நூறு ஆடுகளுடன் கமகமத்த கோயில் விருந்து! வடக்கம்பட்டி திருமங்கலத்தில் பூரித்த மதுரை முனியாண்டி விலாஸ்
மதுரை: மதுரை முனியாண்டி கோயில் திருவிழா மீண்டும் ஒருமுறை தமிழக மக்களின் கவனத்தை திருப்பியிருக்கிறது.. மலர் தட்டு ஊர்வலம் முதல் காலை முதல் மதியம் வரை பக்தர்களுக்கு சுடச்சுட பிரியாணி பரிமாறப்பட்டது வரை, மக்களை ஈர்த்து வருகிறது திருமங்கலம் முனியாண்டி கோயில் பொங்கல் விழாக்களின் வீடியோ, போட்டோக்கள் இணையத்திலும் வைரலாகி கொண்டிருக்கிறது.
மதுரை திருமங்கலம் அருகே உள்ளது எஸ்.கோபாலபுரம்.. இந்த கோபாலபுரத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற வடக்கம்பட்டி முனியாண்டி கோயில். இந்த ஊரை சேர்ந்தவர்கள்தான், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, புதுச்சேரியில் புகழ்பெற்ற "முனியாண்டி விலாஸ்" என்ற பெயரில் அசைவ ஓட்டலை நடத்தி வருகிறார்கள். இந்தக் கோயிலின் பெயரில்தான், அனைத்து முனியாண்டி விலாஸ் ஓட்டல்களும் நடத்தப்பட்டும் வருகின்றன.

இவர்கள் அனைவரும் வருடா வருடம் கோபாலபுரம் முனியாண்டி சாமி கோவிலில் பொங்கல் வைப்பது வழக்கமாகும்.. குறிப்பாக ஒவ்வொரு வருடமும் மாட்டுப் பொங்கல் தினத்தன்று, கோபாலபுரம் முனியாண்டி கோயிலில் சுவாமிக்கு சிறப்பு பூஜையுடன் அசைவ உணவுப் பரிமாறும் அசைவ உணவுத் திருவிழா நடத்துவார்கள்..
அசைவ அன்னதானம்: இந்த அன்னதான விழாவில், தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் திரண்டு கலந்து கொள்வார்கள்.. இவர்களுடன், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மும்பை, புதுச்சேரி, மலேசியா, துபாய் என பல்வேறு வெளிநாடுகளிலிருந்து, மதுரை முனியாண்டி விலாஸ் ஓட்டல் உரிமையாளர்கள் பலரும் குடும்பத்துடன் ஆர்வமாக பங்கேற்பார்கள்.
அதுமட்டுமல்ல, தங்களது ஓட்டலின் தினசரி முதல் வருவாயை உண்டியலில் சேகரித்து, அதனை இந்த திருவிழா செலவுக்கு பயன்படுத்துவார்களாம். தங்களது தொழில் சிறப்பாக நடைபெறவும், மக்கள் மகிழ்ச்சியுடன் வாழவும் இந்த திருவிழாவை தொடர்ந்து சிறப்பாக நடத்தி வருவதாகவும் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.
கொடியேற்றம்: அந்தவகையில், இந்த வருடத்தின் கோபாலபுரம் முனியாண்டி சாமி கோவலில் 62-வது பொங்கல் திருவிழா மற்றும் அசைவ அன்னதான விழா கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று பொங்கல் விழா நடைபெற்றது. தாம்பூல தட்டில் தேங்காய், பூ, பழம் வைத்து வீட்டிலிருந்து ஊர்வலமாக கோவில் நோக்கி வந்தார்கள்.. இந்த மலர் தட்டு ஊர்வலத்தின் முன்பு ஏராளமான சிறுவர்கள், பெரியவர்கள் சிலம்பம் சுற்றியபடி வந்தனர்.
இதனையொட்டி காலை 250 பெண்கள் பால்குடம் எடுத்து கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து முனியாண்டி சாமிக்கு குடம்குடமாக அபிஷேகம் செய்தார்கள். இதைத்தொடர்ந்து பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்திய 100 ஆட்டு கிடாய்கள், 150 கோழிகளை கொண்டு கமகம அசைவ அன்னதானம் தயாரிக்கப்பட்டது.
60 மூட்டைகளில் வந்திறங்கிய அரிசியில் அசைவ உணவு மணக்க மணக்க தயாரானது.. இந்த உணவு மதியம் முதல் இரவு வரையில் திருவிழாவிற்கு வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும் அள்ளி அள்ளி வழங்கப்பட்டது.
பங்கேற்பு: இந்த பொங்கல் திருவிழாவின் அசைவ அன்னதானத்தில், கோபாலபுரம், செங்கபடை, புதுப்பட்டி, குன்னத்தூர், திருமங்கலம், டி.கல்லுப்பட்டி, திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 10000-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு சாப்பிட்டனர். இந்த நிகழ்வுதான் இணையத்திலும் வைரலாகி கொண்டிருக்கிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications