அறிவார்ந்த அரசியல்வாதி.. சுந்தர்.சி-யால் பயத்தில் இருக்காரு.. பிடிஆரை சீண்டும் பாஜக நிர்வாகி குஷ்பு!
மதுரை: மதுரை மத்திய தொகுதியில் என்டிஏ கூட்டணியின் வேட்பாளராக சுந்தர் சி களமிறங்கி இருப்பதால், அறிவார்ந்த அரசியல்வாதியான பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நிலைகுலைந்து போயிருப்பதாக நடிகை குஷ்பு விமர்சித்துள்ளார். சுந்தர் சி மண்ணன் மைந்தர் என்று கூறியுள்ள குஷ்பு, தமிழ் கலாச்சாரத்திற்காக உறுதியாக நிற்பவர் என்றும் தெரிவித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தலில் மதுரை மத்திய தொகுதியில் என்டிஏ கூட்டணியின் வேட்பாளராக சுந்தர் சி களமிறக்கப்பட்டுள்ளார். திமுக சார்பாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் போட்டியிடுகிறார். ஏற்கனவே தொகுதியில் அறிமுகமான முகமாக இருக்கும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை சுந்தர் சி-யால் வீழ்த்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இருந்தாலும் நடிகை குஷ்பு மற்றும் ஏசி சண்முகம் இருவரும் சுந்தர்.சி-க்கு ஆதரவாக இருக்கின்றனர். அதேபோல் அதிமுகவின் மன்னன் மற்றும் எஸ்ஸார் கோபி உள்ளிட்டோரும் சுந்தர்.சி-க்கு பணியாற்ற ஒப்புக் கொண்டுள்ளனர். இருந்தாலும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை வீழ்த்த முடியுமா என்பது சந்தேகம் தான். இந்த நிலையில் குஷ்பு எக்ஸ் பக்கத்தில் பிடிஆரை சீண்டி இருக்கிறார்.
அதில் குஷ்பு, சுந்தர் சி அரசியலில் நுழைந்திருப்பதை கண்டு அறிவார்ந்த அரசியல்வாதி என்று சொல்லப்படும் நிலைகுலைந்து போயிருப்பது போல் தெரியது. அதுவே பல உண்மைகளை சொல்கிறது. இரட்டை இலை சின்னத்தில் சுந்தர் சி போட்டியிடுவது மதுரை மத்திய தொகுதி மக்களின் மனதை தொட்டுள்ளது. இதனால் சுந்தர்.சி-யை வெளியூர்காரர் என்கிறார்கள்.
ஆனால் நாம் எல்லோரும் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் நமது வீடு என்று சொல்லும் இடத்திற்கே அந்நியர்களாகிவிடுகிறோம்.. உள்ளூர்காரர், வெளியூர்காரர் என்பதை வரையறுப்பது பிறப்பு அல்ல.. அது நாம் சார்ந்திருக்கும் இடம் தான். அர்ப்பணிப்புடன் பணியாற்றினால், யாரும் வெளியூர்காரர் கிடையாது. சுந்தர்.சி வெளியூர்காரர் அல்ல.. அவர் தமிழ்நாட்டின் மண்ணின் மைந்தர் தான்.
தொடர்ச்சியாக பணியாற்றி மக்களுடன் தொடர்பில் இருந்திருக்கிறார். தமிழ் கலாச்சாரத்திற்காக உறுதியால் நின்றவர். ஆனால் அரசியல்வாதிகளால் குறுகிய அடையாளங்களை பிளவுகளையும் கடந்து அடுத்தக் கட்டத்திற்கு செல்ல முடியுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இது சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications