ஹலால் விவகாரத்தை விடுங்க.. மதுரையில் மாரியம்மன் கோயிலில் இஸ்லாமிய கொடி.. இதுதான் மதநல்லிணக்கம்!
மதுரை: மதுரையில் ஸ்ரீமந்தையம்மன் கோயில் திருவிழாவில் இஸ்லாமிய கொடியை ஏற்றி இந்துக்கள் துவக்கி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
மதுரை சிக்கந்தர் சாவடியில் உள்ள ஸ்ரீமந்தையம்மன் கோவில் சக்தி கரகம் எடுக்கும் விழா 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு நடைபெறும் இவ்விழா மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக நடத்தப்படுவது வழக்கம்.
அந்த வகையில் இன்று மாலை விழாவின் துவக்கமாக கொடியேற்றம் நடைபெற்றது. இதில் இஸ்லாமிய கொடிக்கம்பத்தை ஊர்வலமாக எடுத்துச் சென்று பின்னர் கோவில் முன்பாக இஸ்லாமிய கொடியை ஏற்றி விழா துவங்கப்பட்டது.

அனைவரும் ஒற்றுமை
இப்பகுதியில் பல்வேறு ஜாதி மதத்தை சேர்ந்தவர்கள் வசிக்கும் நிலையில் அனைவரிடமும் எந்தவித வேற்றுமையும் இல்லாமல் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தி இவ்விழா நடைபெறுகிறது. விழாவின் சிறப்பாக இஸ்லாமியர்களும் இணைந்து விழாவை கொண்டாடுவதால் இஸ்லாமியர்களை பெருமைப்படுத்தும் விதமாக இஸ்லாமிய கொடியேற்றி விழா துவக்கப்பட்டது.

காலம் தொட்ட மரபு
இது பண்டைய காலம் தொட்டு நடைமுறையாக இருந்து வருவதாக கூறப்படுகிறது. 5 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் சக்தி கரகம் எடுப்பது, முளைப்பாரி எடுப்பது என பல்வேறு வேண்டுதல்களை பக்தர்கள் நிறைவேற்றி வருகின்றனர். என்னதான் இரு மதத்தினரிடையே ஒற்றுமை இல்லை என்பதை சிலர் கிளப்பிவிட்டாலும் இது போன்ற சம்பவங்கள் அந்த கூற்றை பொய்யாகியுள்ளன.

இஸ்லாமிய தர்கா
இந்து கோயிலை முஸ்லீம் கட்டுவது, இஸ்லாமிய தர்காவுக்கு இந்து நபர் நிலம் கொடுப்பது, இறப்பு நிகழ்ச்சியில் பரஸ்பரம் கலந்து கொள்வது என மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக் காட்டாக பல சம்பவங்கள் நடந்து கொண்டுதான் வருகிறது. பொங்கலுக்கு பொங்கல் தருவதும், கிறிஸ்துமஸ், ரம்ராஜனுக்கு பிரியாணி தருவதும் என மக்கள் ஒற்றுமையாக கொண்டாடி வருகிறார்கள்.

கர்நாடகா
கர்நாடகா மாநிலத்தில் ஹிஜாப் அணிந்து கொண்டு இஸ்லாமிய மாணவிகள் பள்ளி, கல்லூரிக்குள் நுழையக் கூடாது என இந்துத்துவா மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். கர்நாடகாவில் முஸ்லீம் நடத்தும் இறைச்சிக் கடைகளில் விற்பனை செய்யப்படும் ஹலால் இறைச்சிகளை இந்துக்கள் வாங்கக் கூடாது என பாஜக தலைவர்கள் கூறி வந்தனர். அதற்கு பதிலாக இந்து வியாபாரிகள் நடத்தும் இறைச்சிக் கடைகளில் வாங்கும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இத்தனை கசப்பான சம்பவங்களுக்கு மத்தியிலும் யார் சொன்னாலும் நாங்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம் என்பதை காட்டும் அளவுக்கு மதுரை கோயில் திருவிழா சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications