Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அண்ணாமலை புதிய கட்சி தொடங்குகிறாரா? நயினார் நாகேந்திரன் சொன்னது இதுதான்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: தமிழக பாஜக முன்னாள் தலைவராக இருந்த அண்ணாமலை புதிய கட்சி தொடங்குவதாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது குறித்த கேள்விக்கு நயினார் நாகேந்திரன் என்ன பதில் அளித்தார் என்பதை தெரிந்து கொள்ளலாம். உண்மையிலேயே அண்ணாமலை புதிய கட்சியை தொடங்குகிறாரா?

மதுரை விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியிருப்பதாவது: மீனவர் பிரச்சினையில் பாஜகவை விமர்சித்து தவெக தலைவர் விஜய் பேசியுள்ளார். காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சியில் எத்தனை மீனவர்கள் கொல்லப்பட்டனர் என்பது மக்களுக்குத் தெரியும்.

annamalai nainar nagendran

ஆனால் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் ஒருவர் கூட இறக்கவில்லை. தூக்குத் தண்டனைக்கு செல்லவிருந்த மீனவரை கூட மத்திய அரசு மீட்டு கொண்டு வந்தது. இப்போதும் இலங்கை சிறையில் இருக்கும் மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

திமுகவுக்கும் தவெகவிற்கும்தான் போட்டி என விஜய் கூறி வருகிறார். ஆனால் அவர் இதுவரை எந்த தேர்தலையும் சந்திக்கவில்லை. இப்போதுதான் வந்திருக்கிறார். வந்தவுடன் ஆட்சிக்கு வந்துவிடுவோம் என்று நினைத்தால் தமிழக மக்கள் எதை நினைத்து அவருக்கு வாக்களிப்பார்கள் என அவர் சிந்தித்துப் பேச வேண்டும்.

அண்ணாமலை புதிய கட்சி தொடங்குவதாக செய்திகள் பரவி வருகின்றன. அண்ணாமலை எங்கள் கட்சியின் முன்னாள் தலைவர். இப்போதும் கட்சியில்தான் இருக்கிறார். இது போன்ற தகவல்களை பரப்புவது திமுகவின் வேலையாகத்தான் இருக்கும். திமுகவினரே என்னிடம் இது போன்று கேள்விகளை கேட்க கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

அண்ணாமலை புதிய கட்சி தொடங்குவதாக ஒட்டப்பட்ட போஸ்டர்களை யார் ஒட்டினார்கள் என தெரியவில்லை. ஓபிஎஸ், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் மீண்டும் கூட்டணி வந்தால் சேர்த்துக் கொள்வோம் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலை, விருப்ப ஓய்வு பெற்று பாஜகவில் இணைந்ததுமே அவருக்கு பாஜக தலைவர் பதவி தேடி வந்தது. அந்த பணிகளை செம்மையாக செய்து வந்த நிலையில் அவருடைய பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டார்.

அவ்வாறு மாற்றம் நடந்த போதிலும் அண்ணாமலைக்கு செல்வாக்கு குறையாமல் இருந்து வருகிறது என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் அமித்ஷா, நட்டா கலந்து கொண்ட கூட்டங்களில் அண்ணாமலை கலந்து கொள்ளாதது குறித்து அவர்கள் விசாரித்ததாகவும் தகவல்கள் கிடைத்தன.

இப்படி இருக்க, அண்ணாமலை பாஜகவில் ஓரங்கட்டப்படுகிறார் என்ற தகவல்களும் கிடைத்துள்ளன. இந்த நிலையில் அவர் கோவையில் சில கோடி மதிப்பில் ஒரு நிலத்தை வாங்கியிருக்கிறார். இது சட்டவிரோதமாக அவர் வாங்கியதாக விமர்சனங்கள் எழுந்தன.

அப்போது அண்ணாமலை விளக்கம் அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: கோவையில் வாங்கப்பட்ட நிலம் நானும் என் மனைவியும் சேர்ந்து வாங்கியது. இது எங்கள் பணத்தில், மார்க்கெட் விலையை விட அதிகம் கொடுத்து வாங்கப்பட்டது.

இதற்கு வரி கட்டியிருக்கிறோம். தேவைப்பட்டால் சோதனை செய்து கொள்ளலாம். இந்த நிலத்தில் பால் பண்ணை வைப்பதற்காக வாங்கியிருக்கிறேன் என அண்ணாமலை தெரிவித்திருந்தார். அந்த அறிக்கையில் கூட அண்ணாமலை பாஜக என போடாமல் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி என போட்டிருந்தார்.

இதையடுத்து சென்னையை அடுத்த அக்கரையில் பாஜக மையக் குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு கூட அண்ணாமலை வரவில்லை. விசாரித்ததில் அவருக்கு டெங்கு காய்ச்சல் என சொல்லப்பட்டது. இந்த நிலையில் அண்ணாமலை மதியத்திற்கு மேல் அந்த கூட்டத்திற்கு வருகை தந்திருந்தார். இப்படியிருக்கையில் அவர் புதிய கட்சி தொடங்குவதாகவும் அரசியலுக்கு முழுக்கு போடுவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+