முதல் மாநகராட்சி பெண் கமிஷனராக சித்ரா விஜயன் நியமனம்.. இவங்க யார் தெரியுமா? வாவ், சூப்பர்
மதுரை: மதுரை மாநகராட்சியில் 2024 பிப்ரவரி2ம் தேதி பொறுப்பேற்றிருந்த கமிஷனர் தினேஷ்குமார், தற்போது டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளார்.. இவருக்கு பதிலாக சித்ரா விஜயன், மதுரை மாநகராட்சி கமிஷனாக நியமிக்கப்பட்டுள்ளார். யார் இவர்?
மதுரையை பொறுத்தவரை தமிழ்நாட்டின் பழமையான பெரிய நகரங்களில் ஒன்று. சென்னை, கோவைக்கு அடுத்தபடியாக அதிகப்படியான மக்கள் வாழும் நகரம் மதுரையாகும்.. மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன..

ஆனால், கடந்த சில வருடங்களாகவே, ஆணையர்கள் அடிக்கடி மாற்றப்படுவதாக ஒரு பேச்சு எழுந்தது.. இதற்கு காரணம், மேயர், அமைச்சர், ஆளுங்கட்சி மாவட்ட பொறுப்பாளர் என 3 பேர், மாநகராட்சி நிர்வாகத்தில் தலையிடுகிறார்களாம்.
மாநகராட்சி: மதுரை மாநகராட்சி கமிஷனரால் சுதந்திரமாகச் செயல்பட முடியவில்லை என்றும், அரசியல் நெருக்கடிகளை சமாளித்து நிர்வாக ரீதியான பணிகளை கையில் எடுப்பதற்குள் மாநகராட்சி ஆணையரையே மாற்றி விடுவதாகவும், நிறைய விமர்சனங்கள் எழுந்தன. எனினும், அவையெல்லாம் முறியடிக்கப்பட்டு, பல்வேறு பணிகளும் செயல்படுத்தப்பட்டன..
அத்துடன், நேரடி ஆய்வுகளை மேற்கொண்டு, சாக்கடைப் பிரச்சனைகள், குடிநீரில் கழிவு நீர் கலப்பது உள்ளிட்ட பிரச்சனைகள் தீர்க்கப்பட்டும் வருகின்றன.
குறிப்பாக, மதுரை மாநகராட்சியில் 2024 பிப்ரவரி2ம் தேதி பொறுப்பேற்றிருந்த கமிஷனர் தினேஷ்குமார் நகர் பகுதியில் குப்பையை அகற்றும் நடவடிக்கையை தீவிரப்படுத்தினார். ரோடுகளில் சுற்றித்திரியும் மாடுகள் தொல்லையை கட்டுப்படுத்தினார். பல நிறுவனங்களிடமிருந்து பல லட்சம் வரி நிலுவையை கறார் காட்டி வசூலித்தார். மாநகராட்சி பணியாளர்கள், அதிகாரிகள், கவுன்சிலர்கள் என அனைத்து தரப்பினரின் கோரிக்கைகளை நிறைவேற்றி பாராட்டுக்களை பெற்றார்..
இணைய இயக்குனர்: இந்நிலையில், இப்போது தினேஷ்குமார் கிருஷ்ணகிரி கலெக்டராக மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, சித்ரா விஜயன் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.. தமிழக மின்ஆளுமை துறை இணை இயக்குனரான சித்ரா விஜயன் புதிய பொறுப்பை ஏற்றுள்ளார்.. கேரளாவை சேர்ந்த இவர், 2019 பேட்ச் ஐ.ஏ.எஸ்., அதிகாரி. திருச்சி, தர்மபுரியில் சப் கலெக்டராக பணியாற்றியவர். அத்துட்ன, ஊரக மேம்பாட்டு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை இயக்குநராகவும் இருந்தார்.
1971ல் மதுரை நகராட்சி மாநகராட்சியான பிறகு முதல் பெண் கமிஷனராகவும், 71வது கமிஷனராகவும் சித்ரா விஜயன் பொறுப்பேற்க உள்ளது, மதுரைக்கே மிகப்பெரிய பெருமையை தந்து வருகிறது.
முதல்முறை: இதனிடையே, மதுரை மாநகராட்சியில் 4 லட்சத்து 12 ஆயிரம் கட்டிடங்களுக்கு சொத்துவரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, மதுரை மாநகராட்சியில் சொத்து வரி செலுத்த கோரி முதல்முறையாக 4 லட்சத்து 12 ஆயிரம் கட்டிடங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் நோட்டீஸ் அனுப்புவது மதுரை மாநகராட்சி வரலாற்றிலேயே இதுவே முதல் முறை என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications