உதயநிதி தூக்கிய எய்ம்ஸ் செங்கல்.. எங்கெல்லாம் சுத்துது.. மீம்ஸ் ஆக மாறிய லாரி
மதுரை: உதயநிதி தூக்கிய எய்ம்ஸ் செங்கல் மதுரை முழக்க வலம் வருகிறது. எய்ம்ஸ் செங்கல் என்ற பெயரில் ஒருவர் லாரியில் செங்கல் வியாபாரம் செய்து வருகிறார். அந்த லாரி வைரலாகி வருகிறது.
Recommended Video
என்ன இது... லாரி ஓனர்லாம் மீம்ஸ் போட கெளம்பிட்டீங்க? நாங்க என்னிக்காவது லாரி ஓனர் ஆகனும், உங்க தொழிலுக்கு போட்டியா வரனும்னு நினைச்சோமா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தி.மு.க வேட்பாளர்களுக்கு வாக்குச் சேகரிக்கும் பணியில் அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கடந்த மார்ச் தீவீரமாக ஈடுபட்டார். அ.தி.மு.க., பா.ஜ.க கூட்டணிக்கு எதிராக பல்வேறு யுக்திகளைத் தனது பரப்புரையின் மூலம் வெளிப்படுத்தும் விதமாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை மையமாகவைத்துச் செய்த பிரச்சாரம் செய்தது வைரலானது.

மதுரை எய்ம்ஸ்
"மதுரையில் மூன்று வருஷத்துக்கு முன்னாடி அ.தி.மு.க - பா.ஜ.க அரசுகள் மதுரையில எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிக் கொடுத்தாங்க. உங்களுக்கு ஞாபகம் இருக்கா? அதை நான் கையோட எடுத்துக்கிட்டு வந்திருக்கேன்" என்றவர், செங்கல் ஒன்றை எடுத்துக் காட்டினார். இதுதான் அவங்க கட்டிக் கொடுத்த எய்ம்ஸ் மருத்துவமனை" என்று கூற கூட்டத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தினார்.

செங்கல் திருட்டு
அடுத்த கட்டமாக எய்ம்ஸ் கட்டப்படவிருக்கும் வளாகத்திலிருந்து உதயநிதி ஸ்டாலின் செங்கல்லைத் திருடிவிட்டார் என்று பா.ஜ.க நிர்வாகி ஒருவர் புகார் அளித்து அதற்கு மேல் அதிர்ச்சி அளித்தார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காவல் நிலையத்தில் பா.ஜ.க நிர்வாகி நீதிப்பாண்டியன் என்பவர் கொடுத்த புகாரில், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்க்காக பாரத பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களால் கடந்த 27.01.2019-ம் தேதியில் அடிக்கல் நாட்டப்பட்து. அதைத் தொடர்ந்து கடந்த 01.012.2020-ம் தேதியன்று பூமி பூஜையுடன் எய்ம்ஸ் மருத்துவமனைக்குத் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் 5.50 கிலோமீட்டர் சுற்றளவில் சுற்றுச் சுவர் கட்டும் பணி நடைபெற்றுவருகிறது.

விளாத்திகுளம்
சொத்தின் பாதுகாப்புக்காக கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை சுற்றுச்சுவர் வளாகத்துக்குள்ளிருந்து செங்கல்லை தி.மு.க-வின் மாநில இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திருடியிருக்கிறார். இந்த உண்மையை அவரே 25.03.2021 விளாத்திகுளம் பேருந்து நிலையத்துக்கு முன்பு நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் ஒப்புக்கொண்டதோடு மட்டுமல்லாமல் தான் திருடிக்கொண்டு வந்த அந்தச் செங்கலையும் அங்கே கூடியிருந்த பொதுமக்களிடத்தில் எடுத்துக் காண்பித்தார் என்று புகாரும் கொடுத்தார்.

தேர்தலில் கவனம்
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் செய்த அரசியல் சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின் போது பெரும் கவனத்தைப் பெற்றது. இந்நிலையில் மதுரையை சேர்ந்த லாரி உரிமையாளர் மதுரை எய்ம்ஸ் பிரிக்ஸ் அதாவது மதுரை எய்ம்ஸ் செங்கல் என்று லாரிக்கு பெயர் வைத்துள்ளார்.

எய்ம்ஸ் செங்கல் லாரி
லாரியின் முன் பக்கத்தில் எழுதி உள்ளார். இதை பார்த்து நெட்டிசன் ஒருவர் .... என்ன இது... லாரி ஓனர்லாம் மீம்ஸ் போட கெளம்பிட்டீங்க? நாங்க என்னிக்காவது லாரி ஓனர் ஆகனும், உங்க தொழிலுக்கு போட்டியா வரனும்னு நினைச்சோமா? என்று கிண்டல் செய்துள்ளார். சமூக வலைதளங்களில் இந்த லாரி வைரலாகி வருகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications