தமிழகம் மகிழ்ச்சி அடைவது எப்போது? அதிர வைக்கும் அஜித் ரசிகர்கள்.. போஸ்டரால் மதுரையில் பரபரப்பு!
மதுரை: நடிகர் அஜித்குமாரை அரசியலுக்கு அழைக்கும் வகையில் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுளள்து.
நடிகர் அஜித்குமார் திரைத் துறைக்கு வந்து இன்றுடன் 30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அமராவதி தொடங்கி அண்மையில் வெளியாகிய வலிமை வரை அஜித்குமார் உச்சத்திலேயே இருந்து வருகிறார். இடையிடையே சில சரிவுகள் காணப்பட்டாலும், தன்னைத் தானே செதுக்கிக்கொண்டு அசாத்திய ரசிகர் படையைக் கொண்டு தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார்.

ஒரு படம் ரிலீஸாவதற்கு முன் படத்தின் பேனர்கள் மற்றும் போஸ்டர்களில் வருங்கால முதலமைச்சரே, பிரதமரே, மன்னா என்றெல்லாம் அடுக்கு மொழிகளில் வசனங்கள், பாலாபிஷேகம் என ரசிகர் மன்றங்கள் மூலம் நடிகர்கள் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் சினிமா வாழ்க்கையின் உச்சத்தில் இருந்தபோதே, நடிகர் அஜித் அனைத்து ரசிகர் மன்றங்களையும் அதிரடியாக கலைத்து அதிர்ச்சி கொடுத்தார்.
ஆனால் அதன்பின்னரே ரசிகர்கள் அஜித்தை அதிகமாக பின்தொடர்ந்தனர். அதேபோல் தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்கள் ஏராளமானோர் அரசியலுக்கு வந்துள்ளனர். அதேபோல் இன்னும் சிலர் காத்திருக்கின்றனர். அவ்வப்போது அதிமுக தலைவர்கள் சிலர் அஜித்தையும் அரசியலுக்கு அழைத்தும் உள்ளனர். இருந்தும் அஜித் இதுவரை வாக்களிப்பதை தவிர்த்து, வேறு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதில்லை.
இந்த நிலையில் நடிகர் அஜித் திரைத் துறைக்கு வந்து 30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை கொண்டாடும் வகையில் மதுரை அஜித் ரசிகர்கள் அடித்துள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த போஸ்டரில், "பயணங்கள் முடிவதில்லை. 30 வருட திரையுலக பெருமிதம் இப்போது. தமிழகம் பெரும் மகிழ்ச்சி அடைவது எப்போது?" என்ற வசனம் இடம்பெற்றுள்ளது.
அதுமட்டுமல்லாமல், தலைமைச் செயலக கட்டத்தின் பின்னணியோடு அஜித் நிற்பது போன்ற புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. இதனால் எவ்வித பிரச்னையும் வேண்டாம் என்று விலகி சினிமாவையும், சொந்த வாழ்க்கையையிலும் ஈடுபட்டு வரும் அஜித்குமாரை, ரசிகர்கள் அரசியலுக்கு அழைத்துள்ளனர். இதனால் மதுரை மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications