அடிச்சது பாருங்க லக்.. மதுரையில் சிதறி கிடந்த ரூ.500 நோட்டுகள்.. அப்படியே அள்ளி சென்ற பொதுமக்கள்
மதுரை: மதுரை ஊசிலம்பட்டி தேனி ரோட்டில் சாலை முழுக்க 500 ரூபாய் நோட்டுகள் சிதறிக் கிடந்துள்ளன. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் சாலையில் இருந்த அந்த ரூ.500 நோட்டுகளை அள்ளி சென்றனர். இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
இலவசமாகப் பணம் கிடைத்தால் யார் தான் வேண்டாம் எனச் சொல்வார்கள். அப்படிக் கிடைத்தால் அதை அதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும். ஆனால், அனைவருக்கும் இந்த அதிர்ஷ்டம் கிடைக்காது.

இதற்கிடையே மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேனி சாலை முழுக்க ரூ.500 நோட்டுகள் சிதறிக் கிடந்துள்ளன. இதை அப்பகுதி வழியாகச் சென்ற மக்கள் அப்படியே அள்ளி சென்றனர்.
மதுரை சம்பவம்: மதுரை மாவட்டத்தில் பரபரப்பான சாலைகளில் ஒன்று உசிலம்பட்டி தேனி சாலை.. இன்று காலை இந்த பகுதியில் மக்கள் சென்ற போது சாலை முழுக்க ரூபாய் நோட்டுகள் சிதறிக் கிடந்துள்ளன.
உசிலம்பட்டி தேனி ரோட்டில் உள்ள மாமரத்துபட்டி விலக்கு பகுதியில் சென்ற வாகனத்தில் இருந்து இந்த 500 ரூபாய் நோட்டுகள் சிதறி நெடுஞ்சாலையில் விழுந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், எந்த வாகனத்தில் இருந்து ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக விழுந்துள்ளது என்பது குறித்த தகவல்கள் தெளிவாக இல்லை.
ரூ.500 நோட்டுகள்லச ஆனால், அந்த சாலை முழுக்க சுமார் 100 மீட்டர் தொலைவிற்கு 500 ரூபாய் நோட்டுகள் சிதறி கிடந்துள்ளன. இதை அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் பார்த்துள்ளனர். உடனடியாக சாலையில் கிடந்த ரூ.500 நோட்டுகளைச் சிலர் எடுக்க தொடங்கியுள்ளனர். இதைப் பார்த்த மற்றவர்களும் சிதறிக் கிடந்த 500 ரூபாய் நோட்டுகளை அள்ளி சென்றனர். ஒரே நேரத்தில் திடீரென மக்கள் சாலையில் திரண்டதால் அங்கு டிராபிக் பாதிப்பும் ஏற்பட்டது.
போட்றா வெடிய.. மதுரைக்கு ஆவின் பால் தந்த சர்ப்ரைஸ் பாருங்க.. அதுவும் எத்தனை நாட்கள் தெரியுமா? சபாஷ்
சிசிடிவி காட்சிகள்: இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது. சுமார் ரூ.3 லட்சம் மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகள் அங்குச் சிதறிக் கிடந்ததாக கூறப்படுகிறது. அந்த நோட்டுகள் எப்படி விழுந்தது.. இந்த வீடியோ போலீசார் கவனத்திற்கும் சென்றுள்ளது. திட்டமிட்டு யாராவது வீசி சென்றனரா.. அல்லது எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததா என பல கோணங்களில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
அதேநேரம் இந்த பணம் தொடர்பாக இதுவரை யாருமே புகாரளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதேநேரம் புகார் அளித்தாலும் பொதுமக்கள் பலர் இந்த ரூபாய் நோட்டுகளை அள்ளிச் சென்றதால் அதை மீட்க முடியுமா எனக் கேள்வியும் எழுந்துள்ளது.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications