Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆணாக மாறிய தோழியை மணந்த இளம்பெண்.. உறவினர்கள் தொல்லை..மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Subscribe to Oneindia Tamil

மதுரை: ஆணாக மாறி தோழியை மணந்த இளம்பெண் தொடர்ந்த வழக்கில், பெண்ணின் சொந்த விருப்பப்படி வாழ அனுமதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

ஆணும் பெண்ணும் காதலித்து திருமணம் செய்வது இயற்கையானது என்று காலம் காலமாக சொல்லப்பட்டு வந்தாலும் இயற்கைக்கு மாறாக ஆணும் ஆணும் காதலிப்பதும், பெண்ணும் பெண்ணும் காதலிப்பதும் ஆங்காங்கே நடைபெறுககிறது.

Madurai High Court bench orders to young girl who married a friend who turned into a man

ஓரினச் சேர்க்கை குற்றமில்லை என இன்று இந்திய உச்ச நீதிமன்றம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தீர்ப்பளித்தது. இது தொடர்பாக தண்டனையை வரையறுத்த இந்திய தண்டனைச் சட்டம் 377-வது பிரிவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.

இதனிடையே திருநம்பி ஒருவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தொடர்ந்த வழக்கில், ஓரினச்சேர்க்கை, பாலினம் மாறியவர்கள் சங்கத்தின் உறுப்பினராக உள்ளேன். கடந்த ஒரு வருடமாக நானும், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 21 வயது இளம் பெண்ணும் ஒருவரை ஒருவர் காதலித்தோம். கடந்த 7ஆம்தேதி என் காதலியை திருமணம் செய்து கொண்டேன்.

நாங்கள் அமைதியான முறையில் குடும்பம் நடத்தினோம். இந்தநிலையில் என் மனைவியின் குடும்பத்தினர் திடீரென எங்கள் வீட்டிற்குள் நுழைந்து என்னை தாக்கினர். பின்னர் என் மனைவியை கடத்திச் சென்றுவிட்டனர். அவரை மீட்டுத் தரக்கோரி போலீசாரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.

இதற்கிடையே என் மனைவியின் உறவினர்கள், ஓரின ஈர்ப்பு உறவை விட்டுவிடுமாறு வலியுறுத்தி, அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இதற்காக பல்வேறு இடங்களுக்கு அழைத்துச்சென்று தகாத மருத்துவ சிகிச்சையும் அளித்ததாக தெரிகிறது. விருப்பத்திற்கு மாறாக அவரை அடைத்து வைத்துள்ளனர். இது சம்பந்தமாக காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஓரினச்சேர்க்கையாளர்களிடம் பாகுபாடு காட்டக்கூடாது என்று ஏற்கனவே உயர்நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது. என் மனைவியின் உயிருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படக்கூடாது. என் மனைவியை மீட்டு ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஹேமலதா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மனுதாரரின் தோழி 21 வயது நிரம்பியவர். எனவே அவரது சொந்த விருப்பப்படி வாழ்வதற்கான முடிவு எடுக்க அனுமதிக்கப்படுகிறது என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+