துரை வைகோ எப்பவும் தனி ரூட்தான்! இந்தியா கூட்டணி அமைச்சரவையில் மதிமுக பங்கேற்காதாம்!
மதுரை: லோக்சபா தேர்தலில் 'இந்தியா' கூட்டணிவென்று மத்தியில் ஆட்சியை அமைக்கும்; அப்படி இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தாலும் மத்திய அமைச்சரவையில் மதிமுக இடம் பெறாது என அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் திருச்சி தொகுதியில் போட்டியிட்டவர் துரை வைகோ. திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட முடியாது என பொது மேடையில் ஆவேசமாகவும் அழுதபடியும் துரை வைகோ பேசியது பெரும் சர்ச்சையானது. பின்னர் திடீரென தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையுடன் துரை வைகோ பேசியது அடுத்த சர்ச்சையானது. இதனால் திமுக கூட்டணியில் மதிமுகவின் நிலை என்ன என்கிற கேள்வி எழுந்தது.

இதனிடையே மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வீட்டில் தடுமாறி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வைகோ அறுவை சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பி உள்ளார்.
மேலும் லோக்சபா தேர்தல் எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகி தமிழ்நாட்டில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றும் என கணித்திருக்கின்றன. திருச்சியில் மதிமுக வேட்பாளர் துரை வைகோ வெல்வார் எனவும் கணித்துள்ளன.
இந்த நிலையில் மதுரை அருகே அலங்காநல்லூரில் செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ, எக்ஸிட் போல் முடிவுகள்தான் தேர்தல் களத்தை வெளிப்படுத்துகின்றன. மக்கள் மனதில் என்ன இருந்தது என்பதை பார்த்துள்ளோம். தமிழ்நாட்டு மக்கள் எண்ணங்களை வெளிப்படுத்தும் வகையில் எக்ஸிட் போல் முடிவுகள் உள்ளன.
மத்தியில் இந்தியா கூட்டணிதான் ஆட்சி அமைக்கும். இந்தியா கூட்டணி 350 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். இன்னும் 48 மணிநேரத்தில் மக்களுக்கு அனைத்தும் தெரிய வரும். மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சிதான் என்கிற கணிப்புகளை நம்ப வேண்டாம்.
மேலும் மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தாலும் அமைச்சரவையில் மதிமுக நிச்சயம் பங்கேற்காது. இவ்வாறு துரை வைகோ கூறினார்.
அத்துடன் அண்ணாமலை தொடக்கம் முதலே தவறான கருத்துக்களையும் வதந்திகளையும் பரப்பி வருகிறார். தேர்தல் முடிவுகளுக்கு பின்பு இந்தியா கூட்டணி காணாமல் போகும் என அண்ணாமலை பேசியிருப்பது சர்வாதிகாரப் பேச்சு. அதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என்றார் துரை வைகோ.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications