்றுடன் பெய்த மழையால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தலைக்குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் இருந்த 11 பேர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications