நகை பறிப்பு வழக்கு.. குற்றவாளியை கண்டுபிடிக்காவிட்டாலும் இழப்பீடு தருக.. மதுரை ஹைகோர்ட் அதிரடி!
மதுரை: ஒரு பெண்ணின் நகை பறிக்கப்பட்ட வழக்கில், குற்றவாளியைக் கண்டுபிடிக்காவிட்டாலும் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நிவாரணம் கொடுக்க வேண்டும் என சட்டம் கூறுகிறது என்றும், எனவே நகையை பறிகொடுத்த பெண்ணிற்கு இழப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒரு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
2022ஆம் ஆண்டு திருச்சியைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் 8 சவரன் நகை பறித்து செல்லப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பான பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் இழப்பீடு கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் முன்பாக வந்தது.

அப்போது நீதிபதிகள் தரப்பில், பெண்ணின் நகை பறிக்கப்பட்ட வழக்கில், குற்றவாளியைக் கண்டுபிடிக்காவிட்டாலும் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நிவாரணம் கொடுக்க வேண்டும் என சட்டம் கூறுகிறது. எனவே நகையை பறிகொடுத்த பெண்ணிற்கு இழப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒரு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications