நைட் ஷோ பார்த்துவிட்டு வந்த பெண்ணை.. கடத்தி சென்று பலாத்காரம்.. கான்ஸ்டபிள் முருகன் கைது.. பின்னணி
மதுரையில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்த ஏட்டு கைதானார்
சென்னை: இளம்பெண்ணை பலாத்காரம் செய்த கான்ஸ்டபிள் முருகனை போலீசார் கைது செய்துள்ளனர்.
Recommended Video
மதுரை மாவட்டம் வில்லாபுரம் பகுதியில் உள்ள பிளாஸ்டிக் பைக் கடையில் வேலை பார்த்து வருகிறார் அந்த பெண்.. 28 வயதாகிறது..
இவர் கடந்த சனிக்கிழமை, தன்னுடைய ஓனர் மகேஷ்குமார் என்பவருடன் தியேட்டரில் நைட் ஷோ பார்த்துவிட்டு, பைக்கில் வந்து கொண்டிருந்தார். அப்போது, ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த திலகர் திடல் காவல் நிலைய கான்ஸ்டபிள் முருகன் என்பவர் அவர்களை வழிமறித்து விசாரித்துள்ளார்..

மகேஷ்
''நைட் நேரத்தில் எங்கே போறீங்க? இருவரும் தம்பதியா? என்று விசாரித்துள்ளதாக கூறப்படுகிறது. அப்போது அவர்கள் தாங்கள் தம்பதி இல்லை என்று சொல்லி உள்ளனர்.. உடனே, நைட் நேரத்தில் சுற்றி திரிவதை அவரவர் குடும்பங்களுக்கு தெரிவிக்க போவதாக மிரட்டி உள்ளார் கான்ஸ்டபிள் முருகன்.. பிறகு, அந்த பெண்ணுடன் வந்த கடை ஓனரிடம் இருந்து டெபிட் கார்டை பறித்துக்கொண்டு ஏடிஎம் மூலம் 40,000 ரூபாயை எடுத்ததாக கூறப்படுகிறது.

தயக்கம்
மேலும், பெண்ணையும் பத்திரமாக நான் வீட்டில் விடுகிறேன் என்று சொல்லி உள்ளார்.. கடை ஓனர் தயங்கியபடியே நிற்கவும், அங்கிருந்து கிளம்பும்படியும் மிரட்டி அனுப்பியுள்ளார் கான்ஸ்டபிள்.. இதையடுத்து, அப்பெண்ணை அவர் வீட்டுக்கு அழைத்து செல்லாமல், நேதாஜி ரோட்டில் உள்ள ஒரு லாட்ஜுக்கு கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்... இறுதியில் இதை பற்றி யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டிவிட்டு ஒரு ஆட்டோவில் ஏற்றி வீட்டிற்கும் அனுப்பி வைத்துள்ளார்..

அதிர்ச்சி
அழுதுகொண்டே வீட்டுக்கு வந்த அந்த பெண், போலீஸ்காரர் தன்னை கடத்தி சென்று பலாத்காரம் செய்ததை வீட்டில் இருப்பவர்களிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ந்து போன குடும்பத்தினர், திடீர்நகர் போலீசில் இதை பற்றி புகார் தந்தனர்.. அந்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சம்மந்தப்பட்ட நபரை பிடித்து விசாரித்தனர்... அப்போதுதான், அவர் திடல் ஸ்டேஷனில் வேலை பார்க்கும் கான்ஸ்டபிள் முருகன் என்பதே அவர்களுக்கு விசாரணையில் தெரியவந்தது.. அதை தொடர்ந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்...

முருகன்
அவரை கைது செய்த போலீசார், முருகன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.. சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி. கண்காணிப்பு பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தபோது, போலீஸ்காரர் முருகன் பெண்ணை மோட்டார் சைக்கிளில் அழைத்து செல்வது, விடுதிக்குள் செல்வது உறுதியானது. மேலும் மகேஷ்குமாரின் ஏடிஎம் கார்டு மூலம் ரூ.30 ஆயிரத்தை போலீஸ்காரர் முருகன் எடுத்து இருப்பதும் தெரியவந்தது. இப்போது கான்ஸ்டபிள் முருகனை போலீசார் கைது செய்துள்ளனர்.. அவரிடம் தொடர்ந்து விசாரணையும் நடத்தி வருகின்றனர்..!

வாக்குமூலம்
முதலில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் தந்த இந்த புகாரை போலீசார் நம்பவே இல்லையாம்.. பிறகு திலகர் திடல் உதவி கமிஷனர் ரவீந்திரநாத், பாதிக்கப்பட்ட அந்த பெண்ணிடமே நேரிடையாக வாக்குமூலத்தை பெற்று கமிஷனரிடம் தந்துள்ளார்.. அதற்கு பிறகு மகளிர் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் தீபா தலைமையில்தான் இந்த கைது நடவடிக்கை நடந்துள்ளது..

கோரிக்கை
மதுரையில் இரவில் சினிமா பார்த்துவிட்டு திரும்பும் நபர்களை போலீசார், விசாரணை, என்ற பெயரில் இரவில் மிரட்டி பணம் பறிப்பதாகவும், இரவில் பெண்களுடன் செல்லும் நபர்களை பொய்வழக்கு பதிவு செய்வதாக கூறி பணத்தை பறிப்பதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வருகின்றன. எனவே, இதற்கும் தீர்வு வேண்டும் என்று கோரிக்கைகள் வர ஆரம்பித்துள்ளன.

புகார்
இப்போது கைதாகி உள்ள முருகன் இதற்கு முன்பும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.. திடீர் நகர் ஸ்டேஷனில் பணியாற்றியபோது, மது அருந்திவிட்டு, அங்கிருந்த ஒரு கடையில் சென்று தகராறு செய்திருக்கிறார்.. அதற்கு பிறகுதான் திலகர் திடல் ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டார் என்று தகவல்கள் கசிந்து வருகின்றன.. இதுபோல வேறு எங்காவது பிரச்சனை செய்துள்ளாரா? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications