போட்றா வெடிய.. மதுரைக்கு ஆவின் பால் தந்த சர்ப்ரைஸ் பாருங்க.. அதுவும் எத்தனை நாட்கள் தெரியுமா? சபாஷ்
மதுரை: மதுரை ஆவின் நிறுவனத்தின் குறிப்பிட்ட வகை பால், பாலேடு ஆகியவற்றின் விலை குறைப்பு குறித்து முக்கிய தகவல் வெளியாகியிருக்கிறது. அந்தவகையில், மதுரை ஆவின் நிறுவனம் பால், உப பொருட்களின் விலையை குறைத்துள்ளது..
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் அல்லது ஆவின் (Tamil Nadu Co-operative Milk Producers' Federation Limited-AAVIN) என்பது பால் கொள்முதல், பதப்படுத்துதல், குளிரூட்டுதல் மற்றும் விற்பனை ஆகிய பணிகளை செய்து வரும் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனம் பாலை மதிப்புக்கூட்டி விற்பனை செய்து வருகிறது.

மதுரை மாவட்டம்: இதில் மதுரை மாவட்டம் சாத்தமங்கலம் பகுதியிலுள்ள ஆவின் மத்திய பால்பண்ணையில் இருந்து நாள்தோறும் 2 லட்சம் லிட்டர் பால் ஆவின் பால் பாக்கெட்டுகள் டெப்போக்கள் மூலமாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில், மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் (ஆவின்) நிர்வாகத்தில் தினசரி 1.20 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மதுரை மாவட்டத்துக்கு சர்ப்ரைஸ் தகவல் ஒன்று வந்துள்ளது.. மதுரை ஆவின் பொது மேலாளா் சிவகாமி செய்திக்குறிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது:
அதீத உயர் வெப்பநிலை: "மதுரை ஆவின் நிறுவனத்தில் அதீத உயா் வெப்பநிலையில் தயாரிக்கப்படும் பாலின் விலை ரூ.2 குறைக்கப்பட்டுள்ளது. ஆவின் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்படும் பால், கொழுப்புச்சத்து அடிப்படையில் பிரிக்கப்பட்டு ஆரஞ்ச், பச்சை, நீலம், ஊதா என வகை பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், குளிரூட்ட வேண்டிய அவசியம் இல்லாத பால் வகைகளையும் விற்பனை செய்து வருகிறது. புயல் மழை, உள்ளிட்ட பேரிடா் காலங்கள், நீண்ட தொலைவு பயணங்களின் போதும் இந்த பால் வகைகள் உதவுகின்றன.
பால் வகைகள்: இந்த நிலையில், அதீத வெப்ப நிலையில் தயாரிக்கப்படும் பால் வகைகளில் கொழுப்பு நீக்கப்பட்ட 450 மி.லி. ரூ.30-இல் இருந்து ரூ.28-க்கும், 150 மி.லி. பால் ரூ.12 இல் இருந்து ரூ.10-க்கும் விற்கப்படுகிறது. மேலும், ஆவின் தயாரிப்பான பாலேடு (பன்னீா்) 200 கிராம் ரூ.120-இல் இருந்து ரூ.10 குறைக்கப்பட்டு ரூ.110-க்கும், 500 கிராம் பாலேடு ரூ.300-இல் இருந்து ரூ.275-க்கும் விலை குறைக்கப்பட்டுள்ளது.
இந்தத் தள்ளுபடி விலைகள் கடந்த 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. இது டிசம்பா் 31-ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். எனவே, பொதுமக்கள் இவற்றை வாங்கி பயனடையலாம் என்றாா்.
கோரிக்கை: ஆவின் நிறுவனம் பால், உப பொருட்ளின் விலையை ரூ.2 குறைத்துள்ளது மதுரைவாசிகளுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது. ஆனால், விலையை ஏற்றும் போது இருந்த வேகம் விலையை இறக்கும்போது இல்லையே என்று கவலை தெரிவித்துள்ள மக்கள், டிசம்பா் 31ம் தேதி வரை மட்டுமே கொண்டுவரப்பட்டுள்ள இந்த நடைமுறையை, தொடர்ந்து அமல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கையை விடுத்து வருகிறார்கள்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications