மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சிலம்பத்தில் கலக்கும் சிறுவன் - சாதனை மாணவனுக்கு "கலை இளமணி" விருது!

Google Oneindia Tamil News

மதுரை: சிலம்பத்தில் பல்வேறு சாதனைகளை குவித்து வரும் மதுரையைச் சேர்ந்த சிறுவன் ஜெ.அதீஸ்ராமுக்கு, கலை இளமணி விருது வழங்கி, மதுரை மாவட்ட ஆட்சியர் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

சிலம்பக்கலையில் சாதிக்கும் சிறுவர்களில் மதுரை விராட்டிபத்தைச் சேர்ந்த 7-ம் வகுப்பு படிக்கும் மாணவன் அதீஸ்ராமும் ஒருவர். தொண்டு நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் ஜெயராமனின் மகனான அதீஸ்ராம், மதுரை மாவட்டம் செக்கானூரணியில் உள்ள தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். விராட்டிபத்தில் உள்ள மாருதி சிலம்பப்பள்ளியில் சிலம்பப் பயிற்சி பெற்று பல்வேறு போட்டிகளிலும் பங்கேற்று சாதனைகள் புரிந்து வருகிறார்.

சிலம்பத்தில் உள்ள பல்வேறு வகைகளில் ஒற்றைக்கை சிலம்பம், இரட்டைக் கை சிலம்பம், சுருள்வாள், கத்தி, வேல்கம்பு, கத்திக்கேடயம், தண்ணீர் சுற்றுதல், தீக்கம்பு, நட்சத்திரப் பந்தம், சூரியப் பந்தம் மற்றும் சக்கரப் பந்தம் என அனைத்து வகைகளையும் 11 வயதிலேயே கற்றுத் தேர்ந்துள்ளார் மாணவன் ஜெ.அதீஸ்ராம்.

அண்ணாத்த ஆடுறார்.. ஒத்திக்கோ.. ஒத்திக்கோ.. சிலம்பம் சுற்றிய அமைச்சர் செஞ்சி மஸ்தான்! அண்ணாத்த ஆடுறார்.. ஒத்திக்கோ.. ஒத்திக்கோ.. சிலம்பம் சுற்றிய அமைச்சர் செஞ்சி மஸ்தான்!

கலை இளமணி விருது

கலை இளமணி விருது

மாணவன் ஜெ.அதீஸ்ராம், தமிழக அரசின் கலை பணபாட்டுத் துறையின் கீழ் செயற்படும் மாவட்டக் கலை மன்றத்தின் சார்பாக 2021-22 ஆண்டிற்கான சிறந்த சிலம்பக் கலைஞர் விருதும், பொற்கிழியும், கலை இளமணி பட்டமும் பெற்றுள்ளார்.

இந்நிலையில், கடந்த 26-ம் தேதி மதுரை மாவட்ட ஆட்சியர் டாக்டர். எஸ். அனீஷ்சேகர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் கலை இளமணி விருதினை வழங்கி, சாதனை சிறுவன் அதீஸ்ராமை மனதார ஆட்சியர் வெகுவாக பாராட்டினார்.

ஸ்கேட்டிங் ஒட்டிக்கொண்டு சிலம்பம்

ஸ்கேட்டிங் ஒட்டிக்கொண்டு சிலம்பம்

தற்போது சிலம்பாட்டத்தில் கின்னஸ் சாதனை புரிவதற்கு பதிவு செய்து பயிற்சி மேற்கொண்டு வருகிறார் மாணவன் ஜெ.அதீஸ்ராம். ஸ்கேட்டிங் ஒட்டிக்கொண்டு சிலம்பம் சுற்றுவது இவரது தனிச் சிறப்பு. கூடுதலாக வில் வித்தையிலும் மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் வென்றுள்ளார் மாணவர் ஜெ.அதீஸ்ராம்.

மாணவனின் சாதனை பட்டியல்

மாணவனின் சாதனை பட்டியல்

2 மணி நேரம் தொடர்ச்சியாக ஸ்கேடிங் ஒட்டிக்கொண்டு சிலம்பம் சுற்றி America Book of Records சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.
27.03.2022 - திருச்சியில் நடைபெற்ற ஹார்வேட் உலக சாதனை புத்தகத்தில் (Harvard World Records, London) தொடர்ந்து 3 மணி நேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை. 27.03.2022 - Pathanjali Book of World Records - Silambam Excellence Award. 02.01.2022 - Dindigul - OSCAR World Records - Silambam Stick event for twelve hours.
29.08.2021 - Universal Achievers Book of Records - Continously rotating Silambam in 2021 seconds - 08.08.2021 - Oscar World Records. 16.02.2020 - Pasumai Book of Records - An hour non stop play on Silamba.

விருதுகளை குவித்த அதீஸ்ராம்

விருதுகளை குவித்த அதீஸ்ராம்

Global Child Prodigy Awards 2022 பங்கேற்பு செய்து சான்றிதழ் பெற்றுள்ளார். 2021 ஆண்டிற்கான Global Kids Achievers Award. 31.10.2021 - மகாகவி பாரதி கலை இலக்கிய மன்றத்தின் முப்பெரும் விழாவில் கலைச்செல்வர் விருது வழங்கப்பட்டது. 26.01.2021 - 72வது குடியரசு தினவிழாவில் மதுரை மாவட்ட ஆட்சியர் திரு.அன்பழகன் அவர்கள் விருது வழங்கி பாராட்டினார். 2020 ஆண்டிற்கான International Sports Star Award விருது. செப்டம்பர் 14-15, 2019 மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற World Silambam Championship 2019 போட்டியில் இரட்டைக் கம்பு வீச்சு பிரிவில் முதல் பரிசு.]17-19 நவம்பர் 2018ல் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் பங்கேற்று முதல் பரிசு (1st Y.S.C.D.F National Games 2018-19)

குறும்பட நாயகன் அதீஸ்ராம்

குறும்பட நாயகன் அதீஸ்ராம்

தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் பங்கேற்று பல்வேறு பரிசுகளை குவித்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்து வருகிறார் ஜெ.அதீஸ்ராம். சிலம்பாட்டம் குறித்து எடுக்கப்படும் சிலம்பன் எனும் குறும்படத்தில் குழந்தை நட்சத்திர நாயகனாக சாதனை மாணவன் ஜெ.அதீஸ்ராம் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
The Madurai District Collector expressed his appreciation by awarding Kalai Ilamani Award to a boy from Madurai, J.Adheesh Ram, who has been accumulating achievements in Silambam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X