Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தொடக்க கல்வி இயக்குநருக்கு ரூ.10000 அபராதம்.. பதில் சொல்ல 3 வருடமா? ஐகோர்ட் கிளை அதிரடி!

Subscribe to Oneindia Tamil

மதுரை: தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநருக்கு ரூ.10,000 அபராதம் விதித்து ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. 3 ஆண்டு தாமதமாக நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்ததால் ஐகோர்ட் மதுரை கிளை அபராதம் விதித்துள்ளது.

திருநெல்வேலியைச் சேர்ந்த தனியார் பள்ளி இடைநிலை ஆசிரியர் ரோகிணி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். அரசு தரப்பில் பணி நியமன ஒப்புதல் வழங்கக் கோரி மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தில் விண்ணப்பித்தும் இதுவரை ஒப்புதல் வழங்கவில்லை எனப் புகார் தெரிவித்திருந்தார்.

High court imposed fine for lementary School education department director

இதனை விசாரித்த உயர் நீதிமன்ற கிளை, கடந்த 2019ஆம் ஆண்டு இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய பள்ளிக் கல்வித்துறைக்கு உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில், தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

3 ஆண்டு காலதாமதமாக பதில் மனு தாக்கல் செய்ததற்காக அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்து ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+