ஆடல் பாடல் நிகழ்ச்சி.. இனி யாராவது மனு போட்டால் கடும் அபராதம்.. ஐகோர்ட் கிளை எச்சரிக்கை!
மதுரை : ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி பொதுநல மனு தாக்கல் செய்தால் கடும் அபராதம் விதிக்கப்படும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் மாவட்டம் சிந்தாமணிப்பட்டி பகுதியில் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பெரியசாமி என்பவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில் இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி யாரேனும் மனு தாக்கல் செய்தால் கடும் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், ஆடல், பாடல் குறித்து அனுமதி கோரி மனு அளித்த 7 நாட்களுக்குள் உரிய முடிவு எடுக்கவேண்டும் என்ற முந்தைய உத்தரவை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும், ஏற்கனவே நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுகளை முறையாக பின்பற்றி ஆடல் பாடல் நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்றும் ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி காவல் நிலையத்தில் மனு அளித்தால் போதும், அதை விடுத்து, மனு தாக்கல் செய்தால் கடும் அபராதம் விதிக்கப்படும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கோயில் திருவிழாக்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு மனு அளிக்கப்பட்டால், 7 நாட்களுக்குள் காவல்துறையினர் விழாக்குழுவுக்கு பதிலளிக்க வேண்டும், 7 நாட்களில் நடவடிக்கை இல்லையென்றால் அனுமதி அளிக்கப்பட்டதாக கருதி விழாக்குழுவினர் நிகழ்ச்சியை நடத்திக் கொள்ளலாம் என காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு அண்மையில் உத்தரவை வெளியிட்டிருந்தார்.
-
பசு, மாடு, ஆடுகளை வெட்ட தடை.. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு உண்மையில் சொல்வது என்ன? விளக்கம் -
நாளை பக்ரீத்.. தமிழகத்தில் பொது இடங்களில் மாடுகளை வெட்ட தடை.. ஐகோர்ட் போட்ட முக்கிய உத்தரவு! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications