Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மனமகிழ் மன்றங்களில் மது விற்பனை.. கண்டு கொள்ளாத காவல்துறை! அதிரடியாக உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்.!

Subscribe to Oneindia Tamil

மதுரை: தமிழகத்தில் மனமகிழ் மன்றங்களின் பெயரில் மது விற்பனை நடைபெறுவது பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாகக் குறிப்பிட்டு, இதுபோன்ற அனுமதிகள் வழங்கப்படுவது குறித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கடும் அதிருப்தியை பதிவு செய்துள்ளது.

தமிழகத்தில் சில்லரை மதுபான விற்பனை முழுமையாக அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் நிறுவனத்தின் மூலமே நடைபெறுகிறது. தனிநபர்களுக்கு நேரடியாக சில்லரை மதுபான கடைகள் நடத்த உரிமம் வழங்கப்படுவதில்லை.

ஆனால் நடைமுறையில், சில தனிநபர்கள் சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ் மனமகிழ் மன்றங்களை பதிவு செய்து, அதற்கான உரிமங்களை பெற்று மதுபானங்களை விற்பனை செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாகவும் கூறப்பட்டுள்ளது.

High Court liquor Alanganallur

இந்த விவகாரம் தொடர்பாக மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த தண்டலை சதீஷ்குமார் மற்றும் சோனைமுத்து ஆகியோர் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவைக் காண ஆண்டுதோறும் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வருவதாகவும், அந்த பகுதியில் டாஸ்மாக் கடைகள் இல்லாத நிலையில் மனமகிழ் மன்றம் ஒன்றுக்கு மது விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டிருப்பது விதிமீறலாக உள்ளதாகவும் கூறியிருந்தனர்.

மேலும், அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 36 கிராமங்கள் உள்ளதாகவும், இக்கிராமங்களில் டாஸ்மாக் கடைகள் தொடங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்தந்த ஊராட்சிகள் முன்பே தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளதாகவும் மனுதாரர்கள் தெரிவித்தனர். குறிப்பாக தண்டலை, புதுப்பட்டி மற்றும் மேட்டுப்பட்டி போன்ற கிராமங்களில் மதுக்கடைகள் தொடங்கக் கூடாது என தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருந்த நிலையிலும், அந்த எதிர்ப்புகளை கருத்தில் கொள்ளாமல் மனமகிழ் மன்றத்திற்கு உரிமம் வழங்கப்பட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிடும்போது, விதிகளின்படி ஒரு கிளப் தொடங்கி மூன்று ஆண்டுகள் பூர்த்தியான பின்னரே மதுபான விற்பனை உரிமம் வழங்கப்பட வேண்டும் என்றும், ஆனால் இவ்வழக்கில் அந்த கிளப் தொடங்கி ஓராண்டு மட்டுமே ஆகியிருந்தபோதும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும், காவல்துறை தரப்பில் முறையான ஆய்வு செய்யாமல் தடையில்லாச் சான்று வழங்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த வழக்கை நீதிபதிகள் என்.சதீஷ்குமார் மற்றும் எம்.ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. விசாரணையின் போது, தமிழகத்தில் சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ் பல மனமகிழ் மன்றங்கள் பதிவு செய்யப்பட்டு வருவதாகவும், அவற்றின் பெயரில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவது வழக்கமாகிவிட்டதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். மேலும், இத்தகைய மன்றங்களின் மூலம் மது விற்பனை நடைபெறுவது அப்பகுதி மக்களின் அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

மதுவிலக்கு சட்டம் மாநிலத்தில் மதுபானங்கள் மற்றும் மயக்க மருந்துகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாட்டை கட்டுப்படுத்துவதற்காகவே கொண்டு வரப்பட்டதாகவும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். அதேபோல், பொது இடங்களில் மது போதையில் இருப்பது அல்லது அனுமதியின்றி தனியார் இடங்களில் மது அருந்தி போதையில் இருப்பது கண்டறியப்பட்டால், அதற்காக மூன்று மாதங்கள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.1000 வரை அபராதம் விதிக்கப்படலாம் என்றும் நீதிமன்றம் நினைவூட்டியது.

இந்த வழக்கில், உள்ளாட்சி அமைப்புகள் இரு முறை தீர்மானம் நிறைவேற்றி எதிர்ப்பு தெரிவித்திருந்தபோதும், அதனை சரியாக பரிசீலிக்காமல் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தடையில்லாச் சான்று வழங்கியிருப்பது குறித்து நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்தது. பொதுநலனுக்கு பாதிப்பு ஏற்படுமா, உள்ளாட்சி அமைப்புகளின் தீர்மானங்கள் என்ன, உரிமம் வழங்குவதற்கான விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளனவா என்பன அனைத்தும் முழுமையாக ஆய்வு செய்யப்பட்ட பிறகே அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் வலியுறுத்தினர். இந்த அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு, தண்டலை பகுதியில் செயல்பட்டு வந்த மனமகிழ் மன்றத்திற்கு வழங்கப்பட்டிருந்த மதுபான விற்பனை உரிமத்தை ரத்து செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+