Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜக வேண்டாம்.. முழுக்கு போட்ட டாக்டர் சரவணன்.. பிடிஆரை சந்தித்து மன்னிப்பு கேட்ட கையோடு அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை மாநகர் பாஜக தலைவராக இருந்த டாக்டர் சரவணன் திடீரென்று அக்கட்சியில் இருந்து விலகினார். திமுகவின் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை சந்தித்து கட்சியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.

மதுரை மாநகர் பாஜக தலைவராக செயல்பட்டு வந்தவர் டாக்டர் சரவணன். மதுரையில் மருத்துவமனை நடத்தி வரும் இவர் திமுகவில் இணைந்து எம்எல்ஏ வாக இருந்தார்.

கடந்த சட்டசபை தேர்தலில் திமுகவில் சீட் கிடைக்காததால் அவர் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். பாஜகவில் சேர்ந்தவுடன் அவருக்கு மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. இருப்பினும் அவர் அந்த தேர்தலில் தோல்வியடைந்தார்.

கட்சியில் இருந்து விலகல்

கட்சியில் இருந்து விலகல்

இதையடுத்து மதுரை மாநகர் பாஜக தலைவராக செயல்பட்டு வந்தார். மதுரை மாநகரில் பாஜகவை வளர்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் தான் நேற்று இரவு டாக்டர் சரவணன் திடீரென்று பாஜகவில் இருந்து விலகி உள்ளார். மதுரையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை சந்தித்து பேசிய பிறகு டாக்டர் சரவணன் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

வருத்தமளிக்கிறது

வருத்தமளிக்கிறது

இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛நாங்கள் அஞ்சலி செலுத்தியபோது விரும்பதகாத செயல் நடந்துள்ளது. இது மனதை உறுத்தியது. காலையில் நடந்த காலணி வீச்சு சம்பவம் மனஅமைதியை கெடுத்துவிட்டது. மனஉளைச்சல் ஏற்பட்டது. பாஜகவின் மத வெறுப்பு அரசியல் பிடிக்கவில்லை. எனது வருத்தத்தை அவரிடம் கூறினேன்.

மன்னிப்பு கேட்க வந்தேன்

மன்னிப்பு கேட்க வந்தேன்

பாஜக தொண்டர்கள் கட்டுப்பாட்டை மீறி நடந்து கொண்டது வருத்தமளிக்கிறது. இப்போது மன நிம்மதியாக இருக்கிறது. தூக்கம் வராததால் அவரை சந்தித்தேன். இப்போது நிம்மதியாக தூங்குவேன். நான் வந்தது கட்சிக்கு தெரியாது. பதவியை விட மனநிம்மதி தான் வேண்டும். பாஜகவில் இனி தொடர மாட்டேன்'' எனக்கூறி கட்சியில் இருந்து விலகினார்.

காலணி வீச்சு சம்பவம்

காலணி வீச்சு சம்பவம்

முன்னதாக ஜம்மு காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தில் கடந்த 11ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் மதுரை மாவட்டம் டி.புதுப்பட்டியை சேர்ந்த ராணுவவீரர் லட்சுமணனும் வீரமரணம் அடைந்தார். இவரது உடலுக்கு மதுரை விமான நிலையத்தில் வைக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு சார்பில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது மரியாதை செலுத்தும் விஷயத்தில் பாஜகவினருக்கும், பழனிவேல் தியாகராஜனுக்கு இடையே வார்த்தை போர் ஏற்பட்டது. இதையடுத்து பழனிவேல் தியாகராஜன் சென்ற கார் மீது பாஜகவினர் காலணி வீசப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து தான் இன்று இரவு டாக்டர் சரவணன் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை அவரது இல்லத்தில் சந்தித்து பேசி பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+