'அண்ணே ஒரு காபி குடுங்க'.. டீக்கடை குறித்து மதுரை எம்.பி நெகிழ்ச்சி ட்வீட்.. நெட்டிசன்கள் கமெண்ட்
மதுரை: மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர். மேலும் இவர் பிரபல எழுத்தாளரும் கூட. காவல் கோட்டம், வேள்பாரி ஆகிய நூல்கள் இவரை தமிழ்நாடு முழுவதும் அடையாளம் காண செய்தது.
Recommended Video
மேலும் பல்வேறு நூல்களையும் எழுதியுள்ளார். சு.வெங்கடேசன் 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் தி.மு.க கூட்டணியில் மதுரை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி.யாக பொறுப்பு ஏற்றுக் கொண்டார். மக்கள் பிரதிநிதி ஆனதில் இருந்து மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் சு.வெங்கடேசன்.

மதுரை எம்.பி சு.வெங்கடேசன்
மத்திய அரசு தமிழகத்துக்கு எதிரான திட்டம் கொண்டு வந்தால் தொடர்ந்து எதிர்ப்பு குரல் எழுப்பி வருகிறார். அதுவும் தமிழகத்திற்குள் ஏதாவது ஒரு வகையில் இந்தி திணிப்பு நடந்தால் முதல் ஆளாக எதிர்ப்பு குரல் கொடுத்து விடுவார். தமிழக அரசு நிறைவேற்றிய நீட் மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் அரசுக்கே திருப்பி அனுப்பி இருந்தார் மாநில ஆளுநர் ஆர்.என்.ரவி.

தமிழகத்துக்காக குரல் கொடுப்பவர்
இதற்கு கடுமையாக கண்டனம் தெரிவித்த சு.வெங்கடேசன் ''எம்.பி வாடகை வீட்டிலிருக்கும் எனக்கு அந்த வீடோ, நிலமோ சொந்தமில்லை. உரிமையாளரின் உடமை. என்னைப்போல தமிழகத்தில் வாடகைக்கு இருக்கும் ஒருவர் உரிமையாளரின் உத்தரவுகளை அறவே மறுக்கிறார்'' என்று தமிழக ஆளுநரை மறைமுகமாக தாக்கி இருந்தார் அவர். இப்படி அதிரடியான கருத்துக்களை டுவிட்டரில் தொடர்ந்து பதிவிட்டு வரும் சு.வெங்கடேசன் நேற்று வித்தியாசமான பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

தேநீர் கடை குறித்து பதிவு
அதாவது மதுரையில் உள்ள விசாலம் என்னும் டீக்கடை குறித்து பதிவிட்ட அவர், '' அண்ணே ஒரு காபி குடுங்க !சாரம் கட்டி வரிசையில் விடுவது சாராயக்கடைகளில் மட்டுமல்ல ... மதுரை விசாலம் காபி கடையிலும் உண்டு ...மதுரை முகவரிகளில் ஒன்று விசாலம் காபி'' என்று நெகிழ்ச்சியுடன் கூறி இருந்தார். அந்த தேநீர் கடையில் காபி குடித்த எம்.பி சு.வெங்கடேசன் இதுபற்றி பெருமையுடன் பதிவிட்டுள்ளார்.

நெட்டிசன்கள் கமெண்ட்
வெங்கடேசன் எம்.பி வெறும் அரசியல் பதிவுகள் மட்டுமில்லாது அவர் செல்லும் இடங்களில் அவரைக் கவர்ந்தவற்றையும் டுவிட்டரில் பதிவிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மதுரை எம்.பி .யின் இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் பல்வேறு கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications