உலகத்தின் பார்வையில் மதுரை.. பல வருட கனவு சார், பிரதமர் மோடியின் ஒற்றை அறிவிப்பால் இனி என்ன நடக்கும்
மதுரை: மதுரை மக்களின் பல வருட கனவு இன்று பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பால் நிறைவேறி உள்ளது. தென் தமிழக மக்களின் பல தசாப்த கால கனவு நனவாகியுள்ளது. மதுரை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கப்பட்டதால் இனி என்ன நடக்கும்.. எந்தெந்த விமானங்கள் எல்லாம் மதுரைக்கு இனி வரும் என்பதை இந்த பதிவில் பார்ப்போம். அதேபோல் இனி மதுரை மற்றும் தென் மாவட்டங்களின் பொருளாதாரத்தில் ஏற்படப்போகும் தாக்கம் பற்றியும் பார்ப்போம்.
மதுரை என்பது 24 மணி நேரமும் விமானங்கள் வந்து செல்லும் இடமல்ல.. தென்தமிழகத்தின் பெரிய விமான நிலையமாக இருந்தாலும், சென்னை, திருச்சி, கோவைக்கு உள்ள வசதி மதுரைக்கு கிடையாது.. தமிழகத்தில் சர்வதேச விமான நிலையம் என்றால் அது சென்னை அடுத்ததாக திருச்சி, அடுத்ததாக கோவை ஆகியவை உள்ளன. அதற்கு அடுத்துதான் மதுரை இருக்கிறது.

மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த வேண்டும் என்று பல வருடங்களாக கோரிக்கை இருந்து வந்தது. ஆனால் நிறைவேறாமல் இருந்து வந்தது.இதனால் மதுரைக்கு சர்வதேச விமானங்கள் வந்து செல்வதில் சிக்கல் இருந்தது. அதேபோல் மதுரையின் பொருளாதார வளர்ச்சிக்கும் சிக்கல் நீடித்தது. மதுரை வளர வேண்டும் என்றால், சர்வதேச விமான நிலைய அந்தஸ்து மதுரைக்கு கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.
ஏனெனில் மதுரை விமான நிலையம் 'சுங்க விமான நிலையம்' என்ற அந்தஸ்தில் மட்டுமே இருந்து வந்தது. இதனால் வெளிநாட்டு விமான நிறுவனங்கள் மதுரையிலிருந்து நேரடி சேவையைத் தொடங்குவதில் பல சிக்கல்கள் நீடித்தது. இனி அந்த தடையெல்லாம் தவிடு பொடியாகி உள்ளது, சர்வதேச அந்தஸ்து கிடைத்திருப்பதால், உலகின் முன்னணி விமான நிறுவனங்கள் மதுரையை நோக்கிப் படையெடுக்கத் தயாராகி வருகின்றன.
பறக்கப் போகும் புதிய விமானங்கள் தற்போது மதுரையிலிருந்து கொழும்பு, துபாய், சிங்கப்பூர் போன்ற சில இடங்களுக்கு மட்டுமே விமானங்கள் சென்று வருகின்றன. இனி என்னென்ன மாற்றங்கள் வரும் என்பதை பார்ப்போம். மலேசியாவிலிருந்து மதுரைக்கு நேரடி விமான சேவை வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கை. இனி ஏர் ஏசியா போன்ற நிறுவனங்கள் கோலாலம்பூருக்கு நேரடி சேவையை உடனே தொடங்க வாய்ப்பு உள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமானங்கள் போகும்.. கத்தார் ஏர்வேஸ் மற்றும் எமிரேட்ஸ் (Emirates) போன்ற ஜாம்பவான்கள் மதுரைக்கு வர வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. இதன் மூலம் தோஹா, மஸ்கட், குவைத் போன்ற நகரங்களுக்கு நேரடியாகப் பறக்க முடியும். இனி திருச்சி அல்லது சென்னைக்கு போக வேண்டிய நிலை வராது. மதுரையில் ரன்வே விரிவாக்கப் பணிகள் முடிவடையும் நிலையில் இருப்பதால், அதிகப் பயணிகள் அமரக்கூடிய 'போயிங்' ரக பெரிய விமானங்கள் இனி மதுரையில் தரை இறங்க முடியும்
மதுரைக்கு சர்வதேச விமான அந்தஸ்து கிடைத்திருப்பது என்பது, வெறும் விமானப் பயணம் தொடர்பானது மட்டுமல்ல; இது ஒரு வாழ்வாதாரப் பிரச்சனையை தீர்க்கும் மருந்தாக இருக்க போகிறது. மதுரை மல்லிகை, திண்டுக்கல் தோல் பொருட்கள் மற்றும் தென் மாவட்டங்களின் கைவினைப் பொருட்கள் இனி கப்பல்களில் ஏறி வெளிநாடு செல்வதைக் காட்டிலும், மதுரையிலிருந்தே நேரடியாக விமானம் மூலம் உலகச் சந்தையை அடைய முடியும்.
சுற்றுலாத்துறையைப் பொறுத்தவரை மதுரை மீனாட்சி அம்மன் கோயில், ராமேஸ்வரம், கொடைக்கானல் ஆகிய இடங்களுக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை பல மடங்கு இனி உயரும். இதனால் ஹோட்டல் தொழில் முதல் கார் வாடகை வரை அனைத்துமே சூடுபிடிக்கும்.
"மதுரைக்கு எப்போ தான் இன்டர்நேஷனல் அந்தஸ்து வரும்?" என்று கேள்வி எழுப்பிய அத்தனை பேருக்கும் பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு பதிலாக அமைந்துள்ளது. மதுரைக்குக் கிடைத்துள்ள இந்த அறிவிப்பு தென் தமிழக மக்களுக்கு ஒரு பெரிய நிம்மதியையும் மகிழ்ச்சியையும் தந்துள்ளதாக சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
-
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
சென்னைக்கு உள்ளேயே.. அசுர வேகத்தில் பறக்கும் RRTS ரயில்.. வேகமாக தொடங்கிய பணிகள்.. எங்கே? -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு












Click it and Unblock the Notifications