மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மீட்பு பணியில் ஈடுபட்ட மணிகண்டனின் போர்வெல் ரோபாட்டிக்.. மீட்க முடியாதது ஏன்?

Google Oneindia Tamil News

Recommended Video

    சுஜித்தை மீட்க பயன்படுத்த பட்ட மணிகண்டனின் போர்வெல் ரோபாட்டிக் !

    மதுரை: திருச்சி மணப்பாறையில் ஆழ்துளை கிணற்றில் சிக்கிக் கொண்ட 2 வயது குழந்தை சுஜித்தை மீட்க மணிகண்டனின் போர்வெல் ரோபாட்டிக்கையும் பயன்படுத்தி விட்டனர். எனினும் மிக சிறிய துளை என்பதால் இந்த ரோபாட்டால் உள்ளே செல்ல முடியவில்லை.

    மதுரையை சேர்ந்தவர் மணிகண்டன். 46 வயதான இவர் பிளம்பராக பணிபுரிந்து வந்தார். ஆழ்துளை கிணறுகளில் சிக்கி குழந்தைகள் இறக்கும் நிகழ்வுகளை கண்ட இவர் குழந்தைகளை மீட்கும் ரோபாட்டை கடந்த 2014-இல் கண்டுபிடித்தார்.

    இவரது ரோபாட்டிக்கை பயன்படுத்தி கடந்த 2014-ஆம் ஆண்டு சங்கரன்கோவில் அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது ஹர்ஷன் மீட்கப்பட்டார். அது போல் திருவண்ணாமலையை சேர்ந்த ஒன்றரை வயது சுஜித்தை மீட்கவும் இவரது ரோபாட்டிக் இயந்திரம் பயன்படுத்தப்பட்டது.

     70 அடியிலிருந்து 80 அடிக்கு போய் விட்ட சுஜித்.. மீட்பு பணிகள் தீவிரம்.. பிரார்த்தனைகள் அதிகரிப்பு 70 அடியிலிருந்து 80 அடிக்கு போய் விட்ட சுஜித்.. மீட்பு பணிகள் தீவிரம்.. பிரார்த்தனைகள் அதிகரிப்பு

    5 கிலோ எடை

    5 கிலோ எடை

    ஆனால் துரதிருஷ்டவசமாக குழந்தையின் கைகளை ரோபாட் இயந்திரத்தால் இறுக்கி பிடிக்க முடியவில்லை. ஏனெனில் அதற்கேற்ப குழந்தை விழவில்லை. 4 அடி உயரம் கொண்ட இந்த ரோபாட்டிக் வெறும் 5 கிலோ எடை கொண்டதாகும்.

    50 கிலோ எடை

    50 கிலோ எடை

    இதன் பேட்டரி டிசி மோட்டாரை கொண்டு இயங்கி வருகிறது. இந்த இயந்திரத்தால் 1000 அடி ஆழம் வரை செல்லலாம். 50 கிலோ எடையை தூக்க முடியும். அகச்சிவப்பு கதிர்களை கொண்ட சிறிய கேமராவும் இதில் பொருத்தப்பட்டுள்ளது.

    முயற்சிகள்

    முயற்சிகள்

    இதனுடன் இணைக்கப்பட்ட சிறிய டிவியின் உதவியால் குழந்தையின் நடவடிக்கைகளை காணலாம். இதில் கை போன்ற ஒரு இயந்திரம் இருப்பதால் துளையினுள் சென்று குழந்தையை அலேக்காக தூக் இத்தகைய இயந்திரத்தை கொண்டு திருச்சி மணப்பாறையில் நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

    விரிவுரையாளர்

    விரிவுரையாளர்

    ஆனால் குழந்தை விழுந்தது மிகவும் குறுகலான துளையாகும். இதனுள் ரோபாட்டிக்கால் நுழைய முடியவில்லை. இதனால் இந்த முயற்சி கைவிடப்பட்டது. இந்த ரோபாட்டிக்கை கண்டுபிடித்த மணிகண்டன் டிவிஎஸ் சமுதாயக் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார்.

    English summary
    Rescue team has used Manikandan's borewell robotic to rescue the child Sujith who fell into the borewell near Manapparai, Trichy.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X