Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லட்சுமணன் வீரமரணம் அடைந்தது பெருமை.. ‘இன்னொரு மகனையும் அனுப்பி வைப்பேன்’- தந்தை கண்ணீர் மல்க பேச்சு!

Subscribe to Oneindia Tamil

மதுரை : எனது மகன் லட்சுமணன் வீரமரணம் அடைந்துள்ளார். அரசாங்கம் விரும்பினால் எனது இன்னொரு மகனையும் ராணுவத்திற்கு பணியாற்ற அனுப்பி வைப்பேன் என வீரமரணமடைந்த ராணுவ வீரர் லட்சுமணனின் தந்தை தர்மராஜ் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    Fence-ஐ தாண்டிய பயங்கரவாதிகள்..தமிழக வீரர் வீரமரணம் | சீனாவின் வில்லத்தனம் *Defence

    ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் தமிழகத்தின் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் உள்ளிட்ட மூன்று வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

    ராணுவ வீரர் லட்சுமணனின் வீரமரணத்தைத் தொடர்ந்து, அவரது சொந்த ஊரான திருமங்கலம் அருகேயுள்ள டி.புதுப்பட்டி கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

    இந்நிலையில், வீரமரணமடைந்த ராணுவ வீரர் லட்சுமணனின் ஆசை குறித்து கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார் அவரது தந்தை தர்மராஜ்.

    தமிழக வீரர் வீரமரணம்

    தமிழக வீரர் வீரமரணம்

    ஜம்மு காஷ்மீரில் உள்ள புத்காம் மாவட்டம் வாட்டர்ஹெய்ல் கான்சாகிப் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படை வீரர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து உடனடியாக பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த பகுதிக்கு பாதுகாப்பு படை வீரர்கள் விரைந்தனர். அங்கு நடந்த தாக்குதலில், இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் வீரணமடைந்தனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த லட்சுமணன் என்ற வீரரும் வீரமரணம் அடைந்தார்.

    லட்சுமணன்

    லட்சுமணன்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள டி.புதுப்பட்டி கிராமத்தைச் சார்ந்த தர்மராஜ் - ஆண்டாள் தம்பதியரின் இரட்டை மகன்களில் மூத்த மகன் ராமன், இளைய மகன் லட்சுமணன். விவசாயக் குடும்பத்தில் பிறந்த லட்சுமணன் கடந்த 2019 ஆம் ஆண்டு பி.காம் பட்டம் பெற்றார். அந்த ஆண்டே ராணுவத்தில் பணியில் சேர்ந்தார். இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாதிகளுக்கிடையே நிகழ்ந்த சண்டையில் லட்சுமணன் வீரமரணம் அடைந்துள்ளார்.

    பெரும் சோகம்

    பெரும் சோகம்

    ராணுவ வீரர் லட்சுமணனின் சொந்த ஊரான டி.புதுப்பட்டி கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் வீரமரணமடைந்த ராணுவ வீரரின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். லட்சுமணனின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

    தந்தை கண்ணீர் மல்க பேச்சு

    தந்தை கண்ணீர் மல்க பேச்சு

    இந்நிலையில், லட்சுமணனின் தந்தை தர்மராஜ் தனது மகன் வீரமரணம் குறித்து கண்ணீர் மல்க பேசியுள்ளார். "எனது மகன் லட்சுமணன் போரில் வீர மரணம் அடைந்தது எங்கள் குடும்பத்திற்கு பெருமை. ராணுவத்திற்காக எனது மூத்த மகனையும் நாட்டிற்கு அர்ப்பணிக்கிறேன். அரசாங்கம் விரும்பினால் எனது மூத்த மகனையும் ராணுவத்திற்கு பணியாற்ற அனுப்பி வைப்பேன்.

    லட்சுமணனின் ஆசை

    லட்சுமணனின் ஆசை

    வீட்டு நிலைமை குறித்து போனில் கேட்டான். உடன்பிறந்தவனுக்கு ஏதாவது வேலை வாங்கிக் கொடுக்க வேண்டும், தொழில் செய்ய உதவ வேண்டும் என்று நினைத்தான். முதலில் அவனுக்கு கல்யாணம் செய்து வைத்து விடலாம். பிறகு எனக்குப் பார்த்துக்கொள்ளலாம் என்று சொன்னான்" என கதறி அழுதபடி தெரிவித்துள்ளார் தர்மராஜ்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+