கையாலேயே ஹார்ட்டின் விட்டாரே! காதல் மன்னன் நாகர்கோவில் காசி.. இப்போ எப்படி இருக்கார் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

மதுரை: பல பெண்களை ஏமாற்றி பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நாகர்கோவில் காசியின் ஜாமின் மனுவை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. ஆயுள் தண்டனையை நிறுத்திவைத்து ஜாமின் வழங்கக்கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். அதற்கு அரசுத் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஜாமின் மறுக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் தங்கபாண்டியன். இவர் அப்பகுதியில் பிரபல சிக்கன் நிறுவனத்தின் லோக்கல் டீலராக இருந்திருக்கிறார் இவரது மகனான 29 வயது காசி அப்பகுதியில் காதல் மன்னனாக வலம் வந்திருக்கிறார்.

high court cbcid

இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்கில் காஸ்ட்லி பைக், ஜிம் வீடியோ என கலக்கலாக போட்டோ போட்டு கோடீஸ்வரன் போல தன்னை காட்டிக் கொண்ட அவர் பல பெண்களை, குறிப்பாக வசதியான இளம் பெண்களை குறி வைத்து பழகி இருக்கிறார்.

முதலில் நட்பாக பழகி பிறகு அவர்களை காதலிப்பதாக கூறி தனிமையில் அழைத்துச் சென்று எல்லை மீறி இருக்கிறார் இந்த காதல் மன்னன் காசி. இளம் பெண்களை ஆசை வார்த்தி கூறி தனிமையான இடங்களுக்கும், ஹோட்டல் அறைகளுக்கும் அழைத்துச் சென்று அவர்களுடன் நெருக்கமாக இருந்துள்ளார்.

தொடர்ந்த அதனை வீடியோ மற்றும் புகைப்படங்களாக எடுத்து வைத்துவிட்டு சில நாட்கள் கழித்து அதனை வைத்து மிரட்டி பெண்களிடம் பணம் பரித்து வந்திருக்கிறார். அந்த பணத்தைக் கொண்டு மேலும் பில்டப் செய்து வேறு பெண்களை ஏமாற்றுவது தான் இவனுக்கு வேலை என்கின்றனர் போலீசார். இந்நிலையில் தன்னிடம் சிக்கிய சில பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் காசியால் பாதிக்கப்பட்ட இளம் பெண் ஒருவர் காசியின் அத்துமீறல் குறித்து காவல்துறையில் புகார் அளித்தார். இதை அடுத்து காசி மீது அடுத்தடுத்து பல புகார்கள் குவிந்தன. ஒரு கட்டத்தில் வழக்கு சிபிசிஐடி போலீஸ் வசம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், தமிழ்நாடு மட்டுமல்லாமல் புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும், பெண்கள் மட்டுமல்லாது பள்ளி சிறுமிகளையும் காசி மிரட்டி பணம் பறித்து வந்ததும் பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரிய வந்தது.

காசி மட்டுமல்லாது காசியின் நண்பர்களான தினேஷ், பேஷன் உள்ளிட்டோருக்கும் இதில் தொடர்பிருக்கும் நிலையில், அவர்களும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். மேலும் காசி தொடர்பான ஆதாரங்களை அழித்த காரணத்திற்காகவும் சாட்சியங்களை கலைக்க முயன்றதாக காசியின் தந்தை தங்க பாண்டியனும் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் இந்த வழக்கு நாகர்கோவில் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட காசி மீதான புகார் அனைத்தும் நிருபிக்கப்பட்டது.

இதனையடுத்து சாகும் வரை ஆயுள் தண்டனை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி காசி சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் நாகர்கோயில் காசி தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அந்த மனவில் தனது ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்து தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனு விசாரணைக்கு வந்த போது அரசு தரப்பில் ஜாமீன் வழங்கப்படும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதை அடுத்து ஜாமின் வழங்க மறுத்த நீதிபதிகள் இது தொடர்பாக சிபிசிஐடி பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+