ஒரே பதிலால் நெட்டிசன்களுக்கு ஆச்சர்யம் தந்த மதுரை மாநகராட்சி.. தெப்பக்குளம், காமராஜர் சாலையா இது?
மதுரை: மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள சாலைகளில் மணல்கள் தூசிகள் அதிகமாக காணப்படுகிறது. இரு சக்கர வாகனங்களில் செல்வோருக்கு பாதிப்புகள் ஏற்படுகிறது. உடனடியாக சரி செய்யுங்கள் என்று ட்விட்டரில் (எக்ஸ் தளம்) ஒருவர் கோரிக்கை வைத்தார். அந்த கோரிக்கையை உடனே ஏற்று நடவடிக்கை எடுத்துள்ளது மதுரை மாநகராட்சி.
மதுரையை பொறுத்தவரை தமிழ்நாட்டின் பழமையான பெரிய நகரங்களில் ஒன்று. சென்னை, கோவைக்கு அடுத்தபடியாக அதிகப்படியான மக்கள் வாழும் நகரமாக மதுரை இருக்கிறது. ஆனால் சென்னை, கோவை போல் மதுரையில் பெரிய அளவில் தொழில் நிறுவனங்களோ, தொழிற்சாலைகளோ இல்லை.. மதுரையை பொறுத்தவரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் பல மாவட்ட மக்கள் வந்து செல்லும் வணிக நகரமாக இருக்கிறது.

அதேநேரம் மதுரையை பொறுத்தவரை கடந்த 20 வருடங்களில் வீடுகளின் எண்ணிக்கை பெரிய அளவில் உயர்ந்துள்ளது. வாகனங்கள் எண்ணிக்கையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. முன்பு பொதுப்போக்குவரத்தை மட்டுமே நம்பியிருந்த நிலையில், இப்போது சொந்த வாகனங்கள் எண்ணிக்கை அனைவரது வீடுகளிலும் அதிகரித்துளளது. கார், லாரி, கனரக வாகனங்கள் அதிகரிப்பு ஒருபுறம் எனில், இருசக்கர வாகனங்கள் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது.
பெரிய சாலைகள் என்று இல்லை.. பிரதான சாலைகள் என்று இல்லை.. சிறிய சாலைகளில் கூட வாகன நெருக்கம் மதுரையில் அதிகரித்துள்ளது. மதுரையில் காலையிலும் மாலையிலும் போக்குவரத்து நெரிசல் கடுமையாக உள்ளது. வாகன நெருக்கம் அதிகரித்த காரணத்தால் முக்கிய சாலைகளில ஆக்கிரமிப்புகளை அகற்றியே ஆக வேண்டிய அளவிற்கு நிலைமை மாறி உள்ளது.
தாங்கள் அளித்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு மதுரை மாநகராட்சி தெப்பக்குளம் மற்றும் காமராஜர் சாலை பகுதிகளில் நவீன மண்கூட்டும் இயந்திரம் மூலம் மணல்கள் அள்ளும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. https://t.co/UijoFtbxrf pic.twitter.com/8iEIvl0k1q
— Corporation of Madurai (@city_madurai) February 21, 2024
மதுரை சாலைகளில் வாகன நெரிசலை தாண்டி இன்னொரு பிரச்சனையும் இருக்கிறது. மணல்கள் அதிகரிப்பால் சாலைகளில் ஏற்படும் தூசிகள் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைவலியாக உள்ளது. இது தொடர்பாக மதுரை மாநகராட்சி மற்றும் மதுரை கலெக்டர் மற்றும் மதுரை மாநகராட்சி ஆணையாளர் ஆகியோரை டேக் செய்து மதுரை வெதர் டெவலப்மெண்ட் என்ற பெயரில் நெட்டிசன் ஒருவர் கடந்த பிப்ரவரி 18ம் தேதி ட்விட்டரில் கேள்வி எழுப்பி இருந்தார்..
அந்த பதிவில் அவர் கூறுகையில், மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள சாலைகளில் மணல்கள் தூசிகள் அதிகமாக காணப்படுகிறது. இரு சக்கர வாகனங்களில் செல்வோர்க்கு பாதிப்புகள் ஏற்படுகிறது. உடனடியாக சரி செய்யுங்கள் என்று கோரியிருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள மதுரை மாநகராட்சி, "தாங்கள் அளித்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு மதுரை மாநகராட்சி தெப்பக்குளம் மற்றும் காமராஜர் சாலை பகுதிகளில் நவீன மண்கூட்டும் இயந்திரம் மூலம் மணல்கள் அள்ளும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது" என்று கூறியுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications