Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பரங்குன்றம் மலையில் சந்தனக்கூடு விழாவுக்கு அனுமதி! கந்தூரி விழா - மாமிசம் சமைக்க ஹைகோர்ட் தடை

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் மலை தர்காவில் சந்தனக்கூடு விழாவுக்கு மட்டும் மதுரை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. சந்தனக்கூடு விழாவில் 50 நபர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும், கந்தூரி போன்ற விழாக்கள் நடத்தக்கூடாது, கால்நடைகளை பலியிடவோ, மாமிசம் சமைக்கவோ கூடாது என்று மதுரை உயர்நீதிமன்றம் இன்று அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் முருகனின் முதலாம் படை வீடான திருப்பரங்குன்றம் அமைந்துள்ளது. மலையில் உச்சியில் சிக்கந்தர் தர்கா உள்ளது. இந்நிலையில் தான் கார்த்திகை நாளில் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற மதுரை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

ஆனால் அது நிறைவேற்றப்படவில்லை. இதுதொடர்பான மேல்முறையீடு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

thiruparamkundram dhargah kanduri festival

இதற்கிடையே தான் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள சிக்கந்தர் தர்காவில் சந்தனக்கூடு விழாவுக்கு ஏற்பாடுகள் தொடங்கின. இந்நிலையில் தான் மதுரை சோலை அழகுபுரத்தை சேர்ந்த மாணிக்கமூர்த்தி என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் சந்தனக்கூடு விழாவுக்கு தடை கோரி மனுத்தாக்கல் செய்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், ‛‛திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சிக்கந்தர் தர்கா அமைந்துள்ளது. கடந்த ஆண்டு கந்தூரி விழா நடத்தி அசைவ உணவுகள் பரிமாற ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு எதிரான வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிடவும், அசைவ உணவுகளை பரிமாறவும் தடைவிதிக்கப்பட்டது.

இதுதொடர்பான உரிமையை நிலைநாட்ட உரிமையியல் நீதிமன்றத்தை அணுகவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் தர்கா சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட தடை விதித்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு இறுதியானதாக உள்ளது. இதற்கிடையே தான் சிக்கந்தர் தர்காவில் 2025 டிசம்பர் 21ம் தேதி முதல் ஜனவரி 6ம் தேதி வரை கந்தூரி மற்றும் சந்தனக்கூடு விழா நடைபெறுகிறது. இந்த விழாவுக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்'' என கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு இன்று மதுரை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அரசு சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. அப்போது ‛‛சந்தனக்கூடு விழாவுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வேறு எந்த நிகழ்வுகளுக்கும் அனுமதி வழங்க மாட்டோம்' என கூறப்பட்டது. அதற்கு நீதிமன்றம், ‛'சந்தனக்கூடு விழா எப்படி நடக்கும்?'' என்று கேட்டது. அதற்கு அரசு தரப்பில், 'குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்கள் தர்காவில் சில வழிபாடுகளை நடத்துவர்' என்றது. தர்கா தரப்பில், வைக்கப்பட்ட வாதத்தில் இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டது.

இதையடுத்து மதுரை உயர்நீதிமன்றம், ‛‛திருப்பரங்குன்றம் மலை தர்காவில் சந்தனக்கூடு விழாவுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது. சந்தனக்கூடு விழாவில் 50 நபர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும். தர்கா தரப்பில் கந்தூரி போன்ற விழாக்கள் நடத்தக்கூடாது. திருப்பரங்குன்றம் மலையில் கால்நடைகளை பலியிடவோ, கீழே இருந்து மாமிசம் எடுத்து சென்று மலையில் சமைக்கவோ கூடாது'' எனக்கூறி உத்தரவிட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+