29 கிமீ.. 17 ஸ்டேஷன்கள்.. மதுரையில் நுழையும் மெட்ரோ ரயில்.. சுரங்கபாதையில் பயணிக்கலாம்! முழுவிபரம்

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாராகி உள்ள நிலையில் இன்னும் சில நாட்களில் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. அதன்படி முதற்கட்டமாக மதுரை ஒத்தக்கடையில் இருந்து திருமங்கலம் வரை 29 கிலோமீட்டர் தொலைவுக்கு 17 ஸ்டேஷன்களுடன் சுரங்கபாதைகளுடன் கூடிய மெட்ரோ ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ள விபரம் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக உள்ள முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.

குறிப்பாக மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட மாநகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கைகள் உள்ளன.

மதுரை மெட்ரோ திட்டம்

மதுரை மெட்ரோ திட்டம்

இதற்கிடையே தான் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு நடவடிக்கைள் எடுக்கப்படும் என தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார். இதையடுத்து மதுரை மாநகரில் மெட்ரே ரயில் சேவையை துவங்கும் திட்டத்துக்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யும் பணி என்பது பாலாஜி ரயில் ரோடு சிஸ்டம் நிறுவனத்திடம் வழங்கப்பட்டது.

சாத்தியக்கூறு அறிக்கை தயார்

சாத்தியக்கூறு அறிக்கை தயார்

இவர்கள் மதுரையில் ஆய்வு மேற்கொண்டு சாத்தியக்கூறு அறிக்கை (Detailed Feasibility Report or DFR) தயார் செய்தனர். இந்த அறிக்கை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் வழங்கப்பட்டது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஆய்வு செய்துள்ள நிலையில் சாத்தியக்கூறு அறிக்கையை விரைவில் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. தற்போது பலகட்ட ஆலோசனைகள் நடந்துள்ள நிலையில் இந்த அறிக்கை இன்னும் ஒருவாரத்துக்குள் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளிக்கும் நிலையில் அடுத்தகட்ட பணிகள் துவங்க உள்ளது.

திட்ட அறிக்கை பணி

திட்ட அறிக்கை பணி

அடுத்தக்கட்ட பணி என்பது விரிவான திட்ட அறிக்கை (Detailed Project Report or DPR) தயாரிப்பாகும். இந்த அறிக்கையில் தான் திட்டம் பற்றிய முழுவிபரம் இடம்பெறும். திட்டத்துக்கான நிதி, மெட்ரோ ஸ்டேஷன்கள் எங்கு அமைப்பது? உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் உறுதி செய்யப்படும். தற்போதைய சாத்தியக்கூறு அறிக்கைக்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கும் நிலையில் அடுத்த 4 முதல் 5 மாதத்துக்குள் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்யலாம் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறி உள்ளனர்.

 17 ஸ்டேஷன்களுடன் 29 கிலோமீட்டர்

17 ஸ்டேஷன்களுடன் 29 கிலோமீட்டர்


அதன்படி மதுரை மெட்ரோ ரயிலுக்கான முதற்கட்ட திட்டம் (Phase I)என்பது 29 கிலோமீட்டர் தொலைவுக்கு 17 மெட்ரோ ரயில் நிலையங்களுடன் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மதுரை ஒத்தக்கடை முதல் மாட்டுத்தாவனி, புதூர், திருமங்கலம் வரை மெட்ரோ பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மதுரையில் சில முக்கிய கோவில்கள் உள்ளன. இதனால் வைகை ஆறு மற்றும் மதுரை பெரியார் பஸ் நிலைய பகுதிகளில் சுரங்க பாதை அமைக்கும் முடிவும் உள்ளதாக அதிகாரி ஒருவர் கூறினார்.

மெட்ரோ ஸ்டேஷன்கள் எங்கு?

மெட்ரோ ஸ்டேஷன்கள் எங்கு?

தற்போதைய சாத்தியக்கூறு அறிக்கையின் அடிப்படையில் 29 கிலோமீட்டர் தொலைவிலான மெட்ரோ பாதையில் 17 ஸ்டேஷன்கள் அமைக்கப்பட உள்ளது. இதில் ஒத்தக்கடை, மதுரை உயர்நீதிமன்றம், புதூர், சிம்மக்கல், மதுரை சந்திப்பு மெட்ரோ, பசுமலை, திருநகர், தோப்பூர், கப்பலூர், திருமங்கலம் ஆகிய 10 முக்கிய இடங்களில் மெட்ரோ ஸ்டேஷன்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பிற ஸ்டேஷன்கள் எவை என்பது விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பின்போது முடிவு செய்யப்பட உள்ளது

2ம் கட்ட மெட்ரோ பணி

2ம் கட்ட மெட்ரோ பணி

இந்த முதற்கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணியை தொடர்ந்து 2ம் கட்ட மெட்ரோ திட்டம் துவங்கப்படும். இந்த திட்டம் என்பது திருமங்கலம், மதுரை விமான நிலையம், தெற்கு வாசல் உள்ளிட்டவற்றை இணைப்பதோடு முதல்கட்ட மெட்ரோ ரயில் பாதையின் தொடர்ச்சியாக இருக்கும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+