பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்த தந்தை.. சாகற வரைக்கும் ஜெயில்ல போடுங்க... கோர்ட் அதிரடி...
மதுரை: மதுரையில் பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை கொடுத்து மதுரை மாவட்ட போக்சோ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சிறுமி மற்றும் தாய் புகாரில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில் மதுரை மாவட்ட போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மதுரையில் மதுபானம் குடிக்கும் பழக்கம் உள்ள நபர் ஒருவர் குடித்துவிட்டு வந்து அடிக்கடி மனைவியிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. கடந்த 2015ம் ஆண்டும் வழக்கம் போல் குடித்து விட்டு வந்த அவர் வீட்டில் தனியாக இருந்த மகளிடம் சில்மிஷம் செய்துள்ளார்.

வீட்டில் தாய் இல்லாததால் சிறுமி தப்பிக்க முயல சிறுமியை கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
பின்னர் வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பிய தாயிடம் மகள் நடந்ததை கூற போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரை ஏற்றுக்கொண்ட மதுரை சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தந்தையை கைது செய்தனர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். வழக்கு விசாரணை நீதிமன்றத்திற்கு சென்றது.
இந்த வழக்கு மதுரை மாவட்டம் போக்சோ நீதிமன்றத்தில் கடந்த 2015ம் ஆண்டு முதல் நடைபெற்று வந்தது. வழக்கு போக்சோ நீதிமன்ற நிதிபதி ராதிகா முன்னிலையில் நடைபெற்று வந்தது. வழக்கில் மகளை பெற்றத் தந்தையே பாலியல் வன்கொடுமை செய்தது ஆதாரப் பூர்வமாக நிரூபிக்கப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி தந்தைக்கு ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதையடுத்து போலீசார் அவரை மத்திய சிறைக்கு அழைத்து சென்று சிறையில் அடைத்தனர். தந்தைக்கு தண்டனை கொடுத்திருப்பதால், மகளும், கணவனுக்கு தண்டனை கிடைத்ததால் மனைவியும் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். பள்ளி மாணவிகளுக்கு எதிரான பாலியல் கொடுமை சம்பவங்கள் நடந்து வரும் சூழலில் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை சமூக ஆர்வலர்கள் பாராட்டி உள்ளனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications