"அதே பப்ஸ், அதே அளவு..ஆனால் ஜிஎஸ்டியால் விலைமட்டும் கூடிருச்சு" மாணவியின் கேள்வியால் அசந்துபோன சு.வெ
மதுரை: ஜிஎஸ்டி வரிவிதிப்பால் பப்ஸ் விலை உயர்ந்தது குறித்து பாத்திமா கல்லூரி மாணவி எழுப்பிய கேள்விக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அளித்த பதில் சமூக வலைதளங்களில் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
மத்திய, மாநில அரசுகளால் விதிக்கப்பட்டு வந்த பல்வேறு மறைமுக வரிகளுக்கு பதிலாக, ஒற்றை வரியாக ஜிஎஸ்டி வரி மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டது. 2017ம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட இந்த வரிவிதிப்பிற்கு பல்வேறு மாநிலங்கள் முதலில் எதிர்ப்பு தெரிவித்தாலும், நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பின் போது பெரும்பாலான கட்சிகள் ஆதரவளித்தன.
இதனைத்தொடர்ந்து ஜிஎஸ்டி வரிவிதிப்பில் ஒவ்வொரு முறை மாற்றம் செய்யப்படும் போது, மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்கள் மீதான விலை அதிகரித்தது. இதற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் தொடர்ந்து எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன. ஏன் இன்றும் கூட ஜிஎஸ்டி வரி உயர்வு, விலைவாசி உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

ஜிஎஸ்டி பற்றி முதல்வர்
நேற்று நடைபெற்ற தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜிஎஸ்டி வரிவிதிப்பால் மாநில அரசுகளின் வருவாய் குறைந்துள்ளது. இதனால் ஜிஎஸ்டி இழப்பீட்டை மேலும் 2 ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். இந்த அளவுக்கு ஜிஎஸ்டி வரிவிதிப்பு மக்கள் மத்தியிலும், மாநில அரசுகள் மத்தியிலும் விவாதிக்கப்பட்டு வருகிறது.

ஆசிரியர் தின நிகழ்ச்சி
இந்த நிலையில் மதுரை பாத்திமா கல்லூரியில் நடைபெற்ற ஆசிரியர் தின கொண்டாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கலந்துகொண்டு, கல்லூரியில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்தினார். இதனைத்தொடர்ந்து சு.வெங்கடேசன் உடனான ஆசிரியர் மற்றும் மாணவர்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாணவியின் கேள்வி
அப்போது கல்லூரி மாணவி ஒருவர் எழுந்து, இந்தியாவில் ஜிஎஸ்டி, எஸ்ஜிஎஸ்டி, சிஜிஎஸ்டி என்று விலையேறிக் கொண்டே செல்கிறது. ஒரு பாத்திரம் வாங்கினால் கூட ரூ.50 கூடுதல் செலவாகிறது. இவ்வளவு ஏன், ஒரு பப்ஸ் கூட விலையேறிவிட்டது. ரூ.10க்கு விற்பனையாகிய பப்ஸ், இப்போது ஜிஎஸ்டி-யால் ரூ.15க்கு விற்பனையாகிறது. ஆனால் பப்ஸ்-ன் அளவோ பெரிதாக கூடவில்லை.
இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள். இதில் மாற்றம் கொண்டு வர முடியுமா? மாற்றம் கொண்டு வர என்ன செய்ய வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.

அசந்துபோன சு.வெங்கடேசன்
இதற்கு பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மாணவியின் கேள்விக்கு எனது பாராட்டுகள். ஏனென்றால் இதே கேள்வியை தான் நான் நாடாளுமன்றத்தில் பப்ஸ்-க்கு பதில் அரிசி விலை உயர்ந்தது ஏன் என்று கேள்வி எழுப்பினேன். ஏன் உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி என்றும் கேள்வி எழுப்பினோம்.

சு,வெங்கடேசன் பதில்
இதற்கு அனைத்து மாநில நிர்வாகிகளும் சேர்ந்து ஜிஎஸ்டி கவுன்சிலில் எடுத்த முடிவு என்று பதில் சொல்லப்பட்டது. தவறான முடிவை அனைவரும் சேர்ந்து எடுத்தாலும், தப்பு தான். விலை உயர்த்தப்பட்டது ஏன் என்று சாப்பிடும் அனைவரும் கேள்வி எழுப்பத் தொடங்கினால், பப்ஸ் விலை தானாக குறையும் என்று தெரிவித்தார். சொந்த வாழ்க்கை அனுபவத்தில் இருந்து பொருளாதாரம் பற்றி கேள்வி எழுப்பிய மாணவிக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications