கொடிக் கம்பங்கள் அகற்றக்கோரிய வழக்கு.. 13 மாவட்ட ஆட்சியர்கள், எஸ்.பிக்களுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு
மதுரை: மதுரை உட்பட 13 மாவட்டங்களில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்கள், பிளக்ஸ் போர்டுகளை அகற்றக் கோரிய வழக்கில் 13 மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் பதிலளிக்க உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் சாலிகிராமத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், "கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, ராமநாதபுரம், திண்டுக்கல், கரூர், புதுக்கோட்டை, திருச்சி, மற்றும் தஞ்சாவூர் ஆகிய 13 தென் மாவட்டங்களில் ஏராளமான இடங்களில் அனுமதி பெறாமல் கொடிக் கம்பங்கள், பிளக்ஸ் பேனர்கள், போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த மாவட்டங்களில் அரசு புறம்போக்கு இடங்கள், மாநில நெடுஞ்சாலை, கிராமச் சாலைகள் மற்றும் பொது இடங்களில் அரசியல் மற்றும் சாதி அடிப்படையிலான பிளக்ஸ் போர்டுகள், போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன. பேனர்கள் கட்டப்படுகின்றன. இவைகளால் தேவையற்ற மோதல்கள் ஏற்படுகிறது. தமிழ்நாடு உள்ளாட்சி விதிகளின்படி போஸ்டர்கள் ஒட்டவும், பேனர்கள், போர்டுகள் வைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும். அதன்படி எந்த அனுமதியும் பெறப்படுவதில்லை.
அனுமதி பெறாமல் செயல்படுபவர்கள் மீது அதிகாரிகளும் நடவடிக்கை எடுப்பதில்லை. எனவே, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் முறையாக அனுமதி பெறாமல் அரசியல் மற்றும் சாதிய அமைப்புகளின் கொடிக் கம்பங்கள், பிளக்ஸ் போர்டுகள், பேனர்கள் வைக்கப்பட்டது தொடர்பாக விசாரிக்கவும், அவற்றை அகற்றவும் உத்தரவிட வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், அனுமதி பெறாத பிளக்ஸ் பேனர்கள், கட்சி கொடிக் கம்பங்களை அகற்றுவது தொடர்பாக பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் தொடர்ந்து வழக்குகள் தாக்கலாகி வருகின்றன. மனு தொடர்பாக 13 மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் 4 வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
-
ஆபரேஷன் இரட்டை இலை.. மாவட்ட வாரியாக அதிமுக தொண்டர்களை இழுக்கும் தவெக.. பனையூர் வியூகம்! -
தமாகாவை கரைத்த பாஜக.. என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? ஜிகே வாசன் முடிவில் பின்னணி -
மிதுன் பழனிசாமியை அரசியலுக்கு அழைத்து வர எடப்பாடி பழனிசாமி டிராமா ஆடுகிறார்.. சிவி சண்முகம்! -
துரைமுருகன் Out? ஆ.ராசா In.. திமுக செயல் தலைவராகும் கனிமொழி? அறிவாலயத்தை ரவுண்ட் கட்டும் யூகங்கள்! -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
அவர் வரலாறு தெரியுமா.. சந்தர்ப்பவாத அரசியல்வாதி.. ஆதவ் அர்ஜுனாவை வெளுத்த கேபி முனுசாமி -
சனிக்கிழமை தோறும் ஆள்பிடிக்கும் விஜய்.. அதிமுக மாஜி அமைச்சர் ஆர்பி உதயகுமார் கடும் டென்ஷன் -
துரைமுருகன் திரும்பி சென்றது ஏன்.. மகளிரணி கூட்டத்தில் என்ன நடந்தது.. திமுக ஐடி விங் விளக்கம் -
“திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க சதி திட்டம் தீட்டியது யார்?” ஸ்டாலினுக்கு செங்கோட்டையன் கேள்வி -
மமதாவின் கோட்டை தகர்கிறதா? அதிருப்தி எம்பிக்கள் எடுத்த அதிரடி முடிவு! -
கைவிட்ட பாஜக.. மம்தாவையும் பகைத்து கொண்ட திரிணாமுல் தலைவர்கள்.. இடியாப்ப சிக்கல்! -
திமுக தோல்விக்கு காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்.. கமெண்ட் செய்யுங்க












Click it and Unblock the Notifications