மதுரை அருகே கொரோனாவிற்கு பாம்புக்கறி சாப்பிட்ட வடிவேலு - அபராதம் விதித்த வனத்துறை அதிகாரிகள்

மதுரை அருகே கொரோனா நோய்க்கு பாம்புகறி சாப்பிட்டால் சரியாகிவிடும் என்று கூறி லைவ் ஆக சாப்பிட்ட நபரை பிடித்து வனத்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

மதுரை: பாம்புக்கறி சாப்பிட்டால் கொரோனா வராது என்றும் இது அரிதான மருந்து என்றும் கூறி பாம்பை ஒருவர் கடித்து தின்னும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. பாம்பை கடித்து சாப்பிட்ட நபரை பிடித்த வனத்துறையினர் அவருக்கு 7,500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

Recommended Video

    மதுரை அருகே கொரோனாவிற்கு பாம்புக்கறி சாப்பிட்ட வடிவேலு - அபராதம் விதித்த வனத்துறை அதிகாரிகள்

    மதுரை மாவட்டம் பெருமாள்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவேலு. விவசாயக் கூலியான இவர் அப்பகுதியில் வயல்வெளியில் சுற்றி திரிந்த பாம்பு ஒன்றினை உயிருடன் பிடித்துள்ளார். கொரோனா நோய்க்கு பாம்புக்கறி அரிய மருந்து எனக் கூறிக் கொண்டே, அதனை வாயில் வைத்து கடித்து சுவைத்து சாப்பிட்டார். அதனை மற்றொரு நபர் வீடியோ எடுத்துள்ளார்.

    Man ate snake meat to Corona near Madurai - Forest officials fined

    கொரோனாவுக்காக இந்த பாம்பை நான் கடித்து சாப்பிடுகிறேன் என்று கூறிக்கொண்டே முழுதாக அதனை கடித்து சாப்பிட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால் பரபரப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து, பாம்பை கடித்து தின்ற வடிவேலுவை கைது செய்த வனத்துறையினர் ரூ.7500 அபராதம் விதித்தனர்.

    கொரோனாவால் உலகமே திணறி வருகிறது. பல்வேறு மருத்துவ நிபுணர்களும், மருத்துவ நிறுவனங்களும் புதிய புதிய மருந்துகளை கண்டறியும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். எதை தின்றால் கொரோனா குணமாகும் என்று மக்கள் பலவித மருந்துகளை தேடத் தொடங்கியுள்ளனர்.

    புது புது வைத்தியங்கள், மருந்துகள் வாட்ஸ் அப்பில் உலா வருகின்றன. இந்தநிலையில் கொரோனா நோய்க்கு அரிதான மருந்து என கூறி உயிருள்ள பாம்பை ஒருவர் கடித்து தின்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+