ஒலிம்பிக்கில் கபடி போட்டி! இந்தியா கண்டிப்பாக தங்கப்பதக்கம் வெல்லும்! பாஜக அண்ணாமலை ஆரூடம்!
மதுரை: இந்தியாவில் ஒலிம்பிக் போட்டி நடைபெறும்போது, கபடி போட்டியும் அதில் இடம்பெறும் என்றும், அதில் இந்தியா தங்கப்பதக்கம் வெல்லும் என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
திமுக அரசுக்கு எதிராக பல்வேறு புகார்களை கூறிவரும் வரும் பாஜகவினர், பல்வேறு இடங்களில் போராட்டங்களையும் நடத்தி, மக்கள் மனதில் இடம்பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர்.
மேலும், தமிழகத்தல் கட்சியை வளர்க்கும் பணிகளில் ஒருபகுதியாக, தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் பிரம்மாண்ட கபடி போட்டிகளை நடத்தி வருகிறது.

அண்ணாமலை
அந்த வகையில், மதுரையில் நடைபெறும் மோடி கபடி லீக் இறுதிப் போட்டிக்கான தொடக்க விழா, மதுரை மதுரா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு, விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

கபடி போட்டி
இதனைத்து நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசியபோது, விளையாட்டு மூலம், அரசியல் இன்றி அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த கபடி போட்டி நடைபெற்று வருகிறது. இந்தியாவில் ஒலிம்பிக் போட்டி நடக்கும்போது, கபடி போட்டியும் அதில் இடம்பெறும். அப்போது இந்தியா அந்தப் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்லும்.

மதுரை மண்
இந்த கபடி போட்டி, பொதுமக்களுக்காக நடத்தப்படுகிறது. மதுரை மண்ணில்தான் இறுதிப்போட்டி நடைபெறவேண்டும் என்பதற்காக இங்கு நடைபெறுகிறது. தமிழகத்தில் இதுபோன்ற பிரம்மாண்ட கபடி போட்டியை யாரும் நடத்தவில்லை. கபடி போட்டி விளையாடுவதால் நல்ல மனிதர்களாக மாறுகின்றனர். இந்த இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் பரிசாக ரூ.15 லட்சமும், இரண்டாவது பரிசாக ரூ.10 லட்சமும், மூன்றாவது பரிசாக ரூ.5 லட்சமும் வழங்கப்படும்.

ஒலிம்பிக்கில் கபடி
இதுவரை இந்தப் போட்டிகளில் பல்வேறு மாவட்டங்களில் 61,000 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளளனர். வீட்டில், நாட்டில் என்ன பிரச்சனை இருந்தாலும், விளையாட்டு போட்டியைப் பார்த்தால் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். கபடி விளையாட்டுக்கான சென்டர் ஆப் எக்ஸலன்ஸ் தமிழகத்திற்கு கொண்டு வருவது எங்களது பொறுப்பு. ஒலிம்பிக் சங்க துணைத்தலைவர் சோலை ராஜாவை டெல்லிக்கு அழைத்துச் சென்று, இதனை ஆவணம் செய்வோம் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
-
என் பெயரை பயன்படுத்த கூடாது.. பதவிக்கு 'மூச்'.. அண்ணாமலை முக்கிய அறிவிப்பு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
திடீர் ட்விஸ்ட்.. அண்ணாமலையுடன் கைகோர்க்க போகும் ராகவா லாரன்ஸ்? நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார்? -
"தமிழகத்தில் அண்ணாமலைக்கும் மன்சூர் அலிகானுக்கும் தான் போட்டி!" நக்கலடித்த தவெக எம்எல்ஏ முஸ்தபா -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
நீங்க கிளம்புங்க அண்ணாச்சி.. நயினாருக்கு டெல்லி தந்த ஷாக்! நாற்காலிக்கு சண்டை போடும் தாமரை சொந்தங்கள் -
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
Maridhas: மாரிதாஸ் கைது ஏன்? ஆதவ் உறவினர் ஜான் பிரிட்டோ குறித்து பேசியதுதான் காரணமா? அதிமுக நறுக்!












Click it and Unblock the Notifications