மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மதுரை சித்திரை திருவிழா இந்தாண்டு ரத்து.. சிவாச்சாரியார்கள் முன்னிலையில் மீனாட்சி திருக்கல்யாணம்

Google Oneindia Tamil News

மதுரை: இந்த ஆண்டு மதுரை சித்திரை திருவிழா ரத்து செய்யப்படுவதாக, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Recommended Video

    மதுரை சித்திரைத் திருவிழா நிகழ்ச்சிகள் நிறைவடைந்தது

    144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் வேறு வழி இல்லாமல் கோயில் திருவிழா தள்ளி வைக்கப்படுவதாக தெரிகிறது.

    Madurai chithirai festival 2020 will not happen but Thirukkalyanam will be held

    மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை உலகப்புகழ் பெற்றது. தமிழகத்தில் நடைபெறும் மிகப்பெரிய ஆன்மீக விழாக்களில் சித்திரை திருவிழாவும் ஒன்றாகும்.

    இந்த ஆண்டு சித்திரை திருவிழா ஏப்ரல் 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க இருந்தது. கொரோனா பிரச்சினையால் தற்போது மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால், சித்திரை திருவிழா நடைபெறுமா என்ற ஐயம் ஏற்பட்டது. இதுகுறித்து கோவில் நிர்வாகம் ஆய்வு செய்து வந்தது. இந்த நிலையில், இந்த ஆண்டு, சித்திரை திருவிழா நடைபெறாது என்று, கோவில் நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது.

    தூய்மை பணியாளர்கள் கால்களில் விழுந்து வணங்கிய அமைச்சர் உதயகுமார்.. நெகிழ்ச்சிதூய்மை பணியாளர்கள் கால்களில் விழுந்து வணங்கிய அமைச்சர் உதயகுமார்.. நெகிழ்ச்சி

    மே 2ம் தேதி நடக்கவிருந்த மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், மே 3ம் தேதி நடக்கவிருந்த திக்விஜயம் ஆகியவை நடைபெறாது. அதேநேரம், மே 4ம் தேதி மீனாட்சியம்மன், சொக்கநாதர் திருக்கல்யாணம் நடைபெறும். 4 சிவாச்சாரியார்கள் முன்னிலையில், இந்த விழா நடைபெறும். அன்றைய தினம் காலை 9.05 மணி முதல் காலை 9.25 மணிவரை திருக்கல்யாணம் நடைபெறும் நேரத்தில், வீட்டிலிருந்தபடியே, பெண்கள் புதுத்தாலி மாற்றிக்கொள்ளலாம்.

    www.maduraimeenakshi.org என்ற இணையதளத்தில் திருக்கல்யாண நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Madurai chithirai festival 2020 will not happen but Thirukkalyanam will be held on May 4th, says Temple.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X