டாஸ்மாக்கை திறந்து வச்சிட்டு..டிவியில் குடி குடியை கெடுக்கும் என விளம்பரம் ஏன்? விளாசிய நீதிபதிகள்
மதுரை: தேனி மாவட்டம் பூத்திபுரம் பகுதியில் அரசு டாஸ்மாக் மதுபான கடை திறக்க தடை விதிக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இருக்கும் மது கடைகளை குறைப்பதற்கு வழியை பாருங்கள் அதை விடுத்து மது கடைகளை அதிகமாக்குவதால் என்ன பயன் என கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தற்போது மூலை முடுக்கெல்லாம் மதுக்கடைகள் உள்ளது, பள்ளி கல்லூரிகளுக்கு அருகாமையில் மதுக்கடைகள் திறக்கப்படுகிறது என கண்டனம் தெரிவித்தனர்.
மேலும், தமிழ அரசு அனைத்து தொலைக்காட்சிகளிலும் குடி குடியை கெடுக்கும் என விளம்பரம் அரசு செய்து வருகிறது, இவ்வாறு கடைகளை அதிகப்படுத்தி விட்டு விளம்பரம் செய்வதில் என்ன பயன் உள்ளது எனவும் வேதனை தெரிவித்தனர்.

தேனி மாவட்டம் பூத்திபுரம் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் குமாரலிங்கம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில், பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.
உயர்நீதிமன்ற மதுரை கிளை:
அதில்," பூத்திபுரம் கிராமத்தில் உள்ள ராஜபூபால சமுத்திரகன்மாய் அருகில் தமிழ்நாடு அரசின் மதுபான கடை திறக்க உள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றேன் இந்த மதுபான கடை அமைய உள்ள இடம் மதுபான சில்லரை விற்பனை கட்டிட விதிமுறைகளுக்கு முரணாக உள்ளது இது மட்டுமல்லாமல் இந்த கடை அமைவிடத்திற்கு அருகில் பெண்கள் பொது கழிப்பிட உள்ளது மேலும் கன்மாய் கரையாகவும் உள்ளது. மேலும் இதே இடத்தில் ஏற்கனவே இருந்த கடைகள் தமிழ்நாடு அரசு கொள்கை முடிவான 500 கடைகளை மூடும் போது மூடப்பட்ட கடையாகும்.
டாஸ்மாக் மதுக்கடை:
இது மட்டுமல்லாமல் இதே பகுதியில் ஏற்கனவே மூன்று மதுபான கடைகளும் செயல்பட்டு வருகின்றது. நான்காவதாக இந்த கடை அமைக்க முயற்சி நடைபெற்று வருகிறது. இதனால் பெண்களுக்கு பாதுகாப்பு பெற்ற சூழல் உருவாகும். நெடுஞ்சாலை, மற்றும் ரயில்வே பாதை பகுதியில் அமைவதால் குடி மகன்கள் சாலை விபத்தில் சிக்குவதற்கும் வாய்ப்பு உள்ளது. எனவே இந்த கடை அமைக்க தடை விதிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.
தமிழக அரசு:
இந்த வழக்கு நீதிபதிகள் வேல்முருகன் ஜோதி ராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. டாஸ்மார்க் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி சம்பந்தப்பட்ட இடத்தில் மதுபானக் கடை திறக்க மாவட்ட ஆட்சியர் ஏற்கனவே அனுமதி வழங்கி விட்டார் என தெரிவித்தார். அப்பொழுது நீதிபதிகள் மனுதாரர் குறிப்பிடும் இடத்தில் பெண்கள் பொது கழிப்பறை உள்ளது. பேருந்து நிலையம் அருகாமையில் உள்ளது. இதேபோல் திறந்த நிலையில் கிணறுகளும் அந்த பகுதியில் உள்ளது. இவ்வாறு உள்ள சூழலில் அங்கு மதுபான கடை அமைக்க அனுமதிக்க முடியாது என தெரிவித்தனர்
விளம்பரத்தால் என்ன பயன்:
மேலும், இருக்கும் மது கடைகளை குறைப்பதற்கு வழியை பாருங்கள் அதை விடுத்து மது கடைகளை அதிகமாக்குவதால் என்ன பயன். தற்போது மூளை முடுக்கெல்லாம் மதுக்கடைகள் உள்ளது பள்ளி கல்லூரிகளுக்கு அருகாமையில் மதுக்கடைகள் திறக்கப்படுகிறது. ஆனால் தமிழ அரசு அனைத்து தொலைக்காட்சிகளிலும் குடி குடியை கெடுக்கும் என விளம்பரம் செய்து வருகிறது. இவ்வாறு கடைகளை அதிகப்படுத்தி விட்டு விளம்பரம் செய்வதில் என்ன பயன் உள்ளது. என கருத்துக்களை தெரிவித்த நீதிபதிகள் புத்திபுரம் கண்மாய் பகுதியில் கடை அமைப்பதற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்தனர்.












Click it and Unblock the Notifications