மிரட்டி மிரட்டியே.. 12 முதல் 16 வயசு சிறுமிகளை சீரழித்த ஆதிசிவன்.. தனியார் காப்பகத்தில் அக்கிரமம்!
4 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை தந்த காப்பக உரிமையாளர் கைது
Recommended Video
மதுரை: 12 வயசு குழந்தை உட்பட 4 சிறுமிகளுக்கு தனியார் காப்பகத்தில் பாலியல் தொல்லை தந்த டிரஸ்ட் உரிமையாளரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட காப்பகத்துக்கும் அதிரடியாக சீல் வைக்கப்பட்டது!
மதுரை மாவட்டம் சமயநல்லூர் பகுதியில் மாசா அறக்கட்டளை சார்பில் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில் 25-க்கும் மேற்பட்ட சிறுவர் -சிறுமிகள் தங்கி இருக்கிறார்கள்.
கருமாத்தூரை சேர்ந்த ஞானபிரகாசம், ஆதிசிவன் ஆகியோர்தான் இந்த காப்பகத்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ஆதிசிவனுக்கு வயசு 41 ஆகிறது.

திடீர் ஆய்வு
இந்த காப்பகத்தில் உள்ள சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை தரப்படுவதாக மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்துக்கு புகார்கள் வந்தன. இதன் அடிப்படையில், மாவட்ட குழந்தைகள் நல கமிட்டி உறுப்பினர் சண்முகம், சம்பந்தப்பட்ட காப்பகத்திற்குள் நுழைந்து அதிரடி ஆய்வு நடத்தினார். அங்கு தங்கி இருக்கும் குழந்தைகளை அழைத்து நேரடியாகவே விசாரணை நடத்தினார்

கதறி அழுதனர்
அப்போது சிறுமிகள் கதறி கதறி அழ ஆரம்பித்தனர். இதில், 4 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது. இதற்கெல்லாம் காரணம், ஆதிசிவன்தான் என்றும், அவர்தான் ஆபீசில் வைத்து தங்களை மிரட்டி மிரட்டி பலாத்காரம் செய்ததாகவும் சிறுமிகள் கண்ணீருடன் கூறினார்கள். மேலும் இதை வெளியே சொன்னால் கொலை செய்வதாக ஆதிசிவன் மிரட்டியதாகவும் சிறுமிகள் தெரிவித்தனர்.

காப்பகங்கள்
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த குழந்தைகள் நல கமிட்டி உறுப்பினர் சண்முகம், பாதிக்கப்பட்ட 4 சிறுமிகளையும் மதுரை முத்துப்பட்டியில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தார். அங்குள்ள சிறுவர் சிறுமிகள் தொடர்ந்து தங்கினால் ஆபத்து என்று உணர்ந்த அவர், அவர்கள் அனைவரையும் வேறு காப்பகங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்து வருகிறார்.

பரபரப்பு
மேலும் 4 சிறுமிகளுக்கு இழைத்த அநீதி குறித்து, சண்முகம் சமயநல்லூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் எடுக்கவும், போலீசார் விசாரணை நடத்தி ஆதிசிவனை போக்சோவில் அதிரடியாக கைது செய்தனர். இதையடுத்து, சம்பந்தப்பட்ட காப்பகத்திற்கும் சீல் வைக்கப்பட்டதுடன், காப்பகத்தின் இன்னொரு நிர்வாகியான ஞானபிரகாசிடம் விசாரணை நடந்து வருகிறது. காப்பகத்தில் சிறுமிகள் நாசம் செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications