ஸ்வீட் பாக்ஸ் கேட்ட மதுரை வீரமணி.. டக்னு வீட்டு வாசலில் நின்ற பிரிட்ஜ், டிவி, ஜேசிபி.. என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

மதுரை: "தீபாவளிக்கு ஒரு ஸ்வீட் பாக்ஸ் வாங்கி அனுப்புங்க" என்று இன்ஸ்டாகிராமில் கேட்டதுதான் தாமதம்.. உடனே மதுரையை சேர்ந்த இன்ஸ்டா பிரபலம் வீரமணியின் வீட்டு அட்ரஸுக்கு அடுத்தடுத்து பொருட்கள் வந்து குவிய ஆரம்பித்து விட்டதாம். பால் பாக்கெட், டிவி, ஃபிரிட்ஜ் என ஆரம்பித்த இந்த ஆன்லைன் ஆர்டர் விவகாரம், இப்போது அவர் திணறும் அளவுக்கு சென்றுள்ளது. அப்படி என்னதான் நடந்தது?

மதுரையை சேர்ந்தவர் வீரமணி.. இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருப்பவர். "வணக்கம் நண்பர்களே" என்று ஆரம்பித்து, மதுரை வட்டார பேச்சு நடையில் வீடியோக்களை வெளியிடுவது இவரது வழக்கம். காமெடியாக பேசுவதுடன், சில நேரங்களில் மற்றவர்களை திட்டியும் வீடியோக்களை பதிவிடுவார். இதனால் நெட்டிசன்களின் கண்டனங்களையும் சந்தித்திருக்கிறார்.

Madurai

மதுரை வீரமணி

சில நாட்களுக்கு முன்பு, கேரளாவுக்கு டூர் செல்ல பணம் கேட்டு ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் தனது வங்கி கணக்குக்கு பணம் அனுப்புமாறு சொல்லி, கியூஆர் கோடையும் பகிர்ந்திருந்தார். இதையடுத்து சிலர் அவருக்கு ரூ.6,000 வரை அனுப்பியதாகவும், அதைக் கொண்டு சுற்றுலா சென்ற வீடியோக்களை அவர் பதிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், தீபாவளி நெருங்குவதால் தன்னை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பவர்கள் ஸ்வீட் பாக்ஸ் வாங்கி அனுப்புமாறு கேட்டுக்கொண்டார். அப்படி அனுப்ப விரும்பியவர்களுடன் தனது வீட்டு அட்ரஸையும் ஷேர் செய்திருந்தார்.. . ஆனால், அந்த முகவரியை பார்த்த சில குறும்புக்கார நெட்டிசன்கள், இனிப்பு அனுப்புவதற்கு பதிலாக வேறு ஒரு வேலையை பார்த்து விட்டனர்.

வந்து விழுந்த பால் பாக்கெட்

பிரபல ஆன்லைன் வர்த்தக தளங்களில் வீரமணியின் அட்ரஸை கொடுத்து, "கேஷ் ஆன் டெலிவரி" முறையில் பொருட்களை ஆர்டர் செய்திருக்கிறார்கள். அதாவது, பொருள் வீட்டுக்கு வந்த பிறகு அதற்கான பணத்தை கொடுக்கும் முறை இது.

இப்படியாக பால் பாக்கெட் முதல் டிவி, பிரிட்ஜ் வரை 100-க்கும் மேற்பட்ட பொருட்கள் ஆர்டர் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் அவரது வீட்டுக்கு வாகனங்களில் வரத் தொடங்கியதால், வீரமணிக்கு தலைவலியே வந்துவிட்டது.

ஒருவர் ரூ.1 லட்சத்து 69 ஆயிரம் மதிப்பிலான டிவியை ஆர்டர் செய்துவிட்டாராம்.. இன்னொருவர் ஜேசிபி மிஷினையே ஆர்டர் செய்துள்ளார்.. இதைவிட ஹைலைட் என்ன தெரியுமா? , ரூ.70 கோடி மதிப்பிலான ராணுவ பீரங்கி ஆர்டர் செய்யப்பட்டதாக ஒரு ஸ்கிரீன்ஷாட்டும் சோஷியல் மீடியாவில் பகிரப்பட்டுள்ளது.

தயவுசெய்து நிறுத்துங்க

தொடர்ந்து பொருட்கள் வந்து கொண்டிருந்ததால், அவற்றை கொண்டு வந்த டெலிவரி ஊழியர்களிடமும் வீரமணி கடுமையாக நடந்துகொண்டாராம்.. காரணம், ஆன்லைன் நிறுவனங்களும் பொருட்களை பெற்றுக்கொண்டு அதற்கான பணத்தை கொடுக்குமாறு டெலிவரி ஊழியர்கள் கேட்டிருக்கிறார்கள்.. அதனால்ன் பிரச்சனை பெரிதாகி விட்டது.

ஆரம்பத்தில், தனக்கு வந்த தொந்தரவுகளையும் வீடியோக்களாக வெளியிட்டு வந்த வீரமணி, ஒரு கட்டத்தில் நிலைமை கைமீறிப் போனதால் மன அழுத்தத்தில் இருப்பதாக கூறி வீடியோ வெளியிட்டார்.

கெஞ்சி கேட்டு கதறல்

"இனிப்பு வாங்கி அனுப்ப சொன்னதற்காக நான் ரொம்ப அவதிப்படுகிறேன். உங்கள் காலடியில் மண்டியிடுகிறேன். தயவுசெய்து ஆர்டர் செய்வதை நிறுத்துங்கள். நான் கடுமையான அழுத்தத்தில் இருக்கிறேன்" என்று கெஞ்சியுள்ளார்.

அதுமட்டுமல்ல, பொருட்கள் வந்துகொண்டிருந்ததால் வீட்டை விட்டே அவர் வெளியேறுவதாகவும், கையில் பெரிய பைகளுடன் அவர் செல்லும் வீடியோவும் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவும் இப்போது சோஷியல் மீடியாவில் பேசுபொருளாகி இருக்கிறது.

தீபாவளிக்கு ஒரு ஸ்வீட் பாக்ஸ் கேட்டது, இப்படி ஒரு பெரிய ஆன்லைன் ஆர்டர் சிக்கலாக மாறும் என்று வீரமணி எதிர்பார்த்திருக்க மாட்டார். அதே நேரத்தில், ஒருவரின் முகவரியை பயன்படுத்தி அவருக்கு விருப்பமில்லாத பொருட்களை ஆர்டர் செய்வது காமெடியாக தோன்றினாலும், இது அந்த நபருக்கும் டெலிவரி ஊழியர்களுக்கும் தேவையற்ற சிரமத்தை ஏற்படுத்திவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்...!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+