மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இதெல்லாம் பெண்டிங்.. லிஸ்ட் போட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதிய மதுரை எம்.பி. வெங்கடேசன்

Google Oneindia Tamil News

மதுரை: ரயில்வே திட்டங்கள் நிறைவேற்றப்பட கடந்த ஆட்சிக்காலத்தில் இருந்த தடைகளை நீக்க கோரி தமிழக முதல்வருக்கு மதுரை மக்களவை தொகுதி எம்.பி. சு. வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.

சு.வெங்கடேசன் எழுதியுள்ள கடித விபரம் வருமாறு;

ரயில்வே துறையின் ஆலோசனைக்குழு உறுப்பினர் என்ற முறையில் தமிழகத்தின் ரயில்வே வளர்ச்சித்திட்டங்களை உரிய காலத்தில் நிறைவேற்றுவதில் உள்ள சிக்கல்களை ஆராய்ந்த போது தங்களின் கவனத்துக்கு கொண்டுவர வேண்டிய முக்கிய பிரச்சனையை ரயில்வே அதிகாரிகள் என்னிடம் சுட்டிகாட்டினார்கள். அதனை உங்களின் பார்வைக்கு கொண்டுவருகிறேன்.

சிபிஎம் ஜி.ராமகிருஷ்ணன், அறப்போர் இயக்கம் ஜெயராம் வெங்கடேசன் மீதான அவதூறு வழக்குகள் வாபஸ் சிபிஎம் ஜி.ராமகிருஷ்ணன், அறப்போர் இயக்கம் ஜெயராம் வெங்கடேசன் மீதான அவதூறு வழக்குகள் வாபஸ்

ரயில் பாதை

ரயில் பாதை

மதுரை -தூத்துக்குடி; மணியாச்சி- நாகர்கோயில் ஆகிய இரு முக்கிய ரயில் வளர்ச்சித் திட்டங்களான இரட்டைப் பாதை திட்டங்களும், மதுரை- போடிநாயக்கனூர் மற்றும் திருத்துறைப்பூண்டி- அகஸ்தியம்பள்ளி அகலப்பாதை திட்டங்களும், பேரளம்- காரைக்கால் புதிய பாதை திட்டமும் மார்ச்சு 2022க்குள் முடிய வேண்டியவையாகும்.

தாது பொருட்கள்

தாது பொருட்கள்

ஆனால், மாவட்ட ஆட்சியர்கள் இந்தத் திட்டங்களில் மண் அள்ளுவதற்கு அனுமதி வழங்காததால் தாமதமாகிறது. சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையின் உத்தரவுபடி மண் அள்ளுவதற்கு மாவட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி பெற வேண்டும். மாவட்ட ஆட்சியர் அந்த மண்ணை ஒரு சோதனைக் கூடத்தில் கொடுத்து அந்த மண்ணில் தாது பொருள்கள் இல்லை என்று உறுதிப்படுத்திக்கொண்டு அனுமதி வழங்க வேண்டும் என்பது உயர்நீதிமன்ற உத்தரவு.

மாவட்ட ஆட்சியர்

மாவட்ட ஆட்சியர்

ஆனால், முந்தைய அதிமுக அரசு இதற்கான சோதனைக் கூடங்களை நிர்ணயிக்காததாலும், உயர்நீதிமன்றத்தின் மற்ற கருத்துக்கள் குறித்தும் ஒரு உத்தரவு வழங்காததாலும் மாவட்ட ஆட்சியர்கள் அனுமதி வழங்கவில்லை.

சு.வெங்கடேசன் கடிதம்

சு.வெங்கடேசன் கடிதம்

கடந்த ஆட்சிக்காலத்தில் உருவான இந்தத் தடைகளால் முக்கியமான அடித்தள கட்டுமான ரயில் வளர்ச்சிப்பணிகள் முடிவடைவது தாமதமாகிறது. எனவே தாங்கள் தலையிட்டு,
தமிழக அரசு பரிசோதனை கூடங்களை நிர்ணயம் செய்யவும், மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுமதி வழங்குவது குறித்த வரையறைகளை உத்தரவிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு சு.வெங்கடேசன் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் குறிப்பிட்ட, ரயில் பாதை திட்டங்கள் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Madurai Lok Sabha MP has asked the Chief Minister of Tamil Nadu MK Stalin to remove the obstacles that existed during the last regime to implement the railway projects. Su. Venkatesh has written the letter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X