ஸ்தம்பித்தது மதுரை.. விஜய் மவுசு ஏறுது.. திமுக இப்பவே பயந்தால் எப்படி? வந்தாச்சு எம்ஜிஆர் 2: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

மதுரை: "1967-ல் ஏற்பட்ட மாற்றம் 1977-ல் எற்பட்ட மாற்றம் போல 2026-ல் மாற்றம் ஏற்படும் என்று தீர்க்கதரிசி போல விஜய் சொல்லியிருக்கிறார்.. விஜய் மீது தனிநபர் தாக்குவது, எதிர்விமர்சனங்கள் செய்வது, சோஷியல் மீடியாவில் அசிங்கமாக பேச வைப்பது, இப்படி செய்து கொண்டிருந்தால், விஜய்க்கான சப்போர்ட் அதிகரிக்கவே செய்யும்" என்று அரசியல் விமர்சகர் மதிவாணன் கருத்து தெரிவித்துள்ளார்.

Realone Media என்ற யூடியுப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள அரசியல் விமர்சகர் மதிவாணன், சீப்பை ஒளித்து வைத்து கொண்டால், திருமணம் நின்றுவிடுமா? கோவையில் கடந்த வாரம் தவெக பூத் கமிட்டி கருத்தரங்கிற்காக விஜய் சென்றார்.. அது ஒன்றும் திட்டமிட்டது கிடையாது, மக்கள் தன்னெழுச்சியாகவே பல்லாயிரக்கணக்கில் குவிந்தனர். .

Madurai Vijay DMK

வேறு வழியின்றி ரோடு ஷோ நடத்த வேண்டிய கட்டாயம் விஜய்க்கு ஏற்பட்டது. அதேபோல 2வது நாளும் கட்டுக்கடங்காத கூட்டம் திரண்டுவிட்டது... உடனே புலியை பார்த்து பூனை சூடு போட்டு கொண்டதுபோல, உதயநிதியும் ரோடு ஷோ நடத்தினார். இதற்கு 40 அரசாங்க பேருந்துகளில் மக்களை கொண்டுவந்தும்கூட, மலைக்கும், மடுவுக்குமான வித்தியாசத்தைதான் கூட்டத்தில் காண முடிந்தது.

அடுத்த எம்ஜிஆர்

ஆட்சியாளர்களுக்கு கிலி பிடித்துவிட்டது.. இன்று மாலை 4 மணிக்குதான் ஷூட்டிங் செல்கிறார் விஜய். இது கட்சி சம்பந்தமான நிகழ்ச்சியும் கிடையாது. ஆனால், தமிழக அரசியல், இன்றைக்கு விஜய் என்ற தனிநபரை நோக்கி நகர ஆரம்பித்துவிட்டதற்கு உதாரணம்தான், மதுரை காவல்துறையின் இன்றைய அறிவிப்பாகும்.

ஷூட்டிங்குக்காக மதுரை வந்து, கொடைக்கானல் செல்கிறார் விஜய்.. இதற்காக இன்று அதிகாலையே பெண்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பு மக்களும் விஜய்யை காண குவிந்துவிட்டனர்.

உடனே ரோடு ஷோவுக்கு அனுமதி தர மாட்டேன் என்கிறார்கள்.. இவர்களிடம் அனுமதி யார் கேட்டார்கள்? அப்படியே அனுமதி கேட்டாலும் இவர்கள் தந்துவிடுவார்களா? எம்ஜிஆருக்கும் அன்று இப்படித்தான் நடந்தது. அதிமுகவை ஆரம்பித்தபோது, எம்ஜிஆருக்கு எதிராக கருணாநிதி செய்யாத குறுக்கீடுகள் கிடையாது. எம்ஜிஆருக்கு பிறகு ஒரு அரசியல் சக்தியாக விஜய் உருவாகியிருக்கிறார். அணைகள் போட்டு அலைகடலை தடுக்க முடியாது.

அடக்குமுறை, ஒடுக்குமுறை

அரசாங்கத்தின் அடக்குமுறை, ஒடுக்குமுறை, ஜனநாயகத்துக்கு எதிரான நடவடிக்கை என எடுக்க, எடுக்க திமுகவை ஆதரிக்கணும்னு நினைக்கிறவங்களுக்குகூட மனமாற்றம் ஏற்பட்டுவிடும். பல ஆயிரம் கோடி ஏமாற்றிவிட்டு, ஜெயிலுக்கு போன செந்தில் பாலாஜியை காப்பாற்ற, மந்திரியாக்க துடிக்கிறார்கள், ஆனால், ஒரு தலைவரை பார்க்க மக்கள் கூடினால் நடவடிக்கையா? இது செல்லுபடியாகாது..

விஜய் மீது தனிநபர் தாக்குவது, எதிர்விமர்சனங்கள் செய்வது, சோஷியல் மீடியாவில் அசிங்கமாக பேச வைப்பது, இப்படி செய்து கொண்டிருந்தால், விஜய்க்கான சப்போர்ட் அதிகரிக்கவே செய்யும்.

விஜய்க்கான ஆதரவு பெருகுவதால், ஆட்சியாளர்கள் அச்சப்பட்டுள்ளார்கள்.. ஆனால், இது தொடரும்.. இப்பவே ஆட்சியாளர்கள் இப்படியென்றால், இனிமேல் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள போனால் என்ன ஆகும்? தடைக்கல்லை படிக்கல்லாக அவர் மாற்றிக் கொண்டே போவார்.

மிரட்டக்கூடாது

இன்று ஷூட்டிங்குக்கு விஜய் செல்வதால், அவரை பார்க்க மக்கள் திரள்கிறார்கள்.. இதுக்கு என்ன செய்யறது? மதுரையில் ரோடு ரோஷ-க்கு அனுமதி தராவிட்டால், சூரியன் உதிக்காதா? இது மக்களுக்கான அரசுதானே?

மதுரையில் கூட்டம் திரண்டால், அதை காவல்துறை ஒழுங்குப்படுத்தலாம்.. கூட்டத்தை கட்டுப்படுத்தலாம். சட்டம் ஒழுங்கை பாதுகாக்கலாம். கலவரம் செய்தாலோ அல்லது பொது சொத்தை சேதப்படுத்தினாலோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். அதுக்காக மிரட்டக்கூடாது. ஆட்சியாளர்களுக்கு சேவை செய்யும் துறையாக காவல்துறை மாறுகிறது" என்று குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+