"ஆன்மீகத்தில் அரசியல் கலக்கக்கூடாது.." மதுரையில் முருகன் மாநாடு நடத்த ஐகோர்ட் மதுரை கிளை அனுமதி
மதுரை: மதுரையில் வரும் 22ம் தேதி இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு போலீசார் அனுமதி வழங்காத நிலையில், இது தொடர்பாகச் சென்னை ஐகோர்ட் மதுரை அமர்வு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை இன்று விசாரித்த ஐகோர்ட் மதுரை அமர்வு, கட்டுப்பாடுகளுடன் முருகன் மாநாட்டை நடத்த அனுமதி அளித்துள்ளது.
வரும் 22ம் தேதி மதுரை பாண்டிகோவில் அருகே உள்ள திடலில் இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதற்காக அங்கு முருகனின் அறுபடை வீடுகளைப் போலத் தற்காலிக மாதிரி கோயில்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளனர். இதற்காக அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

முருகன் மாநாடு
அதில் முருக பக்தர்களின் ஆன்மீக மாநாட்டில் முருகப் பெருமானின் அறுபடைவீடு திருக்கோவில்களின் தற்காலிக மாதிரி அமைப்புகள் அமைக்கப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், வரும் 10ம் தேதி முதல் 22ம் தேதி வரை பக்தர்கள் வழிபாடு நடத்த உத்தரவிட வேண்டும் என மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்த போதிலும் அதற்கு அனுமதி வழங்கவில்லை என்று கூறப்பட்டு இருந்தது
இந்த மனு முன்னதாக விசாரணைக்கு வந்தபோது, மாநாட்டுக்கான முன் ஏற்பாடுகளைச் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இருப்பினும், அங்கு எந்தவொரு பூஜைகளையும் செய்யக்கூடாது என உத்தரவிடப்பட்டது.. இதற்கிடையே அனுமதி வழங்க எதிர்ப்பு தெரிவித்து அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத் தலைவர் அரங்கநாதன், இடையீட்டு மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்
எதிர்ப்பு
அந்த மனுவில் அறுபடை வீடுகளுக்குக் குறிப்பிட்ட ஆகம முறைப்படியே பூஜை செய்ய வேண்டும் என்றும் மூலவருக்கு உரியப் பூஜைகள் செய்த பிறகே உற்சவரை வெளியே கொண்டு வர முடியும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த மாநாட்டில் அமைக்கப்படும் அறுபடை வீடுகளில் மூலவர் சிலையை அமைக்கவே முடியாது என்றும் உற்சவர் சிலையும் கூட ஆகமப்படி பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடத்திய பிறகே பூஜை செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்து முன்னணி இரு வேளை பூஜை செய்ய வேண்டும் எனக் கோருவதும் ஆகமத்திற்கு முரணானது என்று தெரிவிக்கப்பட்டது.
அனுமதி
இந்தச் சூழலில் தான் இது தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை நீதிபதி புகழேந்தி விசாரித்தார். அப்போது மத நிகழ்வுகளில் அரசியல் கலக்கக்கூடாது கூடாது" என்ற நிபந்தனையுடன் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு அனுமதி அளித்தார். மேலும், முருகனின் அறுபடை வீடுகளின் மாதிரிகளை வைத்து காலை, மாலை வழிபாடு செய்து பிரசாதம் வழங்கவும் அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
முருக பக்தர்கள்
இன்னும் 10 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த முருக பக்தர்கள் மாநாட்டில் மதுரை மட்டுமின்றி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்தும் அதிகப்படியான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் முருகனின் அறுபடை வீடுகளின் மாதிரிகள் வைத்தும் சிறப்பு வழிபாடு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications