Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புகார் கொடுக்க வருபவர்களை.. விழுந்து விழுந்து கவனிக்கும் மதுரை போலீசார்.. கமிஷனர் செய்த மாஜிக்

Subscribe to Oneindia Tamil

மதுரை : மதுரை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல் நிலையங்களுக்கு புகார் அளிக்க வரும் மக்களிடம் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து போலீசாரின் அணுகுமுறை குறித்தும் காவல் நிலையத்தில் எவ்வாறு நடந்து கொண்டனர் என்பது குறித்தும் கருத்து கேட்கப்படுவதால் காவல்துறையினர் மக்களை அணுகும் முறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் இந்த நடவடிக்கையை தொடர வேண்டும் என மதுரை மக்கள் கூறியுள்ளனர்.

காவல்துறை அதிகாரிகள் என்றாலே எப்போதும் கடுமையாகவும் சிடுசிடுப்பான முகத்துடன் இருப்பார்கள் என்ற பேச்சு நீண்ட காலமாக இருக்கிறது. அது ஒரு வகையில் உண்மை என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

எல்லா காவலர்களும் காவல் நிலையங்களிலும் புகார் தர வரும் மக்களிடம் காவலர்கள் அப்படி நடந்து கொள்வது கிடையாது என்றாலும் சில காவலர்களும் காவல் நிலையங்களிலும் பொதுமக்களை தரக்குறைவாக நடத்துவது உண்மைதான்..

 கடுகடுப்புடன் போலீசார்

கடுகடுப்புடன் போலீசார்

அதிக பணிச்சுமை குற்றங்களை தொடர்ந்து பார்த்து வருவதால் ஏற்படும் மன உளைச்சல் உள்ளிட்ட அவற்றின் காரணமாக காவலர்கள் பொதுமக்களிடம் கடுமையாக நடந்து கொள்வது இயல்புதான். அது குற்றம் என்றாலும் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக புகார் எண்கள் அளிக்கப்பட்டிருந்தாலும் அவை செயல்படுகிறதா என்பது கேள்விக்குறிதான்.

மதுரையில் அதிரடி

மதுரையில் அதிரடி

ஆனால் உண்மையிலேயே புகார் மக்களிடம் மதுரை மாநகர் காவல் துறையினர் எப்படி நடந்து கொள்கிறார்கள் என மதுரை மாநகர காவல் அலுவலகத்தில் இருந்து புகார் தாரர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனால் போலீசாரின் அணுகுமுறையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர் பொதுமக்கள். தமிழ்நாட்டில் முதன்முறையாக மதுரை மாநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் புகார் தர வரும் மக்களின் குறைகளை விரைந்து நடவடிக்கை எடுக்கவும் காவல் நிலையத்தில் காத்திருப்பதை தவிர்க்கும் வகையில் மதுரை மாநகர காவல் ஆணையாளர் செந்தில் குமார் அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

அதிகாரிகளுக்கு உத்தரவு

அதிகாரிகளுக்கு உத்தரவு

காவல் நிலையத்தில் இருக்கும் அதிகாரிகளிடம் புகார் அளித்தவுடன் அதை கணினியில் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அவ்வாறு புகார் பதிவு செய்தவுடன் அதை மாநகர காவல் நிலையத்தில் உள்ள சர்வர் மூலம் கண்காணிக்கும் சிறப்பு அதிகாரி புகார் கொடுத்தவுடன் அடுத்த நாளே புகார்தாரரை தொடர்பு கொண்டு காவல் நிலையத்தில் அவர் நடத்தப்பட்ட விதம் குறித்தும் போலீசார் எப்படி நடந்து கொண்டார்கள் என்பது குறித்தும் கேட்டறியப்படுகிறது.

போலீசாருக்கு மதிப்பெண்

போலீசாருக்கு மதிப்பெண்

புகார்தாரர்கள் அளிக்கும் பதிலை வைத்து போலீசாரின் நடவடிக்கைகளுக்கு மதிப்பெண்களும் வழங்கப்படுகிறது. மதிப்பெண் மிகக் குறைவாக இருந்தால் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வரும் மக்கள் மரியாதையாக நடத்தப்படுவது உறுதி செய்யப்படுவதோடு போலீசாரின் அணுகுமுறை முற்றிலுமாக மாறி உள்ளதாக கூறுகின்றனர் மதுரை மாநகர் வாசிகள்.

மாறும் அணுகுமுறை

மாறும் அணுகுமுறை

ஒரு நாளைக்கு சராசரியாக 50 புகார்கள் காவல் நிலையங்களில் அளிக்கப்படும் நிலையில் இது தொடர்பாக புகார்தாரர்களிடம் பேசி போலீசார் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து கேட்ட இயக்கப்பட்டு விரைவாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதே நேரத்தில் புகார் கொடுத்த உடனேயே கைது செய்ய வேண்டும் என பலரும் தொல்லை செய்வதாகவும் அவர்களுக்கு சட்ட ரீதியான ஆலோசனைகள் வழங்கப்படுவதாகவும் மதுரை போலீசார் கூறுகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+