டாக்டர் சரவணன் இல்ல மண விழா! படையெடுத்து வந்த நடிகர் -நடிகைகள் -அரசியல்வாதிகள் -தொழிலதிபர்கள்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: தனது அழைப்பை ஏற்று மகன் திருமண விழாவுக்கு நடிகர், நடிகைகள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், சாதி அமைப்பினர் என பலதரப்பட்டோரும் வந்து சென்றதால் உற்சாக மிகுதியில் காணப்படுகிறார் டாக்டர் சரவணன்.

இந்தக் கட்சி அந்தக் கட்சி என்றில்லாமல் தனக்கு தெரிந்த அனைத்துக் கட்சி பிரமுகர்களுக்கும் அவர் அழைப்பு விடுத்திருந்தார்.

இவரது அழைப்பை ஏற்று அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், ராஜகண்ணப்பன், கே.ஆர்.பெரியகருப்பன், ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் உதயகுமார், சீமான், துரை வைகோ, என பல முக்கிய விஐபிக்கள் திருமண விழாவில் கலந்துகொண்டனர்.

சரவணன் மகன்

சரவணன் மகன்

திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், டாக்டருமான சரவணன் இல்லத் திருமண விழா கடந்த திங்கள்கிழமை அன்று மதுரையில் நடைபெற்றது. தனது மகன் திருமண விழாவுக்கான அழைப்பிதழை கட்சி பாகுபாடின்றி தனக்கு அறிமுகமான அனைத்து முக்கிய பிரமுகர்களுக்கும் கொடுத்திருந்தார். இதேபோல் நடிகர், நடிகைகள், தொழிலதிபர்கள், சாதி அமைப்பினர் என பலதரப்பட்டோருக்கும் அழைப்பு விடுத்திருந்தார் சரவணன்.

நடிகர் நடிகைகள்

நடிகர் நடிகைகள்

டாக்டர் சரவணனின் அழைப்பை ஏற்று நடிகைகள் சஞ்சனா சிங், சோனியா அகர்வால், சீதா, ரேகா நாயர், கன்னிகா, நளினி, வனிதா விஜயகுமார், நடிகர்கள் கூல் சுரேஷ், சூரி, கவிஞர் சிநேகன், பாஜக பிரமுகரும், இயக்குநருமான பேரரசு, என ஒரு பெரிய திரைப்பட்டாளமே கலந்துகொண்டது. இதேபோல் திரைப்படத் தயாரிப்பாளர் கோபுரம் பிலிம்ஸ் அன்புச் செழியன் உட்பட மதுரையின் முக்கிய தொழிலதிபர்கள் பலர் கலந்துகொண்டனர்.

 அரசியல் பிரமுகர்கள்

அரசியல் பிரமுகர்கள்

இதேபோல் அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், ராஜகண்ணப்பன், கே.ஆர்.பெரியகருப்பன், ஆகியோரும் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் உதயகுமார், சீமான், துரை வைகோ,நாஞ்சில் சம்பத், ராஜன் செல்லப்பா, வெங்கடேசன் எம்.பி. என அரசியல் பிரபலங்கள் பலரும் சரவணன் இல்ல மண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்திச் சென்றனர். இதன் மூலம் டாக்டர் சரவணனுக்கு சினிமா மற்றும் அரசியலில் பெரும் தொடர்புகள் இருப்பது தெரிய வந்துள்ளது.

 அசைவ விருந்து

அசைவ விருந்து

இதனிடையே அகமுடையார் சமுதாய அமைப்பினர்களும் திரளாக பங்கேற்றிருந்ததை காண முடிந்தது. வந்திருந்தவர்கள் அனைவருக்கும் மட்டன், சிக்கன், மீன், என மதுரைக்கே உரிய தடபுடல் அசைவ விருந்து வைத்து அனுப்பினார் டாக்டர் சரவணன். அமைச்சர் பிடிஆருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வரும் இவர், விரைவில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே தனது இல்ல மண விழாவுக்கு வந்த ஓ.பன்னீர்செல்வத்தை சரவணன் வரவேற்ற காட்சிகளை வைத்து அவர் ஓபிஎஸ் பக்கம் சாயவுள்ளதாக வதந்தி பரவியது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+